வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உழைத்து சேர்த்த 15 லட்சத்தை மென்று தின்ற ஆடு.. கோபத்தில் வெட்டி பிரியாணி செய்த குடும்பம்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 08, 2018

உழைத்து சேர்த்த 15 லட்சத்தை மென்று தின்ற ஆடு.. கோபத்தில் வெட்டி பிரியாணி செய்த குடும்பம்!



இந்த ஆடுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? கண்ணில எதை பார்த்தாலும் மேய ஆரம்பிச்சா... கடைசியில பிரியாணி ஆக வேண்டியதுதான்! மத்திய செர்பியாவின் அரன்ஜெலோவாக் அருகே ரனிலோவிக் என்ற கிராமம் உள்ளது. 

 
இக்கிராமத்தில் விவசாயி ஒருவர் நிலம் வாங்க முடிவு செய்து, அதற்காக பணத்தை சேர்க்க ஆரம்பித்தார். ரொம்பவும் வறுமையான குடும்பம் என்பதால், கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்க்க தொடங்கினார். கடைசியில் 16 லட்சம் ரூபாய் சேர்த்து விட்டார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

வயலுக்கு சென்றார்கள் 
இதைவைத்து 10 ஹெக்டர் நிலம் வாங்கவும் பிளான் குடும்பத்துடன் சேர்ந்து பிளான் பண்ணினர். எனவே பணத்தை எடுத்து வந்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடும்பத்தில் எல்லோரும் வயலுக்கு சென்றுவிட்டார்கள். போகும்போது கதவை மூடாமல் திறந்து விட்டு போய்விட்டிருக்கிறார்கள்.


பணம் இல்லை  
கதவு திறந்து கிடக்கவும், அவர் வீட்டில் வளர்ந்து வந்த ஒரு ஆடு, உள்ளுக்குள் நுழைந்து டேபிள் மேல் இருந்த பணத்தை தின்றுவிட்டது. வயலிலிருந்து குடும்பத்தினர் வீடு திரும்பி வந்து பார்த்தால், பணத்தை காணோம்.

ஜீரணிக்க முடியவில்லை 
பிறகு டேபிள் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டின் வாயில், கொஞ்சம் பிட்டு பிட்டாக பணத்துகள்கள் ஒட்டிக் கொண்டிருந்ததை பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியாகி நின்றார்கள். 16 லட்சம் ரூபாயையும் ஆடு மென்று தின்றதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.


சமைத்து சாப்பிட்டனர் 
அதனால் ஆத்திரத்தில் அந்த ஆட்டை கொன்று குடும்பமே கோபத்துடன் சமைத்து சாப்பிட்டது. ஆட்டுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் அவர்களால் உழைத்து சம்பாதித்த அந்த 16 லட்ச ரூபாயை மறக்கவே முடியாமல் இன்னமும் சோகத்தில் உள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment