வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: விமானத்தில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம்.. அமெரிக்காவில் தமிழருக்கு 9 வருடம் ஜெயில்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 14, 2018

விமானத்தில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம்.. அமெரிக்காவில் தமிழருக்கு 9 வருடம் ஜெயில்



விமானத்தில் பெண் பயணியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு 9 வருடம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


தமிழகத்தைச் சேர்ந்தவர் பிரபு ராமமூர்த்தி. இவர் கடந்த 2015ம் ஆண்டு ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்கா சென்று அங்கு ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜனவரி 3ம் தேதி லாஸ் விகாஸ் நகரில் இருந்து டெட்ராய்டு நகருக்கு தனது மனைவியுடன் விமானத்தில் சென்றுள்ளார். அப்போது ஓடும் விமானத்தில் பிரபுவுக்கு பக்கத்தில் ஒரு பெண் பயணி தூங்கிக்கொண்டு வந்துள்ளார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

தூங்கிய பெண்ணிடம் சில்மிஷம் 
அப்போது பிரபு அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தூக்க கலக்கத்தில் எழுந்து பார்த்த அந்த பெண், தன்னுடைய பேண்ட் கழற்றப்பட்டு, பேண்டின் ஜிப்பும் கழற்றப்பட்டு இருப்பதை பார்த்து கூச்சலிட்டார். விமானத்தில் உள்ளவர்கள் வந்து விசாரித்ததில் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.


அமெரிக்க போலீசாரால் கைது 
இதையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் வைத்து பிரபுவை கைது செய்த அமெரிக்க எப்பிஐ போலீசார், அவர் மீது அமெரிக்காவின் டெட்ராய்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் பிரபு ராமமூர்த்தி குற்றவாளி என நீதிபதி டெரான்ஸ் பெர்க் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார்.

ஆங்கில அறிவு இல்லை 
இந்நிலையில் நேற்று தண்டனை விவரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிடுகையில், அதிநவீன தகவல் தொழில்நுட்ப வேலைக்காக அமெரிக்கா வந்துள்ள பிரபு ராமமூர்த்திக்கு போதிய ஆங்கில மொழி திறமை இல்லை என்றும் குற்றச்சாட்டினார். மேலும் பிரபு மீது பரிதாபப்பட்டு, நீதிமன்றம் கருணையே காட்டக்கூடாது என்றும் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாதிட்டார்.


தீர்ப்பை அறிவித்த நீதிபதி
இதையடுத்து பிரபு ராமமூர்த்திக்கான தண்டனை விவரத்தை நீதிபதி டெரான்ஸ் பெர்க் வியாழக்கிழமை அறிவித்தார். இதன் படி ஓடும் விமானத்தில் பெண்ணிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தலை அளித்த பிரபு ராமமூர்த்திக்கு 9 வருடம் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பின் மூலம் விமானத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையும் என நீதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

கேவலமான காரியம் 
 கூறுகையில், "விமானத்தில் பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியம். தங்கள் நிலையை மறந்து தூங்குபவர்களிடம் அட்வான்டேஜாக எடுத்துக்கொண்டு. இது போன்ற மோசமான பழக்கங்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது.ஈடுபடுவதையும் அனுமதிக்க மாட்டோம். இந்த புகாரை தைரியமாக வெளியே சொல்லி, புகார் கொடுத்த பெண்ணை பாராட்டுகிறோம்" என்றார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment