வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இவரின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 08, 2018

இவரின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.!



முகமது ஆடில் அஸாஹார் ஜஹரின் 16 வயது சிறுவன், தனது படுக்கையின் அருகில் காதுகள் எரிந்து தரையில் பிணமாக கிடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.



முகமத் இரவு தூங்கும் பொழுது காதில் ஹெட்போன்ஸ் அணிந்து மொபைல் போனை சார்ஜில் வைத்ததினால் தான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதென்று தற்பொழுது தெரியவந்துள்ளது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார் 
 உறங்கும் பொழுது தலையணை அருகில் மொபைல் போனை சார்ஜ் போட்டுக்கொண்டு பயன்படுத்தியுள்ளார். காதில் ஹெட்போன்ஸ் மாட்டிக்கொண்டு பாடல் கேட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.


காதுகள் கருகி  
காலை முகமதின் அறைக்குள் நுழைந்த அவரின் தாய், முகமத் தரையில் காதுகள் கருகி இரத்தம் கசிந்த நிலையில் தரையில் அசைவுகள் இல்லாமல் கிடந்த முகம்மதை பார்த்து அதிர்ந்து போனார். காரணம் ஏதும் தெரியாமல் உடனடியாக மருத்துவமனைக்கு முகம்மதை கொண்டு சென்றுள்ளனர்.

ஸ்மார்ட்போன் தான் காரணம் உறுதி:
 மருத்தவ பரிசோதனையில் அவர் உயிர் இழந்துவிட்டார் எனவும், உடலில் வேறு ஏதும் காயங்கள் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மின்சாரம் தாக்கி தன உயிரிழந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


சார்ஜிங் இல் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தாதீர்கள்: 
ஸ்மார்ட்போன் பயனர்கள் கண்டிப்பாக அவர்களின் போன்களை உறங்கும் பொழுது அருகில் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும், சார்ஜிங் இல் உள்ள பொழுது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுரைக்கப்படுகிறது.

உங்களுக்கான ஹெட்போன்களில் எது நல்லது.? எது மிகவும் தீங்கானது.?  
மிகவும் 'டிரெண்டான' மற்றும் மிகவும் சிறிய கருவியான ஹெட்போன்கள் உங்கள் காதுகளுக்கு இசையை மட்டுமே வழங்குகிறது என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமைக்கு அடையாளம். எப்போதும் கைகளில் மொபைல்போன், காதுகளில் ஹெட்செட் என திரியும் நம்மில் பலருக்கு மொபைல்போன்களும், ஹெட்போன்களும் உடல் உறுப்புகளில் ஒன்றாகிவிட்டது என்றே சொல்லலாம்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment