வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பிரஸ் மீட்டா? நோ தர முடியாது.. செய்தியாளர்களை பார்த்து தெறித்து ஓடும் பாஜக தலைகள்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 11, 2018

பிரஸ் மீட்டா? நோ தர முடியாது.. செய்தியாளர்களை பார்த்து தெறித்து ஓடும் பாஜக தலைகள்!



5 மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து பாஜக தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்க மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றது. 

 
பாஜக கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் பெரிய தோல்வியை இந்த தேர்தலில் சந்தித்துள்ளது. இந்த தேர்தல் தோல்வி காரணமாக பாஜகவினர் பெரிய அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் அவர்கள் செய்தியாளர்களை சந்திக்க மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

ரத்து செய்யப்பட்டுள்ளது  
இந்த மோசமான தோல்வி காரணமாக பாஜக ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் சந்திப்பு பல ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக தலைவர்கள் தேர்தல் முடிவிற்கு பின் இன்று மதியம் செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் அந்த சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


சந்திக்காமல் சென்ற ராஜ்நாத்  
அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், செய்தியாளர்களை சந்திக்காமல் சென்று உள்ளார். நாடாளுமன்றத்தில் இருந்து அவர் வெளியே வரும் சமயத்தில் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க முயன்றனர். ஆனால் ராஜ்நாத் சிங் அவர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார்.

மோடி சந்திக்கவில்லை 
அதேபோல் பிரதமர் மோடியும் இன்று செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இன்று காலை நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடருக்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். ஆனால் அதில் தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தேர்தல் குறித்து இதில் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.


தமிழிசை பேட்டி
இந்த நிலையில் தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஒரே நபர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மட்டும்தான். ஆனாலும் அவர் ''இது வெற்றிகரமான தோல்வி'' என்று பாஜகவினரையே குழப்பும் வகையில் எதையோ பேசி செய்தியாளர்களை சமாளித்து இருக்கிறார். இவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment