Run World Media: 11/30/18

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 30, 2018

[வேலை வாய்ப்பு] தமிழக அரசில் ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! HL Latest Job News

[வேலை வாய்ப்பு] தமிழக அரசில் ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!தமிழக அரசின் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, தமிழ்நாடு தொழிற்சாலை துணை சேவைகள் துறையில் காலியாக உள்ள 41 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து டிசம்பர் 24க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மொத்த காலியிடங்கள்: 41

பதவி: Principal, Industrial Training Institute / Assistant Director of Training - 09

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

வயதுவரம்பு: குறைந்தபட்சம் 24 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.


பதவி: Assistant Engineer (Industries) - 32

சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500

வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.

தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 

கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150. தேர்வுக்கட்டணம் ரூ.150; இரு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.12.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: முதல் தாள் - 02.03.2019 அன்று காலை 10 முதல் 1 மணி வரையும், இரண்டாம் தாள் மதியம் ரூ.2.30 முதல் 4.30 மணி வரை நடைபெறும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2018


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

18 வயசு மாணவியிடம் பல்பு வாங்கிய டிரம்ப்.. நம்ம ஊர் பொண்ணு! HL18 வயசு மாணவியிடம் பல்பு வாங்கிய டிரம்ப்.. நம்ம ஊர் பொண்ணு!  செய்தியை  முழுமையாக படிக்க இங்கு கிளிக் செய்யவும் [Click Here to read more about this News]பிற செய்திகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்


18 வயசு மாணவியிடம் பல்பு வாங்கிய டிரம்ப்.. நம்ம ஊர் பொண்ணு!ட்ரம்ப் நிலைமை இப்போது இப்படியா ஆகணும்? 18 வயசு மாணவியிடம் ட்வீட் மூலம் பல்ப் வாங்கி உள்ளார் அதிபர் ட்ரம்ப்! அமெரிக்காவில் இப்போது உறைபனி காலம்.

நாடெல்லாம் பனியால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மட்டும் இல்லாமல் வாகனங்கள், கால்நடைகள் என எல்லாமே பனியால் கஷ்டப்பட்டு கிடக்கின்றன. இதற்காக கிட்டத்தட்ட 1600 விமானங்களே ரத்தும் செய்யப்பட்டு விட்டன. இந்த நிலையில், பனிப்பொழிவை நினைத்து அதிக கவலைப்பட்ட ட்ரம்ப் இது சம்பந்தமாக ஒரு ட்வீட் போட்டார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

பனிப்பொழிவு  
அதில், "புவி வெப்பமயமாதலால், புவியில் நிகழ்ந்ததுதான் என்ன? முந்தைய வரலாறுகளை தோற்கடிக்கும் அளவுக்கு இம்முறை இவ்வளவு பனிப்பொழிவு இருக்கிறதே?" என்று பதிவிட்டார்.


54 வயசு சின்னவள் 
அதிபர் ட்ரம்ப்பின் இந்த பதிவிற்கு, 18 வயது பெண் பதிலடி தந்துள்ளார். அந்த பெண் நம் நாடுதான். அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அஸ்தா சர்மா. தனது ட்வீட்டில் அந்த பெண், "உங்களை விட 54 வயது சின்னவள் நான். இப்பதான் உயர்நிலைக் கல்வியை முடித்திருந்தாலும், எனக்கு தெரிந்தவரை பருவகாலநிலையும் சீதோஷ்ணநிலையும் ஒன்றல்ல. இதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

உங்களுக்கு அனுப்புகிறேன் 
வேண்டுமென்றால், நான் படிக்கும் என்சைக்ளோபீடியாவை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு புரியவில்லை என்றால் அந்த புக் படிச்சு தெரிஞ்சுக்கலாம். அந்த புக்கில் இது பத்தின விஷயம் சரியாக சொல்லப்பட்டிருக்கும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த மாணவியின் இந்த ட்வீட்தான் தற்போது வைரலாகி வருகிறது. பார்ப்பவர்கள் எல்லாம் இந்த ட்வீட்டை லைக் செய்து விட்டு போகிறார்கள்.


கேலி கிண்டல் 
மாணவியின் தைரியத்தை நிறைய பேர் பாராட்டி இருக்கிறார்கள். மேலும் சிலர் பருவநிலை மாற்றம் சம்பந்தமாக மாணவி ஆய்வு படிக்க விரும்பினால்கூட அதற்காக தாங்கள் உதவ தயார் என்றும் சொல்லி இருக்கிறார்கள். இந்த சமயத்துல அமெரிக்காவில் பனி பொழியும் என்று உலகத்துக்கே தெரிஞ்ச விஷயத்தக்கு ட்வீட் போட்டு இப்போ சின்ன பிள்ளைகளிடம்கூட கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளார் ட்ரம்ப்!!


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

[வேலை வாய்ப்பு] தமிழ்நாடு தொல்லியல் துறையில் நூலகர் வேலை கடைசி தேதி: 16.12.2018 HL Library Job

[வேலை வாய்ப்பு] தமிழ்நாடு தொல்லியல் துறையில் நூலகர் வேலை கடைசி தேதி: 16.12.2018தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் காலியாக உள்ள நூலகர் பணியிடத்திற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ. 18,500 - 58,600 

தகுதி:

நூலக அறிவியல் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.12.2018 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.02.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.12.2018 அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


கோழி கறி: பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்துஉடல் நலம் காக்க வேண்டும், ஆண்மைக்குறை, குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால் பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


ஆண்மைக்குறை, குழந்தையின்மை... பெருவாரியாகக் காணப்படும் இந்தப் பிரச்னை ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் உணவுப்பழக்க வழக்கங்களைத்தான் மிக முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள், மருத்துவர்கள். அதிலும் குறிப்பாக, விரைவு உணவுகளும் (ஃபாஸ்ட் புட்) மற்றும் பிராய்லர் சிக்கன் உணவுகளைச் சாப்பிடுவதால் இந்தக் குறைபாடு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள்.


கறிக்கோழிகளால் உடல்பருமனில் தொடங்கி மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறை, மாதவிடாய்ச் சிக்கல், புற்றுநோய் என நோய்கள் வரிசைகட்டி நிற்கின்றன. (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

எண்ணி நாற்பதே நாள்களில்  ஒரு கோழிக்குஞ்சு முழு கோழியாகிறது. இதற்கு அந்த கோழிகளின் தீவனத்தில் 12 விதமான ரசாயனங்கள் கலக்கப்படுவது முதல் காரணம். மேலும் சீக்கிரம் வளர வேண்டுமென்பதற்காக ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் ஊசி போடுகிறார்கள். இந்த ஈஸ்ட்ரோஜென் ஊசியானது செல்களை வேகமாக வளர வைத்து கோழியின் எடையை அதிகமாக்கவும் உதவுகிறது. கறிக்கோழிகள் சீக்கிரம் எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஊசியை அளவுக்கு அதிகமாக போட்டுவிடுகிறார்கள்.


அடுத்ததாக அந்தக் கோழிகளுக்கு அளவுக்கு அளவுக்கதிகமாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. ஆன்டிபயாட்டிக் என்பது நோய்களைக் குணப்படுத்தக்கூடியது என்பது நமக்குத்தெரியும்; ஆனால் இந்த கோழிகளுக்கு அதிகமாக ஆன்டிபயாட்டிக் கொடுப்பதால் அவையும் நோய்வாய்ப்பட்டு அவற்றைச் சாப்பிடும் மனிதர்களையும் நோய்வாய்ப்படச் செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை!

நமது உடல் செயல்பாட்டுக்கு ஹார்மோன்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கின்றன. அவை குறைந்தாலும் பிரச்சனைதான்; அளவு கூடினாலும் பிரச்சனைதான். அந்தவகையில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் செலுத்தப்படும் கறிக்கோழிகளைச் சாப்பிடும்போது அவை சமைத்தபிறகு அது நிலைமாறாமல் அப்படியே உடலுக்குள் செல்வதால் ஆண், பெண் இருவருக்கும் பிரச்சனைதான்; குறிப்பாக ஆண்களுக்குத்தான் அதிக பிரச்சனை.
 
மூளையில் உள்ள ஹைப்போதாலமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் தூண்டுதலால் சினைப்பையில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் பெண்கள் பருவமடைய முக்கியக் காரணம். அவை இந்த கறிக்கோழிகளின் உபயத்தால் நம் உடலில் பல மடங்கு அதிகமாகச் செல்வதால்தான் இன்றைக்கு சின்னஞ்சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்கள். ஆக, ஆண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஆண்மையை வளர்ப்பதற்குப் பதிலாக பெண்மைத்தன்மையை ஏற்படுத்துகிறது.

ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் வேலை அதுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் குறிப்பாக, பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்கள் அழித்தொழிக்கப்படுகிறது. கோழிகளின் தசை வளர்ச்சிக்காகச் செலுத்தப்படும் ஊசிகள் உயிரணுக்களை அழிக்கும் ஒரு கருவியாகச் செயல்படுகிறது. அது நம்மில் பலருக்கும் புரிவதில்லை. பிராய்லர் சிக்கனுக்குப் பதிலாக நாட்டுக்கோழிகளைச் சாப்பிடுவது நல்லது. அவற்றைச் சாப்பிடுவதால் ஆண்மைக்குறை ஏற்படுத்துமோ என்று அச்சப்படத்தேவையில்லை.


புழு, பூச்சிகளையும், இலைதழைகளையும் சாப்பிட்டு வளரும் நாட்டுக்கோழிகளைச் சாப்பிடுவதால் எந்தக்கெடுதலும் ஏற்படாது என்பதைப் புரிந்துகொண்டு நாட்டுக்கோழிக்கறியை வாங்கிச் சாப்பிடுவோம், நோய்களிலிருந்து விடுதலை பெறுவோம். ஆண்மைக்குறை ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால் இனி நாட்டுக்கோழிக்கறியையே சாப்பிடுவதே நல்லது. அதேபோல் நாட்டுக்கோழி முட்டைதான் நல்லது. நாட்டுக்கோழியின் முட்டையில் மஞ்சள் கரு அதிகமாக இருக்கும். பொதுவாக முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, பி, இ, டி மற்றும் அமினோ அமிலங்கள், கால்சியம், இரும்புச்சத்து, கொழுப்பு, ஃபோலிக்  அமிலம் மற்றும் பல சத்துகள் நிறைந்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு நாட்டுக் கோழிகளுக்கும் ஹார்மோன் மருந்து செலுத்தி வளர்ப்பதாக செய்தி வருகிறது. எனவே, கவனத்துடன் இருப்பது நல்லது.

கோழிகளின் கால்பகுதியில்தான் கொலஸ்ட்ரால் அதிகமாக சேர்கின்றன. இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதால் அமெரிக்கர்கள் கோழியின் கால்களை வெறும் கழிவுப்பொருளாகவே கருதி அவற்றைச் சாப்பிடுவதில்லை. ஆனால், நாம் விரும்பி வாங்கி ருசிப்பது `லெக் பீஸ்' எனப்படும் கோழிக்கால்களைத்தான்! 
 


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

.

நீ என்ன சாதி?.. செருப்படி பதில் கொடுத்த பிக் பாஸ் ரித்விகா HL Rethiveka Big Boss

நீ என்ன சாதி?.. செருப்படி பதில் கொடுத்த பிக் பாஸ் ரித்விகா"நீ என்ன சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை ரித்விகா! ரித்விகா!! ஆடம்பரம் இல்லாத எளிய முகம். இவரை பார்க்கும்போதெல்லாம் நம்ம வீட்டு பெண்ணை பார்ப்பது போன்றே ஒரு உணர்வு!சில படங்களே நடித்தாலும் அத்தனையும் பேசப்பட்ட படங்களே. 

எனினும் நடிகையாகவே அறியப்பட்ட ரித்விகா, பிக்பாஸ் மூலம் அதிக புகழுக்கு சென்றார். இதற்கு காரணம், தன் யதார்த்த இயல்பும், யாரையும் நோகடிக்காத பண்பும், விட்டுக்கொடுத்துப் போன பண்பும்தான்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

அவமானங்கள்  
நிறைய இன ரீதியான அவமானங்களையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகா சந்திக்க தவறவில்லை. ஆனாலும் பொறுமை என்ற ஆயுதத்தை கடைசி நாள் டைட்டில் வாங்கும்வரை கெட்டியாக பிடித்து கொண்டிருந்தார்.

பகிரங்க விமர்சனம் 
ஆனால் இந்த டைட்டிலை ரித்விகா பெற்றவுடன், அதற்கும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. சிலர் ரித்விகா என்ன சாதி என்றும், குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால்தான் பிக்பாஸ் டைட்டில் கிடைத்துள்ளது என்றும் இணையத்தில் பகிரங்கமாகவே விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.


கண்டுபுடிச்சுக்கோங்கடா  
இந்த சாதி மிருகங்களுக்கு எல்லாம் ஒரே ஒரு ட்வீட் போட்டு பதிலடி தந்துள்ளார் ரித்விகா. தனது ட்விட்டரில், " "ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா.." என்று ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.

சரியான சவுக்கடி 
என்ன சாதி என்று கேட்டு கேட்டு குடைந்தவர்களுக்கு ரித்விகாவின் இந்த சவுக்கடி போதுமா என்று தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட சாதிய மிருகங்களுக்கு இதுதான் பதில் என்று மட்டும் நன்றாக தெரிகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

.


ரியோ ராஜை ஹீரோவாக்கிய சிவகார்த்திகேயன்: தனுஷ் வழியில் செல்கிறாரா?டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ரியோ ராஜை ஹீரோவாக வைத்து தான் தயாரிக்கும் படத்திற்கு பூஜை போட்டுள்ளார் சிவகார்த்திகேயன். நண்பன் அருண்ராஜா காமராஜுக்காக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார் சிவகார்த்திகேயன்.


தனது சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் மூலம் கனா படத்தை தயாரித்துள்ளார். அந்த படம் ரிலீஸாவதற்குள் அடுத்த படத்தை தயாரிக்கிறார் அவர். (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

சிவகார்த்திகேயன்  
விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன். கார்த்திக் வேணு இயக்கும் இந்த படத்தில் புதுமுகம் ஷிரின் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தில் ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

மகிழ்ச்சி 
ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் பூஜை நடந்தது. அதில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.


மகிழ்ச்சி 
தான் ஹீரோவாகியுள்ள மகிழ்ச்சியை ரியோ ராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த புதிய பயணத்தில் அனைவரின் ஆசியும், ஆதரவும் வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனுஷ் 
சின்னத்திரை பிரபலமான தீனாவை ஹீரோவாக்கியுள்ளார் தனுஷ். இந்நிலையில் அவர் வளர்த்துவிட்ட சிவகார்த்திகேயன் ரியோ ராஜை ஹீரோவாக்கியுள்ளார். தனுஷ் போன்றே சிவாவும் பாடகர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என்று அடுத்தடுத்து புதுப்புது அவதாரங்கள் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்