Run World Media: 12/04/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 4, 2018

சக காவலர்கள் பாலியல் தொல்லை.. திருநங்கை போலீஸ் அதிகாரி நஸ்ரியா தற்கொலை முயற்சி!இராமநாதபுரத்தில் திருநங்கை போலீஸ் அதிகாரி நஸ்ரியா தற்கொலை முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் நஸ்ரியா. திருநங்கையான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் இராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியில் சேர்ந்தார். ஆயுதப்படை குடியிருப்பில் தங்கியுள்ளார்.


இந்நிலையில், பணியின் போது இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயசீலன், தலைமை எழுத்தாளர் பார்த்திபன் ஆகியோர் அவரின் நடத்தை குறித்து தகாத வார்த்தைகளால் பேசி வந்துள்ளனர். நஸ்ரியாவிற்கு பாலியல் ரீதியாக தொல்லையும் கொடுத்துள்ளனர். 
 
தொடர்ந்து பாலியல் தொல்லைகளால் நஸ்ரியா கஷ்டப்பட்டு வந்து இருக்கிறார். இதனால் மனமுடைந்த அவர் எனது சாவிற்கு இவர்கள் 3 பேரும் தான் காரணம் எனக் கூறி எலி கொல்லி மருந்தை தண்ணீரில் கலந்து (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
குடித்துள்ளார். விஷம் குடித்த சில நிமிடத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
 சக போலீசார் அவரை வேகமாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
பாலியல் பிரச்சனைகள் காரணமாக இவர் கடந்த மூன்று வாரமாக போலீஸ் நிலையத்திற்கு செல்லவில்லை. இதனால், கடந்த 3 வாரங்களுக்கு மேலாக இவர் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் விடுப்பு எடுத்துள்ளார் என்று இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வருகிறது. அவரது நடத்தை குறித்து யாரும் விமர்சிக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

மாப்பிள்ளை இவருதான்... ஆனால் மாமியார் வீடுதான் லைட்டா மாறி போச்சு!மாப்பிள்ளை இவருதான்... ஆனால் மாமியார் வீடுதான் லைட்டா மாறி போச்சு! அவ்வளவுதான்!! நாமக்கல் பரமத்திவேலூர் அருகே பாலப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். 4 வருடங்களுக்கு முன்பு காலேஜில் படிக்கும்போது சரஸ்வதி என்ற பெண்ணுடன் லவ் ஸ்டார்ட் ஆகி இருக்கு.

அதனால சரஸ்வதியை அழைத்து கொண்டு ஊர்ஊராக கூட்டி சென்று ஜாலியாக இருந்திருக்கிறார். இதனால் சரஸ்வதி கர்ப்பமானார். ஆனால் காலேஜ் படிப்பே முடியாததால், பிள்ளையை எப்படி பெற்று கொள்வது என்று நினைத்து கர்ப்பத்தை கலைத்துள்ளார். பிறகு காலேஜ் படிப்பு முடிந்தது. சென்னையில் வேலை தேடி கார்த்திகேயன் வந்துவிட்டார். அதனால் சரஸ்வதியையும் சென்னை வந்துவிடுமாறு சொல்லவும் இவரும் கார்த்திகேயனை தேடி சென்னைக்கு வந்துவிட்டார்.


மீண்டும் அபார்ஷன்  
5 மாசத்துக்கு முன்னாடி ஸ்ரீபெரும்புதூர் விநாயகர் கோயிலில் கார்த்திகேயன் சரஸ்வதிக்கு தாலி கட்டி மனைவியாக்கி கொண்டார். ஒரு வீட்டையும் பார்த்து இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்கள். இப்போது சரஸ்வதி திரும்பவும் கர்ப்பமானார். உடனே கார்த்திகேயன், "இப்பதான் நமக்கு கல்யாணம் ஆகியிருக்கு. லைஃப்பில் இன்னும் செட்டில் ஆகல. அதனால இந்த குழந்தையை கலைச்சிடு" என்று சொல்லி இருக்கிறார். உடனே சரஸ்வதியும் இந்த கர்ப்பதையும் கலைத்துள்ளார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

சொந்தக்கார பெண் 
இந்நிலையில், போன வாரம் சரஸ்வதியை சென்னையில் தனியாக விட்டு விட்டு தன்னுடைய பாலப்பட்டி கிராமத்துக்கு வந்தார் கார்த்திகேயன். அப்போது கார்த்திகேயனுக்கு அவரது வீட்டில் 2வது கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இதற்காக அவரது சொந்தக்கார பெண்ணை பேசி முடித்து வைத்திருந்தார்கள். இந்த விஷயம் எல்லாம் ஏற்கனவே கார்த்திகேயனுக்கு தெரிந்துதான் ஊருக்கு கல்யாணம் செய்து கொள்ள கிளம்பி வந்தார்.


சரஸ்வதி புகார்  
கல்யாண தகவல் சென்னையில் உள்ள சரஸ்வதிக்கு யாரோ தகவல் சொல்லிவிடவும், உடனே பாலப்பட்டிக்கு வந்தார் சரஸ்வதி. நேராக மாமியார் வீட்டுக்கு சென்ற சரஸ்வதி, இது சம்பந்தமாக சண்டை போட்டார். அதற்கு எல்லோரும் சேர்ந்து சரஸ்வதியை அடித்து உதைத்து வீட்டை விட்டு விரட்டி விட்டுள்ளார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, நேராக போலீஸ் ஸ்டேஷன் போய்விட்டார். எப்படியாவது நடக்க இருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு புகார் அளித்தார்.

மாப்பிள்ளை கைது  
அதன்பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார், மண்டபத்தில் கார்த்திகேயனுக்கு கல்யாணம் நடக்க இருந்ததை அறிந்து நேராக அங்கு சென்றார்கள். பட்டு வேட்டி, மாலை என மாப்பிள்ளை கெட்டப்பில் இருந்த கார்த்திகேயனை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மணக்கோலத்தில் மாப்பிள்ளை கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

கஜாவை விடுங்க.. வங்கக்கடலில் உருவாகுது புது புயல்.. இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழைதான்

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில், அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்கிறது. இதற்கெல்லாம் காரணம், காற்றழுத்த தாழ்வு நிலைதான் என்றாலும், இது வலுவடைந்து அடுத்த சில நாட்களில் புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது.


பள்ளிகளுக்கு விடுமுறை 
இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது. காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருவதால், 3 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

பரவலாக மழை 
இன்னும், 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


சென்னை மழை  
நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்களும் எச்சரித்துள்ளனர். இதனிடையே, வங்கக்கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு நிலை, 6ம் தேதிவாக்கில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக தீவிரம் அடைகிறது.

புயலுக்கு வாய்ப்பு
இதன் காரணமாக வட தமிழகத்தில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய பிறகு அது மேலும் தீவிரம் அடைந்து அடுத்த 4 நாட்களில் அதாவது டிசம்பர் 10ம் தேதி வாக்கில், புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

பெண்களே, உஷார்..! விடுதி குளியல் அறை, படுக்கையறைகளில் ரகசிய கேமரா வைத்து படம் பிடித்த நபர்சென்னையில் பெண்கள் தங்கும் விடுதியில் கழிவறை, படுக்கையறை உள்ளிட்ட பகுதிகளில் ரகசிய கேமரா வைத்து படம் பிடித்த நபர் கைது செய்யப்பட்டார்.


திருச்சியை சேர்ந்த சஞ்சீவி (45) என்பவர் சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் முதல் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அறைகளை வாடகைக்கு எடுத்து விடுதி நடத்தி வருகிறார். இவர் சமூக வலைதளங்களிலும் பெண்களுக்கான தங்கும் விடுதி குறித்து விளம்பரம் செய்துள்ளார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இதையடுத்து பிரபல ஐடி நிறுவனங்களில் பணிபுரியும்  10க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த விடுதியில் பேயிங் கெஸ்டாக தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளனர்.

இதனிடையே அறையில் சீரமைப்பு பணிகள் செய்வதாக கூறி வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி ஏதாவது செய்து வந்துள்ளார். இதையடுத்து அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு ரகசிய கேமராக்கள் ஏதாவது பொருத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அதனை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து தங்களது மொபைல் போனில்  உள்ள  செயலி மூலம் யாருக்கும் தெரியாமல் விடுதியின் கழிப்பறை, படுக்கையறை, துணிகள் மாட்டும் ஆங்கர் உள்ளிட்ட இடங்களில் கண்ணுக்கு தெரியாத சிறிய அளவிலான ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த பெண்கள் அனைவரும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சஞ்சீவை கைது செய்தனர். விடுதி அறைகளில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராக்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், 16  மொபைல் போன்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற போலி ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள சஞ்சீவி மீது 2011 முதல் பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், பல பெயர்களில் போலி ஆணவனங்கள் வைத்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

அபார்ட்மென்ட்டில் ரகசிய ரூம்.. 10 வருடத்தில் 8000 அபார்ஷன்கள்.. அதிர வைக்கும் ஆனந்தி!படித்தது பிளஸ் 2!! செய்றது என்னவோ டாக்டர் வேலை.. அதான் தூக்கி உள்ளே வெச்சி... குண்டர் சட்டமே பாயும் நிலைமை ஆயிடுச்சு!! திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் ஒரு அப்பார்ட்மெண்ட் உள்ளது. 

இங்குதான் அந்த டுபாக்கூர் டாக்டர் ஆனந்தி பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அழிக்கும் மையம் நடத்தி வந்தார். இந்த தகவல் போலீசாருக்கு சென்றதையடுத்து விரைந்து வந்து அபார்ட்மென்ட்டை பார்த்தார்கள். அபார்ஷன் செய்றதுக்கு ஒரு தனி ரகசிய ரூம், அபார்ஷனுக்கு வரும் பெண்களை தங்க வைக்க 3 ரூம் இருந்ததை பார்த்ததும்தான் போலீசார் அதிர்ச்சி ஆனார்கள். விஷயம் ரொம்ப பெரிசு போல இருக்கே என்று தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.


ஏற்கனவே கைதானவர்
அப்போதுதான் அந்த டாக்டரை போலீசார் ஏற்கனவே பார்த்திருக்கிறார்கள். அதாவது 2 முறை இதே போல பெண்களுக்கு அபார்ஷன் செய்த குற்றத்துக்காக கைதானவர் என்பது தெரிந்தது. 2016ம் ஆண்டு இப்படித்தான் அபார்ஷனுக்கு பெண்கள் வந்திருக்கிறார்கள். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

2 பேர் உடந்தை 
ஒன்றல்ல, ரெண்டல்ல, 9 பெண்களையும் வரிசையாக படுக்க வைத்து மயக்க மருந்து கொடுத்து, பின்னர் ஆபத்தான நிலைக்கு சென்ற அவர்களை போலீசார் சென்று மீட்டு வந்தார்கள். தற்போதும் இப்படியே தன் வேலையை ஆரம்பித்துள்ளார் ஆனந்தி. அவருக்கு உடந்தையாக கணவன் தமிழ்செல்வன், ஆட்டோ டிரைவர் சிவகுமார் ஆகியோரை வளைத்து பிடித்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


ஆட்டோ சார்ஜ் 2  
இதுல இந்தஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஒரு தனி வயித்தெரிச்சல். இவர் வேலை என்னவென்றால், அபார்ஷனுக்கு வரும் பெண்களை பஸ் ஸ்டேண்டிலிருந்து ஆனந்தி வீட்டுக்கு கூட்டி வந்து திரும்பவும் பத்திரமாக பஸ் ஏற்றி அனுப்புவதுதான். இதற்காக இவருக்கு ஆட்டோ சார்ஜ் 2 ஆயிரமாம். அதுவும் பக்கத்துலதான் பஸ் ஸ்டேண்ட் இருக்குமாம். ஆனாலும் யாரும் தம்மை கண்டுபிடிக்காதவாறு சுற்றி சுற்றி கூட்டிக் கொண்டு போவாராம்.

8 ஆயிரம் அபார்ஷன் 
இந்த ஆனந்தியால் ஆயிரக்கணக்கான சிசுக்கள் கொல்லப்பட்டுள்ளன. அதாவது 10 வருஷத்துல 8 ஆயிரம் கருக்கலைப்புக்கும் மேல இவர் செய்திருக்கிறார். எல்லா பெண்களையுமே ராத்திரியில்தான் இவர் வீட்டுக்கு வரவழைப்பாராம். திருவண்ணாமலை மாவட்டத்தின் பிறப்பு எண்ணிக்கையையே இந்த ஆனந்தி குறைத்திருக்கிறார் என்பதுதான் உச்சக்கட்ட ஷாக்!! இதனை சொன்னது மாவட்ட நீதிபதி மகிழேந்திதான்! தன் மாவட்டம் உட்பட எல்லா மாவட்டங்களிலும் டீலிங் வைத்திருந்திருக்கிறார் ஆனந்தி.


பண வசூல் 
அதனால்தான் ஏராளமான பெண்கள் அபார்ஷன் என்றாலே ஆனந்திதான் என்று நம்பி ஊரிலிருந்து கிளம்பி வந்திருக்கிறார்கள். இதற்கான புரோக்கர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளது. ஒரு அபார்ஷனுக்கு ஆனந்தி ரூ.20 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை வாங்குவாராம்!! இப்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள இந்த 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


மனைவியுடன் விவாகரத்து.. அடுத்தவர் மனைவியுடன் கள்ளக்காதல்..மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். 


திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூர் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவருடைய மனைவி அமுதா. இவர்களது மகன் பிரேம்குமார் (28). இவர் கூத்தியார்குண்டு என்ற கிராமத்தில் லேத் பட்டறை வைத்துள்ளார். (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எனினும் குடும்பத் தகராறு காரணமாக இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து விட்டார். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரேம்குமாரின் வீட்டருகே அவரது உறவினர் பிரகாஷ் (25) தனது மனைவியுடன் குடி வந்தார்.


தகராறு  
இவர் கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். உறவினர்கள் என்பதால் பிரகாஷின் மனைவியும் பிரேம்குமாரும் நெருக்கமாக பழகி வந்தனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இந்த விவகாரம் பிரகாஷுக்கு தெரியவந்ததை அடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

வீட்டுக்கே சென்ற கள்ளக்காதலன் 
இதைத் தொடர்ந்து பிரகாஷ் வீட்டை காலி செய்து விட்டு மதுரை அருகே உள்ள கருப்பாயூரணிக்கு சென்றார். அங்கு சென்ற பிறகு தொழில் தொடர்பாக பிரகாஷ் அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். இதை அறிந்த பிரேம்குமார் பிரகாஷின் வீட்டுக்கே சென்று அவரது மனைவியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.


வீட்டுக்கு சென்ற பிரகாஷ்
இந்த விவகாரமும் பிரகாஷின் காதுகளுக்கு சென்றது. இதையடுத்து இருவருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை பிரேம்குமார் தனது வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பிரகாஷ் உள்பட 3 பேர் வீட்டின் பின்பக்க சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர்.

போலீஸார் வலை 
பின்னர் பயங்கர ஆயுதங்களால் பிரேம்குமாரை கடுமையாக தாக்கினர். பிரேம்குமாரின் அலறல் சப்தம் கேட்டு அவரது தாயார் அமுதா அங்கு வந்து அவர்களை தடுத்தார். அப்போது அவரை கீழே அழைத்துக் கொண்டு ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு பிரேம்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர். இதனிடையே அமுதாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து அமுதாவை மீட்டனர். இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்