வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-12-02
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 13, 2018

டக்குன்னு பார்த்தா அப்படியே ஹெச். ராஜா மாதிரியே இருக்காருல்ல?



நடிகர் மனோபாலா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் செமயாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். 


யோகி பாபு, யாஷிகா ஆனந்த் நடிக்கும் ஜாம்பி படித்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. மனோபாலா நடிக்கும் காட்சியுடன் தான் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்நிலையில் மனோபாலா ட்விட்டரில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மனோபாலா  
வெள்ளை வேட்டி, சட்டையில் மீன்பிடிக்கும் வலை மீது தான் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மனோபாலா. அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் அவர் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்பது அவர்களுக்கு தெரியும்.

ஹெச். ராஜா 
டக்குன்னு பார்த்தால் ஹெச். ராஜா போன்று தெரிவதாக ஒரு நெட்டிசன் கமெண்ட் போட்டுள்ளார். நிஜமாவே ஹெச்.ராஜா மாதிரி தெரிகிறாரா?

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

 

காற்றழுத்த மண்டலம் இன்று புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்



தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த மண்டலம் இன்று புயலாக மாறுவதால் வருகிற 15, 16-ந்தேதிகளில் சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதியில் மிக பலத்த மழை பெய்யும்.




தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்துள்ளது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக (புயலாக) மாறி நாளை சென்னை மற்றும் வடதமிழகம் நோக்கி நகரத் தொடங்கும்.

அடுத்த 48 மணி நேத்தில் இது வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும்.


இதன் காரணமாக வருகிற 15-ந்தேதியும், 16-ந்தேதியும் 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதியிலும், தெற்கு ஆந்திராவிலும் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யும். குறைந்த நேரத்தில் அதிக அளவில் மழை கொட்டும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இன்று காலை முதல் தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையும் அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்திலும் கடல் காற்று வீசும்.

தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடலில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வரையும், அதிகபட்சமாக 80 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பும்.


எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இன்றைய நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்தமானது இன்று புயலாகவும், பின்னர் தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது.

15-ந்தேதி காலை சென்னையை நெருங்கும், 16-ந்தேதி ஆந்திரா நோக்கி நகரும். 17-ந்தேதி அதிகாலை நெல்லூருக்கும், விசாகபட்டினத்துக்கும் இடையே மசூலிப்பட்டனம் அருகே கரையை கடந்து வலுவிழந்து காற்றழுத்த மண்டலமாக மாறும் என்று தனியார் வானிலை இணைய தளங்கள் தெரிவித்துள்ளன.


அதன்பிறகு தென்கிழக்கு வங்கக்கடலில் வருகிற 19-ந்தேதி புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழக கடற்கரை பகுதியில் நிலவும் என்றும், இதன் மூலம் தமிழகத்துக்கு பரவலாக மழை கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. என்றாலும் காற்றின் போக்கால் வானிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபர், நெத்தியடி கொடுத்த நடிகை



ஒரு மணிநேரத்திற்கு படுக்கைக்கு அழைத்த நபருக்கு நடிகை காயத்ரி நெத்தியடி பதில் அளித்துள்ளார்.


பரஸ்பரம் மலைாள தொலைக்காட்சி தொடரில் தீப்தி ஐபிஎஸ்-ஆக நடித்து பிரபலம் ஆனவர் காயத்ரி அருண். டிவி தொடர்களில் நடித்து வரும் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் காயத்ரியிடம் வாலாட்டியுள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

காயத்ரி  
ரூ. 2 லட்சம் தருகிறேன், ஒரு இரவு மட்டும் என்னுடன் வர முடியுமா?. இது நமக்குள் இருக்கும். ஒரு மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம் தருகிறேன் என்று ரோஹன் குரியகோஸ் என்பவர் காயத்ரிக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.


ஃபேஸ்புக் 
ரோஹன் அனுப்பிய மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்த காயத்ரி அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு கூறியிருப்பதாவது, மிஸ்டர் ரோஹன் குரியகோஸ்..உங்களின் தாய்/சகோதரியின் பாதுகாப்புக்காக நான் நிச்சயம் பிரார்த்தனை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

விளாசல்  
காயத்ரியின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டியுள்ளனர். மேலும் ரோஹனை விளாசியுள்ளனர். ரோஹன் குறித்து உடனே போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஒரு இரவு  
முன்னதாக மலையாள நடிகை நேஹா சக்சேனாவை ஒரு இரவுக்கு வர முடியுமா என்று துபாயில் வசிக்கும் நபர் ஒருவர் கேட்டார். அந்த நபர் குறித்து நேஹா தனது ஃபேஸ்புக் பகத்தில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


ஜெர்மனில் ஒரு டன் எடையுள்ள திரவ சாக்லெட் சாலையில் ஆறாக ஓடியது



ஜெர்மனில் ஒரு டன் எடையுள்ள திரவ சாக்லெட் சாலையில் ஆறாக ஓடி கட்டியாக மாறியது.




ஜெர்மனில் வெஸ்டான்னேன் என்னும் இடத்தில் ட்ரேமேய்ஸ்டெர் என்னும் சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலையில், திரவ சாக்லேட் ஊற்றி வைத்திருக்கும் பிரமாண்டமான டேங்க் திடீரென உடைந்துள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
குளிர் காரணமாக, சில நிமிடங்களில் திரவ சாக்லெட் இறுகிக் கட்டியாக ஆனதால், அங்கு வாகனங்கள் செல்ல வழியின்றி அந்தச் சாலை மூடப்பட்டது.
 
25 தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் அந்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சேர்ந்து மண்வெட்டி, சுடுநீர், நெருப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி, மிகுந்த சிரமத்துடன் சாக்லெட்டை அகற்றி, போக்குவரத்தை சீர்செய்தனர்.
இந்நிலையில், சாலையில் கொட்டிய ஒரு டன் சாக்லெட்டினால், அதன் தயாரிப்பு எதுவும் பாதிக்கப்படாது எனவும், இரண்டு தினங்களில் மீண்டும் தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிடும் என்றும் ட்ரேமேய்ஸ்டெர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

இவ்வளவு சீக்கிரம் நிறைவேறிய ஓவியா-ஆரவ் ரசிகாஸின் ஆசை



ஆரவின் ராஜபீமா படத்தில் அவருடன் சேர்ந்து நடித்துள்ளார் ஓவியா. பிக் பாஸ் முதல் சீசனில் ஆரவ், ஓவியா இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. 


அதில் இருந்து அவர்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியானால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆரவ், ஓவியா ஆகிய இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை. அவர்களின் ஆசை நிறைவேறியுள்ளது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

ஆரவ் 
ஆரவ் நடித்து வரும் ராஜபீமா படத்தில் ஆஷிமா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஓவியா தனது நண்பர் ஆரவுடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஆடியபோது எடுத்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.


ஓவியா 
ராஜபீமா படத்தில் ஓவியா கவுரவத் தோற்றத்தில் மட்டும் வரவில்லை என்று புது தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஆரவ்.

மகிழ்ச்சி 
ஆரவ் ட்வீட் போட்ட வேகத்தில் பதில் அளித்துள்ளார் ஓவியா. அதாவது அவர் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார் ஓவியா.

காத்திருப்பு 
ஆரவ், ஓவியாவை சேர்ந்து திரையில் பார்க்க அவர்களின் ரசிகர்கள் வெயிட்டிங்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts