வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ‘பப்ஜி கேமை தடை செய்யுங்க’.. மும்பை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து 11 வயது சிறுவன்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, February 03, 2019

‘பப்ஜி கேமை தடை செய்யுங்க’.. மும்பை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து 11 வயது சிறுவன்!

பிரபலமான பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என மும்பையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன், மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு செல்போன் கேம் டிரெண்டிங்கில் இருக்கும். அந்தவகையில் பிரதமரே தனது பேச்சில் குறிப்பிடும் அளவிற்கு பப்ஜி கேம் தற்போது நமது நாட்டில் டிரெண்டிங்காக இருக்கிறது. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

வயது வித்தியாசம் இல்லாமல் இதை விளையாடி வருகின்றனர். பலர் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி எப்போதும் இதனை விளையாடியபடியே இருக்கின்றனர். இதனால் இந்த விளையாட்டானது பொழுதுபோக்காக இல்லாமல், பொழுதை பாழடிப்பதாக அமைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் இந்த விளையாட்டிற்காக அதிக நேரம் செல்போனிலேயே செலவழிக்கின்றனர்.


பள்ளிச் சிறுவன்:  

இந்நிலையில், இந்த விளையாட்டைத் தடை செய்யக் கோரி மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ராவைச் சேர்ந்த 11 வயது பள்ளிச் சிறுவன் அஹத் நிசாம், உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளான். தனது தாயின் உதவியுடன் அஹத் இந்த வழக்கைத் தொடுத்துள்ளான்.


தடை கோரி வழக்கு:  

அந்த மனுவில், ‘பப்ஜி விளையாட்டை, தான் சில நாள்கள் விளையாடியதாகவும், அதிலிருந்து தனக்கு எதிர்மறை எண்ணங்கள் வந்ததாகவும், மேலும் அதில் கொலை போன்ற வன்முறைகள் அதிகமாக இருப்பதாலும் இந்த கேமை தடை செய்ய மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.


ஆணையம் தேவை:  

மேலும் ஆன்லைன் நெறிமுறை ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கி இதுபோன்ற வன்முறையைத் தூண்டும் விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் தனது மனுவில் அஹத் தெரிவித்துள்ளான்.


குஜராத்:

ஏற்கனவே ஜம்மு காஷ்மீரிலும் பப்ஜி விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரி தேசிய குழந்தைகள் ஆணையத்தில் மாணவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் சமீபத்தில் இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment