வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-03-10
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, March 16, 2019

பொள்ளாச்சி விவகாரம்! - போராடிய மாணவரின் கன்னத்தில் அறைந்த புதுக்கோட்டை எஸ்.பி



பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்குத் தூண்டியதாக மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரை எஸ்.பி உட்பட போலீஸார் அடித்து வேனில் ஏற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், புதுக்கோட்டை அரசுக் கலைக்கல்லூரி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் அரவிந்த சாமி உட்பட மாணவர் அமைப்பினர் சிலரும் கலந்துகொண்டனர்.


இதையடுத்து, புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ் தலைமையில் அங்கு திரண்ட போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து செல்ல வலியுறுத்தினர். மாணவிகள் கலைந்து செல்ல மறுத்து, தொடர்ந்து கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.


கல்லூரியிலிருந்து மாணவிகள் பலரும் போராட்டத்தில் ஈடுபட சாலைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
இதையறிந்த ஆசிரியர்கள் அவர்களை வெளியே செல்ல விடாமல் தடுத்து கதவை அடைத்தனர். தொடர்ந்து போலீஸார் பேச்சுவார்த்தை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால், மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தைத் தூண்டியதாக, மாணவர் சங்கத்தைச் சேர்ந்த அரவிந்த சாமி மற்றும் சிலரை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர்.


அப்போது, போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காரில் இருந்து இறங்கி வந்த எஸ்.பி செல்வராஜ் அரவிந்த சாமி என்ற மாணவர் சங்க நிர்வாகியைக் கன்னத்தில் அறைந்துள்ளார். மற்ற போலீஸாரும் சேர்ந்து மாணவர் சங்க நிர்வாகிகளைத் தாக்கியுள்ளனர். இதில், அரவிந்த சாமி மற்றும் மாணவர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.


தொடர்ந்து, கல்லூரி மாணவிகள் போலீஸார் வாகனத்தை நான்குபுறமும் மறித்து கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இறுதியில், கைது செய்து வேனில் ஏற்றிய மாணவர்களை போலீஸார் விடுவித்தனர். இதையடுத்து சிறிது நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரம் வரையிலும் போராட்டம் நீடித்தது. இந்தச் சாலை மறியல் போராட்டத்தால், புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


எஸ்பி மற்றும் போலீஸார் தாக்கியதில் காயமடைந்த அரவிந்த சாமி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல், புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவ, மாணவிகள் இரண்டாவது நாளாகக் கல்லூரி வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Friday, March 15, 2019

உள்ளாடையுடன் விமானம் ஏறிய இளம்பெண்: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்



உள்ளாடை போல் தோற்றமளித்த உடையுடன் விமானம் ஏறிய பிரித்தானிய இளம்பெண் ஒருவரை, விமான ஊழியர்கள், ஒழுங்காக உடலை மூடும்படி உடையணி, அல்லது வெளியே போ என சத்தமிட்டதையடுத்து அந்த பெண் அதிர்ச்சிக்குள்ளானார்.
பர்மிங்காமை சேர்ந்த Emily O'Connor (21), Tenerife செல்வதற்காக விமானம் ஏறினார்.


பயணிகளை வரவேற்பதற்காக விமானதிற்குள் நிற்கும் பணிப்பெண்கள் உட்பட்ட விமான ஊழியர்கள், Emilyயிடம் உங்கள் உடை சரியாக இல்லை, நீங்கள் மற்ற பயணிகளை அசௌகரியமாக உணரச் செய்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார்கள். உடனே Emily மற்ற பயணிகளிடம், நான் யாரையாவது தூண்டும் விதத்தில் உடையணிந்திருக்கிறேனா என்று கேட்க, யாரும் ஒன்றும் கூறவில்லையாம்.


என்றாலும் விமான ஊழியர்களில் ஒருவர், உடலை மூடு, அல்லது விமானத்தை விட்டு கீழே இறங்கு என்று கத்த, Emily நடுங்கிப் போனாராம்.
இந்த சம்பவத்தை ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்ட Emilyக்கு பலரும் பல்வேறு வகையில் பதிலளித்திருக்கிறார்கள்.


ஒருவர், இந்த பெண்ணுக்கு விமான நிறுவனம் விளக்கம் கொடுப்பதோடு மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். இன்னொரு பெண்ணோ, நீங்கள் உள்ளாடையுடன் பயணிப்பதை பலரும் விரும்புவதில்லை, உடலை மூடச் சொல்வதற்கு விமான நிறுவன கொள்கைகள் எல்லாம் தேவையில்லை என்று கூற, உடனே Emily, இது உள்ளாடை ஒன்றும் இல்லை, இது பிரபல நிறுவனத்தில் வாங்கிய டாப்ஸ் என்று அசடு வழிந்திருந்தார்.


அந்த குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் உடை கொள்கையின்படி, முறையான உடை அணியாதவர்கள், அதை மாற்றும் வரையில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
என்றாலும், விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், இந்த சம்பவத்தை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க முடியும், பொதுவாகவே எல்லா விமான நிறுவனங்களிலும் உடை கொள்கை உள்ளதுதானே, என்றாலும் Emilyயை நடத்திய விதத்திற்காக வருந்துகிறோம் என்று தெரிவித்திருந்தார்.


ஆனாலும், உறவினர் ஒருவரிடமிருந்து வேறொரு சட்டையை வாங்கி அணிந்தபின்னரே Emily விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, March 14, 2019

2 கையில் 2 பியானோ, ரூ. 7 கோடி பரிசு: உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சென்னை பையன்

அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியில் சென்னை பையன் லிடியன் நாதஸ்வரம் வெற்றி பெற்றுள்ளார். 

அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் தொலைக்காட்சி நிகழ்ச்சி போட்டியில் சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்து கொண்டார். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அவர் அந்த போட்டியில் அதிவேகமாக பியானோ வாசித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவை பார்த்து வியக்காதவர்களே இல்லை. சராசரி மனிதர்களை விட இரண்டு மடங்கு வேகமாக லிடியன் பியானோ வாசித்ததை பார்த்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானே அசந்துவிட்டார்.



வெற்றி  

தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்றுள்ளார் லிடியன். 14 இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்த லிடியன் ஏற்கனவே பல்வேறு விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிச் சுற்றில் லிடியன் இரண்டு கைகளால் இரண்டு பியானோக்களை வாசித்து அசத்திவிட்டார்.


பாராட்டு

தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற மினி மேஸ்ட்ரோ என்று செல்லமாக அழைக்கப்படும் லிடியனுக்கு நடிகர் மாதவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சூர்யா  

பியானோ வாசித்து சாதனை படைத்த லிடியனுக்கு நடிகர் சூர்யாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சதீஷ்  

லிடியனின் தந்தை சதீஷ் இயக்குநர் வெங்ட் பிரபுவின் நண்பர். முன்னதாக லிடியனை பாராட்டி நடிகர் ஜேம்ஸ் கோர்டன் வெளியிட்ட வீடியோவை ரீட்வீட் செய்து பெருமை அடைந்திருந்தார் வெங்கட் பிரபு என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயாப்புராவில் புரட்சி திருமணம்-மணமகனுக்கு தாலிகட்டினார்

சமூகசீர்திருத்தவாதி பசவண்ணரின் போதனைபடி மணமகன்களின் கழுத்தில் புதுமைப்பெண்கள் தாலி கட்டிய வினோத திருமணம் விஜயாப்புராவில் நடந்தது.






நமது கலாசாரத்தில் திருமணத்தின் போது மணப்பெண்ணின் கழுத்தில் மணமகன் தாலிகட்டுவது வழக்கம். இதனை நாம் பண்டைய காலம் தொட்டு பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகிறோம்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஆனால், கர்நாடகத்தில் மணமகள்கள், மணமகன்கள் கழுத்தில் தாலி கட்டிய புரட்சி திருமணம் நடந்துள்ளது.


தாலிகட்டிய மணமகள்கள்

விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகால் தாலுகாவில் நலதவாட் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஹல்லூர் மண்டபம் உள்ளது. இங்கு சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. அதன்படி அமித்-பிரியா, பிரபுராஜ்-அங்கீதா ஆகியே ஜோடிகளுக்கு சாதி மறுப்பு திருமணம் நடந்தது. மணமகன்களான அமித், பிரபுராஜ் ஆகியோர் ஹாலுமட் சாதியையும், மணமகள்களான பிரியா, அங்கீதா ஆகியோர் பானஜிகா சாதியையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்த திருமணத்தின்போது மணமகள் பிரியா, அமித்தின் கழுத்திலும், அங்கீதா, பிரபுராஜ் கழுத்திலும் தாலி கட்டினர். இதேபோல் அமித், பிரபுராஜ் ஆகியோர் முறைகே தங்களுக்கான மணமகள்களான பிரியா, அங்கீதா ஆகியோரின் கழுத்துகளில் தாலி கட்டினர். இந்த திருமணத்தின்போது அட்சதையாக பூ இதழ்கள் தூவப்பட்டன.

பசவண்ணரின் கொள்கைப்படி...

இந்த திருமணம் 12-ம் நூற்றாண்டின் சமூக சீர்த்திருத்தவாதி பசவண்ணரின் போதனை படி நடந்தது. அதாவது ஆணும், பெண்ணும் சமம் என்று அவர் கூறியதை நிரூபிக்கும் வகையில் மணமகள்களும், மணமகன்களின் கழுத்துகளில் தாலி கட்டினர். இந்த தாலியில் ருத்ராட்சை இடம்பெற்றிருந்தது.
இந்த திருமணத்துக்காக முகூர்த்த நேரம் எதுவும் குறிக்கப்படவில்லை. திருமணத்தில் இலகல் குருமகாந்தேஷ் சுவாமி, லிங்கசூகூர் விஜய் மகாந்தேஷ் மடத்தின் சித்தங்கலிங்க சுவாமி, கூலிதாகுட்டா பசவராஜ் சாமி, மகாந்த் தீர்த்த சுவாமி, சாதி மடத்தின் பசவலிங்க சுவாமி, மதரா சென்னைய்யா குரு பீடத்தின் பசவமூர்த்தி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் வந்து வாழ்த்தியவர்களுக்கு பசவண்ணரின் கொள்கைகள் அடங்கிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

ஆணும், பெண்ணும் சமம்

இதுகுறித்து, இலகல் குருமகாந்தேஷ் சுவாமி கூறுகையில், ‘ஆணும், பெண்ணும் சமம் என்பதை நிரூபிக்கும் வகையில் மணமகன்களும், மணமகள்களும் ஒருவருக்கொருவர் தாலி கட்டி கொண்டனர். மூடநம்பிக்கையை ஒழிக்கவும் இந்த திருமணம் ஒரு நிலையாகும்’ என்றார்.

பசவமூர்த்தி கூறுகையில், ‘சாதி, மதங்களை பார்த்து திருமணம் செய்பவர்கள் இந்த திருமணத்தை பார்த்து திருந்த வேண்டும்’ என்றார்.

Sunday, March 10, 2019

5 ஆயிரம் ரூபாயில் நெல் அள்ளும் கருவி

அறுவடை காலங்களில் களத்தில் குவிக்கப்பட்டிருக்கும் நெல்லை கோணிப் பைகளில் நிரப்புவது சிரமமான பணியாக இருக்கிறது.





ஒரு கோணி பையில் நெல்லை நிரப்புவதற்கு இரண்டு, மூன்று பேரின் உதவி தேவைப்படும். அப்படி இருந்தும் நெல்மணிகள் தரையில் விழுந்து வீணாகும். அப்படி நெல் நிரப்பும் பணியில் சிரமத்துடன் ஈடுபட்டு வந்த தாயாருக்கு உதவும் விதத்தில் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறான், பள்ளி மாணவனான மகன். அவனுடைய பெயர் மாரி பள்ளி அபிஷேக்.



தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்திலுள்ள ஹனுமஜித்பட் கிராமத்தில் அவன் தாயுடன் வசித்து வருகிறான். அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அவனுடைய தந்தை லட்சுமி ராஜம் விவசாயி. தாயார் ராஜவ்வா. இவர்களுக்கு சிறிய அளவில் விவசாய நிலம் இருக்கிறது. விவசாயத்தை நம்பியே இவர்களுடைய வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. விவசாயத்தின் மூலம் போதிய வருமானம் கிடைக்காததால் லட்சுமி ராஜம் 6 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி துபாய்க்கு சென்று விட்டார். தாயார் ராஜவ்வா நெல் விற்பனை செய்யும் மையத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கு குவித்துவைக்கப்பட்டிருக்கும் நெல்லை கோணிப்பைகளில் நிரப்புவதுதான் அவரது வேலை.
ஒவ்வொரு முறையும் நெல்லை அகன்ற பாத்திரத்தில் நிரப்பி தூக்கிச்சென்று கோணிப் பைகளில் நிரப்பும்போது தாய் அனுபவிக்கும் கஷ்டத்தை நேரில் பார்த்த அபிஷேக் வருந்தினான். தாயார் எளிதாக கோணிப் பையில் நெல்லை நிரப்புவதற்கு வசதியாக இயந்திரம் ஒன்றை கண்டுபிடிக்க முடிவு செய்தான். இதுபற்றி தன்னுடைய பள்ளி ஆசிரியர் வெங்கடேஷிடம் கலந்தாலோசித்தான். அவர் இயந்திரத்திற்கு இறுதி வடிவம் ஏற்படுத்திக்கொடுக்க சம்மதித்தார். இதையடுத்து இரும்பு தடவாளப்பொருட்களை கொண்டு எந்திரத்தை உருவாக்கிவிட்டான்.

அந்த இயந்திரம் இரண்டு சக்கரங்கள், இரும்பு தகடு, இரும்பு பைப்புகள் உள்ளிட்டவற்றை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தின் முகப்பில் நெல்லை அள்ளும் விதமாக குறுகிய பட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன. செங்குத்தாக இருக்கும் இயந்திரத்தை சற்று கீழ்நோக்கி சாய்த்து நெல்லை அள்ளிவிட்டு மேல் நோக்கி தூக்கினால் அந்த நெல் மறுபகுதியில் இருக்கும் கோணிப்பையில் விழுகிறது.
கோணிப்பை நிரம்பியதும் அதனை இயந்திரத்தில் இருந்து பிரித்து மூட்டை இருக்கும் பகுதிக்கு கொண்டு சென்றுவிடலாம். இந்த இயந்திரத்தை உருவாக்குவதற்கு 5 ஆயிரம் ரூபாய் செலவானதாக அபிஷேக் கூறுகிறான்.

‘‘கோணிப்பையில் நெல்லை நிரப்புவது விவசாயி களுக்கு சிரமமான பணியாக இருக்கிறது. ஆண்களை விட பெண்கள் அதிக கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். இந்த இயந்திரம் மூன்று பேர் செய்யும் வேலையை எளிதாக செய்துவிடும்’’ என்கிறான் அபிஷேக்.
அபிஷேக் கண்டுபிடித்த இந்த இயந்திரம் டெல்லியில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம்பிடித்து மூன்றாவது பரிசை வென்றுள்ளது. அவனுக்கு ரொக்கப்பரிசும், லேப்டாப்பும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கானா முதல் -மந்திரி சந்திர சேகரராவும் அபிஷேக்கின் திறமையை பாராட்டி ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்தை ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளார்.

84 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை பறிபோகும்... சிறப்பு அனுமதியை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு


அமெரிக்காவில், 'எச் - 4' விசா பெற்று, பணியாற்றி வருவோருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அனுமதியை ரத்து செய்ய, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து, அங்கு பணியாற்றும், 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு, வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொறியியல் அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு, அமெரிக்காவில் பணியாற்ற, 'எச் - 1பி' என்ற விசா வழங்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் இந்த விசா பெற்று, பணியாற்றி வருகின்றனர்.இந்த விசா பெற்றவர்கள், தங்கள் மனைவி அல்லது கணவனை, தங்களுடன் அமெரிக்கா அழைத்துச் செல்ல, எச் - 4 என்ற விசா வழங்கப்படுகிறது.இந்த விசா பெற்றவர்கள், தங்கள் கணவர் அல்லது மனைவியுடன், அமெரிக்காவில் வசிக்கலாம். ஆனால், அங்கு வேலை பார்க்கவோ, சொந்த தொழில் செய்யவோ முடியாது.

பரிந்துரை
இந்நிலையில், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி வகித்தபோது, 2015ல், இந்த, எச் - 4 விசா நடைமுறையில் சிலசலுகையை அறிவித்தார்.அதில், 'எச் - 4 விசா வைத்திருப்பவர்கள், இ.ஏ.டி., எனப்படும், சிறப்பு பணி அனுமதி ஆவணம் என்ற திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் பணியாற்ற அனுமதி வழங்கப்படும்' என, அறிவித்தார். இதன் வாயிலாக, எச் - 4 விசாவில் அமெரிக்கா சென்ற இந்தியர்கள் பலர், வேலைவாய்ப்பு பெற்றனர்.


இந்நிலையில், இந்த, எச் - 4 விசாவில் உள்ள சிறப்பு பணி அனுமதி ஆவண திட்டத்தை ரத்து செய்ய, அதிபர் டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.இந்த முடிவு, ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'சிறப்பு பணி அனுமதி நடைமுறையை ரத்து செய்ய வேண்டாம்' என, அமெரிக்க அதிபரிடம் கோரிக்கை வைக்க, எச் - 4 விசா வைத்துள்ளோர் தரப்பில் முடிவுசெய்யப்பட்டது. அமெரிக்காவில் வாழும், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை ஒன்றிணைக்கும் விதமாக, 'ஐ.டி., ப்ரோ அலையன்ஸ்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பின் உதவியுடன், 'எச் - 4 விசா வைத்துள்ளவர்களுக்குவழங்கப்பட்டு வந்த சிறப்பு பணி அனுமதியை ரத்து செய்ய வேண்டாம்' என, வலியுறுத்தி,
வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கையெழுத்து
இந்த மனுவுக்கு ஆதரவு தெரிவிப்போர், இந்த இணையதளத்தில் பதிவாகியுள்ள மனுவில் கையெழுத்திட வேண்டும். இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட ஒரு மாத காலத்திற்குள், இதற்கு ஒரு லட்சம் பேர் ஆதரவு தெரிவித்தால், இதை அதிபர் மாளிகை மறுபரிசீலனை செய்யும் என்பது அந்நாட்டு நடைமுறை. அமெரிக்காவில், எச் - 4 விசாவில் சிறப்பு அனுமதி பெற்று பணியில் இருப்பவர்களில், இந்தியர்களே அதிகம். எனவே, அதிபர் டிரம்பின் பரிந்துரை நடைமுறைக்கு வந்தால், 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.

அன்புமணியின் மகள் திருமணத்திற்காக ரூ.25 லட்சம் கேட்டார்கள்: குருவின் சகோதரி பேட்டி


 
மறைந்த பாமக முன்னாள் எம்எல்ஏவும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவின் சகோதரி மீனாட்சி மற்றும் குருவின் மகன் கனலரசன் ஆகியோர் சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
 

குருவின் சகோதரி மீனாட்சி கூறுகையில்,

அன்புமணியின் வளர்ச்சிக்கு எங்க அண்ணன் இடையூறாக இருந்தார் என்ற காரணத்திற்காகத்தான் குருவை படிப்படிபாக அழித்தார்கள். வெளியில் வராதீங்க. மீட்டிங்கில் பேசாதீங்கன்னு சொன்னாங்க. கடந்த பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் பாமக தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது, அதற்கு தி.நகருக்கு வந்தவரை வரவேண்டாம், வந்தால் ஜாதி கட்சி என பெயர் கெட்டுபோகும். வரவேண்டாம் என்று சொன்னார்கள்.திரும்ப வீட்டுக்கு வந்த எங்க அண்ணன், எங்க அப்பா இறந்த அன்றுகூட அழுதது கிடையாது. 


கண் கலங்கி இதற்கு மேல இந்த கட்சியில் நான் இருக்கணுமா என்று எங்க அக்கா தங்கச்சி நாலு பேருகிட்டேயும் கேட்டார். இதற்கு மேலேயும் இந்தக் கட்சியில் நீங்க இருக்க வேண்டாம். எங்களுக்குத் தேவை நீங்க மட்டும்தான் என்றோம். கட்சியில் இருந்து எதுவும் சம்பாதிக்கவில்லை. விவசாயம் செய்கிறோம். கஞ்ச குடிச்சாலும் கௌரவமாக வாழ்வோம் என்றோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரச்சாரத்திற்கே எங்க அண்ணன் போகவில்லை. கடைசி பத்து நாள்ல திடீரென நாலு பேர் நள்ளிரவு 12 மணிக்கு எங்க அண்ணன் காலில் விழுந்து பிரச்சாரத்திற்கு வருமாறு கெஞ்சினார்கள்.

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு செல்லலாம் என்று அழைத்தபோது குரு மறுத்துவிட்டதாக காடுவெட்டியில் நடந்த நிகழ்ச்சியில் அன்புமணி கூறினாரே?
 

ஜெயிலில் இருந்து வந்தபோதே எங்க அண்ணனின் உடல்நிலை சரியில்லை. அந்த சமயத்தில் அன்புமணியின் மகள் திருமணத்திற்காக ரூபாய் 25 லட்சம் வேண்டும் என்ற கேட்டார்கள். என்னிடம் ஏது பணம் என்று எங்க அண்ணன் சொன்னார். வட்டிக்காவது வாங்கிக்கொடுக்குமாறு கூறினார்கள். வட்டிக்கு வாங்கி கொடுத்து நான் எப்படி வட்டி கட்டுவேன் என்று எங்க அண்ணன் சொன்னார். 

அதனால அவுங்களுக்கும், எங்களுக்கும் ஆறு மாதம் பேச்சுவார்த்தையே இல்லாமல் இருந்தது. அதற்கு பிறகு கல்யாணத்திற்கு பத்திரிகை வைத்தார்கள். போய்ட்டு வந்தோம். உடல்நிலை சரியில்லாமல் யாரோ ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததை வைத்து இவரே போய் ஆபரேஷன் செய்துகொண்டு வந்தார். மத்திய மந்திரியாக இருந்த அன்புமணி ராமதாஸ் உங்களிடம் ரூபாய் 25 லட்சம் கேட்டதாக சொல்வது நம்புகிற மாதிரி இல்லையே? குருவின் தாயார் பேசுகையில், சிங்கப்பூரில் சிகிச்சை அளித்திருந்தால் குருவை காப்பாற்றி இருக்கலாம் என்றார்.