வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-04-14
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, April 26, 2019

ஒரு தாய் இந்த வேலைய செய்ததால் +2 மாணவி தற்கொலை




திருப்பூரில் ஸ்மார்ட் போன் வாங்கித் தர தாய் மறுத்ததால் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜா – மணிமேகலை தம்பதியினர். இவர்கள் இருவரும் பனியன் நிறுவனங்களில் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர். 



இவர்களுக்கு +2 படிக்கும் கோகிலா என்ற மகளும், 11ஆம் வகுப்பு படிக்கும் கோபிநாத் என்ற மகனும் இருந்தனர். தம்பதியினர் இருவரும் வேலைக்கு செல்வதன் காரணமாக குழந்தைகளை கவனிக்க முடியாததால் புதுக்கோட்டையில் உள்ள மணிமேகலையின் தாய் வீட்டில் தங்கி படித்து வந்தனர். 



இந்நிலையில் +2 தேர்வில் 325 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றதால் தனது தாயிடம் ஸ்மார்ட் போன் வாங்கித் தருமாறு கோகிலா கேட்டுள்ளார். அடுத்த வருடம் வாங்கித் தருவதாக தாய் கூறினதால் மனமுடைந்த கோகிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


28, 29 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை !




இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.



இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இது வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும், இந்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வரும் 30 ஆம் தேதி தமிழக பகுதியில் இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், புயல் கரையை கடக்கும் போது கடல் காற்று மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனால் மீனவர்கள் யாரும் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இன்றும், நாளையும் வட மாநிலங்களிலும், நாளை மறுதினம் கேரளாவிலும் சூழல் காற்று வீசக்கூடும் எனவும் அறிவித்துள்ளது. 



வரும், 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tuesday, April 23, 2019

[வீடியோ] அத்தனை ஹெவியான பெட்டியை தூக்கி கொண்டு போன.. சுடிதார் போட்ட பெண்.. கிட்ட போய் பார்த்தா!


திருவனந்தபுரம்: பச்சை கலர் சுடிதார், பிங்க் கலர் பேன்ட் அணிந்த பெண் ஒருவர் பெட்டி தூக்கி கொண்டு போவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் எல்லோரும் பதறி போய்விட்டனர்! நாட்டு மக்களின் ராயல் சல்யூட் இப்போது அவருக்குதான் சென்று கொண்டு இருக்கிறது!


நாளைக்கு கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் 3-ம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக அனைத்து வேலைகளும் அங்கு மும்முரமாக நடந்து வருகிறது. இப்படித்தான் திரிச்சூர் மாவட்டத்திலும் வாக்கு பதிவு மையங்களில் ஆயத்த பணிகள் நேற்று நடந்தது. இதில் அதிகாரிகளும் போலீசாரும் ஏராளமானோர் ஈடுபட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை லாரியிலிருந்து பூத்தில் பாதுகாப்புடன் இறக்கி வைத்து கொண்டிருந்தார்கள்.

அனுபமா

இந்த பணிகளை மாவட்ட கலெக்டரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான அனுபமா பக்கத்தில் நின்று கொண்டு கவனித்து கொண்டே இருந்தார். லாரிக்குள் இருந்து பெட்டியை இறக்கி தருகிறார்கள்.. ஆனால் அதை வாங்கி பூத்துக்குள் கொண்டு செல்ல ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் நின்றிருந்தார். இன்னொருவர் வந்தால்தான் பெட்டியை தூக்க முடியும். அதற்காக அவர் காத்து கொண்டிருந்தார்.

போலீஸ்காரர்

இதை பார்த்ததும் அனுபமா, கொஞ்சமும் யோசிக்காமல், பெட்டியை வாங்குவதற்கு லாரிக்கு பக்கத்தில் போய் நின்றுகொண்டார். அதாவது ஒரே ஒருவரால் பெட்டியை தூக்க முடியாது என்பதால் கை கொடுத்து அந்த போலீஸ்காரருக்கு உதவ முயன்றார்.

பதறிய அதிகாரிகள்

உடனே உள்ளிருந்து பெட்டி எடுத்து தரப்பட்டது. அதனை அனுபமாவும் அந்த போலீஸ்காரரும் தூக்கி கொண்டு உள்ளே போனார்கள். கலெக்டர் இப்படி திடீரென பெட்டியை தூக்குவதை பார்த்ததும் அங்கிருந்த மற்ற அதிகாரிகள் பதறி போய் விட்டனர். அலறியடித்து கொண்டு அருகில் ஓடிவந்தார்கள்.

குவியும் வாழ்த்துகள்

ஆனால், அவர்களை கையால் சைகை செய்து தடுத்து நிறுத்திவிட்டு, தானே பெட்டியை தூக்கி கொண்டு போனார். இது வீடியோவாக இணையத்தில் செம ஹிட்டடிக்க ஆரம்பித்தது. 'இளம் அதிகாரிக்கு வாழ்த்துகள்', 'இளம் அதிகாரிகள் சிலர் ஜனநாயகம் உயிர்ப்புடன்தான் இருக்கிறது'.. என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள். கூடவே வீடியோவை ஷேர் செய்தும் வருகிறார்கள்.

Monday, April 22, 2019

3 பிள்ளைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை..!




விழுப்புரம் மாவட்டம் சித்தாத்தூரில் 3பிள்ளைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  



உளுந்தூர்ப்பேட்டை அருகே சித்தாத்தூரைச் சேர்ந்த ராஜகுமாரிக்கும், குறிப்பிடபுரத்தைச் சேர்ந்த விஜேந்திரன் என்பவருக்கும் 9ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ராஜகுமாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 



காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிக் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். ராஜகுமாரியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது பெற்றோரும் உறவினர்களும் ஆசனூர் – சிறுவத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்திக் கலைந்துபோகச் செய்தனர்.


http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html

http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html

Sunday, April 21, 2019

வேர்க்கடலை கேரட் கிரேவி | Groundnut Carrot Gravy செய்முறை தமிழில்....


வேர்க்கடலை கேரட் கிரேவி | Groundnut Carrot Gravy செய்முறை தமிழில்....


Saturday, April 20, 2019

தன் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கை விற்று விட்டு ரயிலைப் பிடித்த ஜெட் ஏர்வேஸ் பைலட்


நிதிப்பற்றாக்குறை காரணமாக சேவை முற்றிலும் நிறுத்தப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பைலட் உள்ளிட்ட பணியாளர்கள் கடும் பணச்சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
பிற நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட தொழில் நுட்ப ஊழியர்கள் பலர் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க ரெயில் டிக்கெட்டுகளுக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேஷனல் ஏவியேட்டர்ஸ் கில்டின் கேப்டன் அசிம் வாலியானி கூறும்போது, "இன்று காலை சக பைலட்டிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் தனது விலை உயர்ந்த பைக்கை விற்று விட முடிவு செய்துள்ளதாக என்னிடம் தெரிவித்தார். 

பல ஊழியர்களும் தங்கள் தினசரி செலவுகளைக் கூட சந்திக்க முடியாத கஷ்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்" என்றார். ஜெட் ஏர்வேஸில் 15 ஆண்டுகளாக பணியாற்றிய சீனியர் பொறியாளர் ஒருவர் பலரும் கடும் பணக்கஷ்டத்தில் உழல்வதாகத் தெரிவித்தார், குறிப்பாக பைலட் ஒருவர் தன் சகோதரி திருமணச் செலவுகளுக்காக பலரிடமும் பணம் கேட்டு வருகிறார் என்றார். 

'கடந்த வாரம்தான் சக ஊழியர் மகன் சிகிச்சைக்காக நிதி திரட்டினோம், மருத்துவ பில்கள் லட்சக்கணக்கை தாண்டிய போதும், பையனைக் காப்பாற்ற முடியவில்லை' என்றார்.
இன்னொரு பெயரை வெளிடிட விரும்பாத ஊழியர் ஒருவர் கூறும்போது, சம்பளப்பாக்கியினால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் ஒரு ஊழியர் அவதிப்பட்டு வருவதைத் தெரிவித்தார்.

ஊருக்குச் சென்று குடும்பத்தினரைப் பார்க்கக் கூட ரயில் டிக்கெட் எடுக்க முடியாத நிலையில் சில கீழ்நிலை ஊழியர்கள் கஷ்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். குறைந்த சம்பளதாரர்கள் சேமிப்பு செய்ய முடியாததால் தற்போது மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றனர். ஸ்டேட் வங்கித் தலைமை வங்கிகள் கூட்டமைப்பு ஜெட் ஏர்வேசுக்கு ஏதாவது வழிகாட்டுதல் செய்தால்தான் ஊழியர்கள் நிலுவைச் சம்பளம் கிடைக்கும் நிலை உள்ளது.