Run World Media: 05/14/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, May 14, 2019

ஓசூர் கிராமத்தில் வீட்டு மனையை திருடி விற்ற கிராம நிர்வாக அலுவலர் - Osur Village VAO harassmentதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் ஓசூர் மேல் காலனியை சேர்ந்த உபகாரம் க/பெ சவுரியப்பன் இவர்களுக்கு 2000-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையால் வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது.


வீடு எதுவுமே கட்டாமல் இருந்ததால், இந்த வீட்டு மனையை எப்படியாவது நாம் பெறவேண்டும் என்ற நோக்கில் அதே ஊரைச் சேர்ந்தவர் ஒருவர் கிராம நிர்வாக அலுவலரைச் சந்தித்தார். பிறகு பேசிய ஒப்பந்தப்படி ₹1,00,000/- (ஒரு லட்சம்) பெற்றுக் கொண்டு நில ஆவணத்தில் திருத்தம் செய்து (VAO) மோசடி செய்துள்ளார்.மேலும் மோசடியை பற்றி தெரிந்த உபகாரம் கி.நி.அலுவவரிடம் கேட்ட போது நான் அப்படி ஏதும் செய்ய வில்லை என்றும் மீறி எதாவது பேசினால் உங்களை தடம் தெரியாமல் செய்து  விடுவேன் என்றும், என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார்.


ஆழ்ந்து விசாரித்த போது இதில் வட்டாட்சியர் மற்றும் தனி வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளரும் சேர்ந்து மோசடி செய்துள்ளார்கள். ஆகையால் இவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு புகார் செய்யப்படும்.
அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்படிப்பட்டவரா...?

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைக்காகவும், குற்றங்கள் நடைபெற்றால் விரைந்து விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டறிய உதவும் வகையிலும் பொதுமக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பிரதான பகுதிகளிலும், முக்கியமான சாலை சந்திப்புகளிலும் மற்றும் போக்குவரத்து நெரிசல்,பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராவை பொருத்தி சிறப்பாக குற்றத்தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதற்காகவும்,
சாலை விபத்துக்களை குறைக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்பினை ஏற்படுத்தி விபத்தை தவிர்க்க உதவும் எதிரொலிப்பு விளக்குகளை நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் பொருத்தி, பல்வேறு விதமான போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு செய்ததற்காகவும் பெருமதிப்பிற்குரிய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால், அச்சிறுபாக்கம் காவல் நிலையம், வட்ட ஆய்வாளர் *D.S.சரவணன்* அவர்கள் பாராட்டினை பெற்றுள்ளார்.கண்காணிப்பு கேமிரா, சாலை விபத்துகளை குறைக்கும் சிக்னல் விளக்குகள், பொருத்தியது மட்டுமின்றி, ஆங்காங்கு விழிப்புணர்பு வாசகங்களும், தமக்கு தொந்தரவு என நினைக்காமல், பொதுமக்கள் அடிக்கடி எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தன்னுடைய கைபேசி  எண்ணினை விளம்பரப்படுத்திதனது எண்ணினை வெளிப்படையாக ஆங்காங்கு முக்கிய இடங்களில் வைத்து   தனது சேவையினை செய்து வரும் இவரை போன்ற அலுவலர்களை     பொதுமக்களாகிய நாமும் பாராட்டி வாழ்த்துவோம்...


அவருடைய கைபேசி எண் :9443399764
இவரை போன்ற நல் மனிதர்களின் சேவை மேலும் தொடர, சிறக்க
தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும்   வாட்ஸ் அப் மூலம் தெரிவித்து ஊக்கமளியுங்கள்.
அவருடன் இணைந்து பணியாற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் இத்தருணத்தில் நாமும் நன்றியை தெரிவித்துக்கொள்வோம்.

இரண்டு திருமணம் செய்யாமல் ஒரு கணவனோடு வாழும் நடிகைகள் யார் யார்
கணவனை கழட்டிவிடாமல் பல ஆண்டுகளாக ஒரு கணவனோடு வாழும் நடிகைகள் யார் யார்:


1.நடிகை மீனா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் மீனா இவர் ஒரு திருமணம் செய்தார். இவருடைய வித்யாசாகர் ஆவர். விவாகரத்து வாங்காமல் கணவனுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். இது பாராட்டுதலுக்குரியத்தாகும். 

2.நடிகை ரம்யா கிருஷ்ணன்
தற்போது 48 வயதான புகழ் பெற்ற தென் இந்திய நடிகைதான் ராமயா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஆந்திராவை சேர்ந்த திரைப்பட இயக்குனரான கிருஷ்ணா வம்சியை திருமணம் செய்த்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

3.நடிகை ரோஜா
தென் இந்தியாவின் பல்வேறு மொழி சினிமாவில் நடித்து பிப்பலமான நடிகை தான் ரோஜா. இவர் தமிழ் திரைப்பட பிரபலமான ஆர்.கே.செல்வமணி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளார்.

4.நடிகை தேவயாணி
தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக திகந்தவர் தேவயாணி. பல்வேறு வெற்றி படங்களில் முன்னணி நடிகர்கர்களுடனும் நடித்துள்ளார்.தற்போது இவருக்கு 44 வயதாகிறது. இவர் திரைப்பட இயக்குனர் ராஜா குமாரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

5.நடிகை சிம்ரன்
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி சினிமாவில் நடித்து பிரபலமான நடிகை தான் சிம்ரன். தற்போது இவருக்கு 43 வயதாகிறது. மும்பையை சேர்ந்த நடிகையாவார். தீபக் பாக்க என்பவரைதிருமணம் செய்து கொண்டார் இவர்.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்