வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-05-12
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, May 23, 2019

இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா

அமெரிக்காவில் சூப்பர் மார்கெட் கடைகளை நடத்திவரும் பிரபலமான வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஃபிளிப்கார்ட் இந்தியாவில் சில்லறை விற்பனையில் ஈடுபடும் பொருட்டு மளிகை கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

 தற்போது ஆன்லைன் விற்பனையில் அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக விளங்கும் ஃபிளிப்கார்ட், இந்தியாவில் மளிகை கடைகளை திறக்க முன்வந்துள்ளதால், இதன் போட்டி நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சியில் எதிர்பார்த்த வெற்றியை அடையவேண்டுமானால், இந்தியர்களின் முதலீடுகள் மட்டும் போதாது என்பதால், மத்திய அரசு அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீடுகளை ஊக்குவித்து வருகிறது. காப்பீடு முதல் உள்கட்டமைப்பு என அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீடுகளை வரவேற்றுள்ளது.

இதில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக அந்நிய முதலீடுகள் இருந்தால் அது என்றைக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் என்று சொல்லி பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மத்திய அரசு பெரும்பாலான துறைகளில் 100 சதவிகித அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
 ஏற்கனவே காப்பீட்டுத் துறையில் 100 சதவிகித அந்நிய முதலீடுகளை குவித்துள்ளன. மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் பெருமளவில் அந்நிய முதலீடுகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன.

 அதோடு பாதுகாப்புத் துறையிலும் 100 சதவிகித அந்நிய முதலீகளுக்கு மத்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டே அனுமதித்துவிட்டது. கடந்த 2018ஆம் ஆண்டில் சில்லறை விற்பனையில் 100 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்துவிட்டது. இதையடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவில் அதிக அளவில் குவித்து வருகின்றன.

முதல் கட்டமாக அமெரிக்காவின் பிரபல வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஃபிள்ப்கார்ட் இந்தியாவில் சில்லறை விற்பனைக் கடைகளை திறப்பதற்கு முன்வந்துள்ளது. ஃபிள்ப்கார்ட் தற்போது ஆன்லைன் மூலமாக அனைத்து விதமான பொருட்களையும் மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.

 சில்லறை விற்பனைக் கடைகளை திறப்பதால் இன்னும் கூடுதலாக விற்பனை செய்ய முடியும் என்று முடிவெடுத்துள்ளது. வால்மார்ட் நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் தனது சூப்பர் மார்கெட் கடைகளை திறந்துள்ளது. இந்தியாவிலும் மும்பை, லக்னோ மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தனது கிளைகளை திறந்துள்ளது. இதில் அனைத்து விதமான பொருட்களையும் கொள்முதல் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 
சில்லறை விற்பனையில் 100 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு கதவை திறந்துவிட்டுள்ளதால், வால்மார்ட் நிறுவனமும் தனது அங்கமான ஃபிளிப்கார்ட் மூலமாக இந்தியாவில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் சில்லறை விற்பனையில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இந்தியாவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் சில்லறை விற்பனையில் ஈடுபட்டுவருகிறது. மேலும் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகியவற்றுக்கு போட்டியாக ஆன்லைன் விற்பனையில் ஈடுபடப்போவதால், அதற்கு போட்டியாக ஃபிளிப்கார்ட் நிறுவனமும் சில்லறை விற்பனையில் ஈடுபடப்போவதாக தெரிகிறது.
 ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான அமேசான் நிறுவனம் இந்தியாவில் சுமார் 3ஆயிரத்து 485 கோடி ரூபாய் முதலீட்டில் சில்லறை விற்பனை கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளதை அடுத்தே ஃபிளிப்கார்ட் நிறுவனமும் இந்தியாவில் மளிகைக் கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது.... டிவி சேனல்களில் அபாய குரல் எழுப்பும் பாகிஸ்தானியர்கள்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமாகக்கூடாது என பாகிஸ்தானியர்கள் அங்குள்ள ஊடகங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவர் வந்தால் பாகிஸ்தானுக்கு ஆபத்து என்ற ரீதியில் பலர் கருத்துக்களை சொல்லி உள்ளார்கள்.



 நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடந்து மே 19ம் தேதி நிறைவடைந்தது. இதில காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும் பாஜக தலைமையில் ஒரு அணியும் மோதின.மாநில கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் தனித்தும் போட்டியிட்டு உள்ளன. 
 தேர்தலுக்கு பிந்தைய பல கருத்துக்கணிப்புகளில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இங்குள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியில் கலகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மோடிக்கு எதிர்ப்பு 
 அதேநேரம் பாகிஸ்தான் மக்களும் இந்தியாவில் நடக்கும் தேர்தல் மற்றும் கருத்துக்கணிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என பாகிஸ்தானியர்கள் பலரும் விரும்புகிறார்கள்.


மோடி தாக்குதல்
இதுதொடர்பாக பாகிஸ்தான் ஊடகங்களில் விவாதங்கள் நடந்து வருகிறது. அதில் பலரும் மோடி மீண்டும் பிரதமாக வந்தால் பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவார் என்று கூறி, அது பாகிஸ்தானுக்கு நல்லதில்லை என்ற ரீதியில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


மோடி வரமாட்டார்
லாகூரைச் சேர்ந்த சாஹி அலாம் என்பவர் பாகிஸ்தான் டிவிசேனலுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவார் என்றார். இதேபோல் ஆசாத் என்பவர் அளித்த பேட்டியில், மோடி மீண்டும் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. அவர் குறைந்த தொகுதிகளில் வெல்லவே வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் அது பாகிஸ்தானுக்கு நல்லது என்றார்.


விரும்பும் பாகிஸ்தான் நபர் 
லாகூரைச் சேர்ந்த பிசினஸ்மேன் ரியாஸ், இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கும், பாகிஸ்தானில் பிறந்த வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கும் இந்த விசயத்தில் சிந்தனையில் மாறுபட்டு இருக்கிறார்கள். 


எங்களை பொறுத்தவரை மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும். பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதோடு, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.


எதிர்க்கும் மக்கள் 
 இதனிடையே பாகிஸ்தான்
 பிரதமர் இம்ரான்கான், இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் வந்தால் காஷ்மீர் உள்பட பிரச்னையில் நிரந்த தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார். ஆனால் அங்குள்ள மக்கள் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆபத்து என்ற ரீதியில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


ட்ரூகாலர் அப்ளிகேஷனை உடனே டெலிட் செய்யுங்கள்: டேட்டாஸ் விற்பனை- அதிர்ச்சி தகவல்.!

தற்சமயம் புதிய தகவல் வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் ட்ரூகாலர் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் பயன்பாட்டாளர்களின் தகவல் விற்பனை செய்யப்பட்டுள்ளது என செய்தி வந்த வண்ணம் உள்ளது.



இந்திய ஸ்மார்ட்போன் பயன்பாட்டளர்களில் 60சதவிகதிம் முதல் 70சதவிகிதம் வரையிலான மக்கள் ட்ரூகாலர் அப்ளிகேஷனை பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் உங்களுக்கு போன்ற செய்யும் நபர் யார், என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த அப்ளிகேஷன் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ட்ரூகாலர் நிறுவனம்
பின்பு மக்கள் இதற்கு அளித்த ஆதரவை கண்ட ட்ரூகாலர் நிறுவனம், மேலும் சில அப்டேட்களை செய்தது, அதன்படி பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியையும் ட்ரூகாலர் அறிமுகப்படுத்தியது.


பல லட்சம் பேர் பணப்பரிவர்தனை செய்து வருகின்றனர் 
 இந்த அப்ளிகேஷன் மூலம் பல லட்சம் பேர் பணப்பரிவர்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் பெயர் அறிய முடியாத சில சைபர் செக்யுரிட்டி கண்காணிப்பாளர்கள் ட்ரூகாலர் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளை கவனித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


விற்பனை
மேலும் அதிக அளவில் பணப்பரிவர்ததனை செய்யும் நபர்களின் தொலைபேசி எண், இ-மெயில் ஐடி மற்றும் தனிப்பட்ட தகவல்களை சமூக வலைத்தள மோசடி கும்பல்களிடமும் இணையதள பிரோக்கர்களிடமும் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தத் தகவல்கள் ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


ட்ரூகாலர் நிறுவனம் மறுத்துள்ளது 
 ஆனால் இந்த தகவல்களை ட்ரூகாலர் நிறுவனம் மறுத்துள்ளது, தங்கள் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் எதவும் ஹேக்கர்களார் திருடப்படவில்லை என்றும் அவை யாருக்கு விற்பனை செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. பின்பு பணப்பரிவர்தனை செய்யும் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி கூறியுள்ளது.

செஞ்ச லட்டெல்லாம் வீணா போச்சே.. அதிமுகவின் பரிதாபம்.. மறுபக்கம் உற்சாகத்தில் திமுக!

எதுக்கு ஓவரா ஆட்டம் போடணும், எதுக்கு இப்படி நல்ல முடிவுக்காக காத்து கிடக்கணும்? அதிமுகவுக்கு வந்திருக்கிற நிலைமையை பார்த்தால் பெரிய பரிதாபமாக இருக்கிறது.


நாடு முழுவதும் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் காலை 8 மணியில் இருந்தே ஒருவித பரபரப்பு தென்பட்டு வருகிறது. 
 தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல, அதிமுக கூட்டணி சற்று முன்பாக வந்த நிலவரப்படி பின்னடைவைதான் சந்தித்து வருகிறது.




ஜெ. தந்த தெம்பு பொதுவாக, தேர்தல் முடிவுகள் என்றால், காலை 9 மணிக்கே ஆட்டம், பாட்டம், என களை கட்டிவிடுவார்கள் தொண்டர்கள். அதிலும் பெண் தொண்டர்கள் புடவையை இழுத்து சொருகி டான்ஸ் ஆட ஆரம்பித்துவிடுவார்கள். இதற்கெல்லாம் காரணம் ஜெயலலிதா இருந்த தெம்பு!


லட்டுகள்
 ஆனால் இவை எல்லாம் இப்போது அடங்கி காணப்படுகிறது. அதிமுக தரப்பிலோ கூட்டணி கட்சியினர் தங்களது முடிவுகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். சும்மா இல்லை.. ஒரு தட்டில் லட்டு வைத்து காத்து கொண்டிருக்கிறார்கள். பக்கத்திலேயே ஒரு சேரில் ஜெயலலிதா படத்தை வைத்து, லட்டுவையும் வைத்து உள்ளனர்.


ஈயாடுகிறது
எப்போது நல்ல முடிவு வருகிறதோ, அடுத்த செகண்ட்டே ஸ்வீட் எடு கொண்டாடு என்ற ரேஞ்சில் காத்து உள்ளனர். வழக்கமான எந்த உற்சாகமும் இல்லாமல் உள்ளது சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகம். ஜெயலலிதா இருந்தபோதே, வாக்கு ஒரு பக்கம் எண்ண ஆரம்பிக்கும்போதே தொண்டர்கள், இன்று குவிய தொடங்குவார்கள். ஆனால் ஈயாடுகிறது தலைமை அலுவலகம்.


வெறிச்சோடியது
ஒரு களையும் இல்லை, ஆர்ப்பாட்டமும் இல்லை, ஆட்டம், பாட்டம், வெடி, கூத்து எதுவும் இல்லாமல், வெறிச்சோடி உள்ளது அதிமுக தலைமை! ஆளுக்கு ஒருகையில் செல்போன் வைத்து கொண்டு, தேர்தல் முடிவுகளை பார்த்து வருகிறார்கள். இதை அவ்வழியாக செல்பவர்கள் பரிதாபத்துடன் பார்த்து கொண்டு செல்கின்றனர். "கொஞ்சநஞ்சம் பேச்சா பேசினாங்க இந்த அமைச்சர் பெருமக்கள்" என்று அவர்களின் மைன்ட் வாய்சும் சேர்ந்து நம்மால் கேட்க முடிகிறது!

Wednesday, May 22, 2019

ஆபீஸ் போற பெண்களா நீங்க? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..!

ஒரு அலுவலகத்தில் எத்தனை பேர் வேலை செய்தாலும் ஒரு குழுவிற்கான தலைவராக இருப்பது எப்பவுமே தனிச் சிறப்பு தான். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. ஏனெனில், ஒரு குழுவை, அதுவும் மாறுபட்ட மனநிலைக் கொண்ட பணியாளர்களை சரிவர இணைத்து இயக்கும் தலைமைப் பண்பு என்பது கூடுதல் திறனே.

அதிலும், குறிப்பாக நங்கள் ஒரு பெண் பணியாளராக இருந்தால் உங்களின் மீதான ஆதிக்கமும், எதிர்பார்ப்புகளும் இன்னும் கூடுதலாகவே இருக்கும். அலுவலக சூழலில் கூட்டத்தில் ஒருவராக இருந்து தனியே தலைவராக உருவெடுக்கும் பெண் பணியாளர்களுக்கான சில சிறந்த வழிமுறைகள் இதோ.

சுய மதீப்பீடு!

உங்களுக்கான தனி மதிப்பீட்டை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். எப்போதும் ஒரு இலக்கை நிர்ணயித்து அதனை செயல்படுத்திக் காட்டுங்கள். குறிப்பாக, உங்களது மேலாளர் உங்களுக்கு என நிர்ணயித்துள்ள இலக்கை விட கூடுதலாக அமைத்து செயல்படுங்கள்.
 உங்களது குழுவையும் செயல்படுத்த ஊக்குவியுங்கள். இதனை நீங்கள் அடையும் போது உங்கள் திறனும், இலக்குகளைக் கையாளும் விதமும் உங்களது தலைமைப் பண்பை தனித்துக் காட்டும்.

புதிய உத்திகள்!

பிற பணியாளர்கள் செய்வதைப் போலவே தொடர்ந்து செய்து கொண்டிருக்காமல் ஏதேனும் புதிய திட்டத்தை செயல்படுத்துங்கள். அணித் தலைவர் என்பவர் புதிதாக ஏதாவது ஒன்றை செயல்படுத்தி அதில் தனித்து காட்ட வேண்டும். இதையே உங்களது குழுவும் விரும்பும்.

முடிவெடுப்பதில் முன்னுரிமை!

ஏதேனும் ஓர் விசயத்தை செய்யும் முன் முடிவெடுப்பதை முன்னுரிமையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களது உயரதிகாரிக்காத காத்திருப்பதைக் காட்டிலும் நீங்கள் எடுத்த முடிவை உயரதிகாரி ஏற்கும் வகையில் செயல்படுத்துங்கள்.
 ஒரு வேலை உங்களது உயர் அதிகாரி எடுக்கும் முடிவு தறவாக இருந்தால் தயங்காமல் அதனை தெரிவித்து விடுங்கள். அலுவலக நிர்வாகமும் இதனைத்தான் விரும்பும். உங்களது தலைமைப் பண்பையும் இது ஊக்கத்தோடு காட்டும்.

திறன் மேம்பாடு! 

ஒரு வேலை ஒதுக்கியுள்ளார்கள், அதனை சிறப்பாக செய்து கொண்டே இருக்கிறேன் என்று இல்லாமல் அடுத்த வேலையை நோக்கி நகருங்கள். அல்லது உங்களது வேலையிலேயே கூடுதல் திறனை இணையுங்கள். புதிதுபுதிதாக கற்றுக் கொண்டே இருங்கள். 
அவற்றை சக பணியாளர்களிடமும் வெளிப்படுத்துங்கள். நீங்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றால் உங்களை விட கற்ற ஒருவரால் நீங்கள் பின்தள்ளப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொறுப்புடன் செயல்படுங்கள்!

எனக்குறிய வேலையை முடிப்பது மட்டும் தான் வேலை என்று இல்லாமல் உங்களைச் சுற்றியுள்ள, உங்களது அணியில் உள்ள பிற பணியாளர்களின் வேலையையும் முடிக்க உதவுங்கள். 
செய்த வேலைக்கு ஊதியம் என்று இல்லாமல் இது என் நிறுவனம் என்ற மனநிலையை ஏற்படுத்துங்கள். இங்கே ஏற்படும் லாபத்திலும், நஷ்டத்திலும் எனக்கும் பங்குண்டு என உணர்ந்தால் மட்டுமே ஒரு அலுவலகத்தை வயர்ச்சியை நோக்கிநகர்த்த முடியும்.

கற்றுக்கொள்ளுங்கள்!

 அன்றாடம் அலுவலகத்திற்குச் செல்கிறேன், பணி முடிந்தவுடன் வீடு திரும்புகிறேன் என்று இல்லாமல் வேலை நேரத்திலேயே புதிது புதிதான விசயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.
 உங்களது பணிக்கு தொடர்புடைய அல்லது அலுவலகத்தில் பணியாற்றும் வேற்று துறையினர், வேறு குழு உறுப்பினர்களிடமும் நட்புடன் பழகுங்கள். அவர்களது பணி குறித்தும் கற்றுக் கொள்ளுங்கள்.

எதற்கும் தயங்காதீர்கள்! 

 இது அலுவலகங்களில் பொதுவாக நடக்கும் ஒன்றுதான். ஏதேனும் புதிதாக செய்து தவறாகிவிட்டால் மேல் அதிகாரி திட்டுவார், வேலைக்கு குந்தகம் ஏற்பட்டு விடும் என்று பயந்தே புதிய வேலையை செய்யாமல் இருப்போம். அவ்வாறு இல்லாமல் தைரியத்துடன் உங்களது பணியை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துங்கள். எடுத்த புதிய காரியத்தில் வெற்றியை நிலைநாட்டுங்கள். இது உங்களது தலைமைப் பண்பை அதிகரிக்கும்.


சேலத்தில் பட்டப்பகலில் வீட்டின் முன்பு விளையாடிய 3 வயது ஆண் குழந்தை கடத்தல்..



சேலம் மாநகரின் மைய பகுதியில் பட்டபகலில் சாலையோரம் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 சேலம் மாவட்டத்தின் மையப்பகுதியான சத்திரம் அருகே உள்ள முள்ளாகாடு பகுதியில் வசித்து வருபவர்கள் பாலாஜி, நித்யா தம்பதியினர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள்.
 இந்நிலையில் வீட்டிற்கு வெளியே சாலையோரம் விளையாடி கொண்டிருந்த மூன்று வயது ஆண்குழந்தை யோகேஸ்வரனை அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் கடத்தி சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பதறிய பெற்றோர் 
இதையறிந்த பெற்றோர் பதறிபோய் செவ்வாய்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் குழந்தை கடத்தல் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துணை ஆணையர் ஆய்வு
மேலும் மாநகரம் முழுவதும் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 
 மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாநகர காவல் துணை ஆணையர் தங்கதுரை நேரில் பார்வையிட்டு குழந்தையை மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

போலீசார் திணறல் 
 மேலும் இந்த சாலையில் மாநகர காவல்துறை சார்பில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்காமல் இருப்பதால் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் திணறி வருகின்றனர். 

அதேநேரத்தில் பாலாஜி- நித்யா தம்பதிக்கு எதிரிகள், பகையாளிகள் உள்ளனரா என்றும், குழந்தை கடத்தலில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பட்டப்பகலில் 
 சேலம் மாநகரின் மையப்பகுதியில் பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சாலையோரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது... 200 பக்தர்கள் அங்கபிரதட்சணம்

தண்டு மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர். 



தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. சென்னை மற்றும் பல மாவட்டங்களில் குடிநீருக்காக பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து தமிழக அறநிலையத்துறை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும், மழை வேண்டி யாகம் நடத்த கடந்த மாதம் 26-ந் தேதி உத்தரவிட்டு, சுற்றறிக்கை வெளியிட்டது. 

 இதையடுத்து, மழை பெய்து வறட்சி நீங்க வேண்டி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் இசை வாத்தியங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சிறுபேர்பாண்டி கிராமத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர்.

 கடந்த மூன்று நாட்களாக வைகாசி மாத திருவிழா நடைபெற்று வரும் நிலையில்,மழை வேண்டி கோயில் வளாகத்தில் இன்று அங்கப்பிரதட்சணம் நடத்தப்பட்டது. சில பக்தர்கள் அலகு குத்தியும், சாடல் குத்திக்கொண்டு ராட்டினத்தில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவினை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.


Tuesday, May 21, 2019

68 வயது நடிகரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் 26 வயது பிரபல நடிகை...

பிரபல பாப் பாடகி செலினா கோம்ஸ், ஹாலிவுட் நடிகர் பில் முர்ரேயை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல பாப் இசை பாடகியும், இளம் நடிகையுமான செலினா கோம்ஸ்க்கு ரசிகர்கள் ஏராளம். அடிக்கடி இவரது காதல் செய்திகள் இணையத்தில் உலா வருவதுண்டு.  பிரபல பாப் பாடகர் ஜெஸ்டின் பீபருடன் சில நாட்கள் லிவிங்-டுகெதரில் இவர் இருந்ததாகக் கூட செய்திகள் வந்தது. இந்நிலையில், தற்போது இவர் தனது காதலரை அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் காதலிப்பது வேறு யாரையுமல்ல, தற்போது 68 வயதாகும் பிரபல ஹாலிவுட் நடிகர் பில் முர்ரேயைத் தான்.


கேன்ஸ் திரைப்பட விழா:

 கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு பில் முர்ரேவுடன் தான் செலினா வந்திருந்தார். அப்போதே இது தொடர்பான யூகங்கள் உலா வந்தது. அதனைத் தொடர்ந்து தனது காதலை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் செலினா.



விரைவில் திருமணம்:

அதோடு விரைவில் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். செலினாவின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிஜமாகவே அவர் பில் முர்ரேவைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா இல்லை காமெடிக்காக அப்படிச் சொன்னாரா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.


73லட்சம் பேர்:

இந்தப் பதிவோடு கேன்ஸ் திரைப்பட விழாவில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அவற்றை இதுவரை சுமார் 73 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். சுமார் 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமெண்ட் பதிவு செய்துள்ளனர். அதில், காமெடி செய்யாதீர்கள் என்று சிலரும், சில ரசிகர்கள் செலினா கோம்ஸ் பதிவு கோபத்தை வரை வைக்கிறது என்றும் கூறி வருகிறார்கள்.


பாப் பாடல்: 

தற்போது டெட் டோண்ட் டைய் (dead dont die) என்ற படத்தில் நடித்து வருகிறார் செலினா. அதோடு, இவர் பாடிய பாப் பாடல் ஒன்றும் விரைவில் வெளியாக உள்ளது. செலினாவிற்கு தற்போது 26 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Sunday, May 19, 2019

தலைகீழாக கையெழுத்திட்ட சூலூர் அதிமுக வேட்பாளர் கந்தசாமி - முதல் கோணல் முற்றிலும் கோணல்


தமிழகத்தில் 4 தொகுதிகளில் இன்று (19/05/2019) இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமி  வாக்குப்பதிவு செய்யும் போது தனது கையொப்பத்தினை தலைகீழாக போடும் காட்சி மிகவும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
 
ஒரு நோட்டு நேராக உள்ளதா என்பதையே தெரியாமல் கையொப்பமிடும் இவர் பொதுமக்களின் பிரச்சனைகளில் எப்படிப்பட்ட கையெழுத்திடுவார் என நீங்களே யோசியுங்கள் மக்களே. வேட்பாளர்களுக்கு என ஒருசிறப்பான தகுதியினை மாற்றும் வரை இந்த நிலை தான் தொடரும். புகைப்படங்கள் கீழே...






http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html

http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html

Friday, May 17, 2019

ஏசி விபத்தில் 3 பேர் பலியான விவகாரம்: கூலிப்படையை ஏவி மூத்த மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம்!

திண்டிவனம் அருகே ஏசி விபத்தில் 3 பேர் பலியான விவகாரத்தில் கூலிப்படையை வைத்து மூத்த மகனே குடும்பத்தை தீர்த்துக்கட்டியது அம்பலமாகியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் 60 வயதான ராஜி. இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதிக்கு இவர்களுடைய மகன்கள் கோவர்த்தனன்(30), கவுதம்(27). கலைச்செல்வியும், கவுதமும் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தனர். கோவர்த்தனன், திண்டிவனம் நகர அ.தி.மு.க. மாணவர் அணி தலைவராகவும், திண்டிவனம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். கோவர்த்தனனுக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ரத்தக்கறை 
14ம் தேதி இரவு கோவர்த்தனனும், அவருடைய மனைவியும் வீட்டில் உள்ள ஒரு அறையிலும், ராஜி தனது மனைவி மற்றும் 2வது மகனுடன் மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர். மறுநாள் அதிகாலையில் ஏ.சி. எந்திரம் வெடித்து தீப்பிடித்ததால் கலைச்செல்வியும், கவுதமும் அறையில் உடல் கருகி இறந்ததாக கூறப்பட்டது. ராஜி, வீட்டின் வராண்டா பகுதியில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே ரத்தம் உறைந்து கிடந்தது.


மூத்த மகன் 
இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கோவர்த்தனன் போலீசாரிடம் கூறுகையில், 6 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.சி. எந்திரம் வாங்கி இருந்ததாகவும், இதுவரை அதை சர்வீஸ் செய்யாததால் மின்கசிவு ஏற்பட்டு, ஏ.சி. எந்திரம் வெடித்து இருக்கலாம் என்று கூறினார்.


கிடுக்கிப்பிடி விசாரணை  
ஆனால் ஏ.சி. எந்திரம் வெடித்த அறையில் கிடந்த 2 மண்எண்ணெய் கேன், ரத்தக்கறை, கழிவறையில் இருந்த வாளியில் பெட்ரோல் வாசனை உள்ளிட்டவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவர்த்தனனை கைது செய்த போலீசார் தனி அறையில் வைத்து நேற்று இரவு முதல் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.


செல்போன் ஆய்வு  
மேலும் கோவர்த்தன் மற்றும் அவரது மனைவி தீபாகாயத்ரியிடம் செல்போனில் பேசியவர்கள் மற்றும் உறவினர்களை அழைத்தும் போலீசார் விசாரித்து வந்தனர். அதுமட்டுமல்லாது, கொலை தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
குடும்பத்தை தீர்த்துக்கட்டிய மகன் 
விசாரணையில் 3 பேர் உயிரிழந்தது, திட்டமிடப்பட்ட கொலையே என முதலில் போலீசார் உறுதிபடுத்தினர். இந்நிலையில் மூத்த மகனே சொத்துக்காக கூலிப்படையை வரவழைத்து தாய், தந்தை மற்றும் தம்பியை கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் கூட பாஸ் ஆகல... அதிர்ச்சியில் அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை

நடப்பாண்டிற்கான பிஇ, பி.டெக் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்ப பதிவு மே 2 ஆம் தேதி துவங்கி வரும் மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


இந்நிலையில், மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டதில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.




பொறியியல் கல்லூரிகள் 

நாடு முழுவதும் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை அந்தந்த மாநில பல்கலைக் கழகங்கள் மூலமாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் அங்கீகாரம் பெற வேண்டும். அதன்படி, 2019-20 -ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள 537 பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழக குழு நடத்திய ஆய்வில் உரிய விளக்கம் அளிக்கத் தவறிய 92 பொறியியல் கல்லூரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பூர்த்தி செய்யாத கல்லூரிகள் 

பொறியியல் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றைக் கணக்கில் கொண்டே அனுமதி வழங்கப்படும். அதன்படி, உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத தமிழகத்தில் செயல்பட்டு வரும் 250 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை சார்பில் அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய கால அவகாசமும் வழங்கப்பட்டது.


கண்டுகொள்ளாத கல்லூரிகள் 

நிபந்தனைகளை உரிய முறையில் பூர்த்தி செய்த மேலும் 158 பொறியியல் கல்லூரிகளின் 421 இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. மீதமுள்ள 92 பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய கால அவகாசத்துக்குள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமலும், உரிய விளக்கமும் அளிக்காமலிருந்துள்ளது.


மாணவர் சேர்க்கை குறைப்பு:

அவ்வாறு உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 92 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் 125 பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளில் 2019-20 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 53 இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளத




முழுத் தடை மேலும்

 குறிப்பிட்ட 92 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 122 எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பி.இ, பி.டெக் கலந்தாய்வு
 இதனிடையே, 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான பிஇ, பி.டெக் பொறியியல் படிப்புக்கு மாணவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 2 ஆம் தேதி துவங்கி வரும் மே 31-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.


முதல் மூன்று இடங்கள் 

 2018 ஆம் ஆண்டு கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தினை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் சேலம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி, கோவை பிஎஸ்ஜி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, நாமக்கல் விவேகானந்தா இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் ஆகியவை முதல் மூன்று இடங்களை பெற்றுள◌ை


ஒருவர் கூட தேர்ச்சி இல்லை 

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகித பட்டியலில் தமிழகம் முழுவதும் 481 பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். இதில் குறிப்பிட்ட 6 கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதிய 682 மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது அண்ணா பல்கலைக் கழக தரவரிசைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 74 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்க விகிதத்தில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தரமான கல்லூரிகள்?

 கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 150 கல்லூரிகள் 50 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், நவம்பர் மாத தேர்வு முடிவுகளில் தரமான கல்லூரிகள் என சான்றளிக்கப்பட்ட 59 கல்லூரிகள் மட்டுமே 50 சதவிகிதம் தேர்ச்சியடைந்துள்ளன. மிகவும் தரமான கல்லூரிகள் என வகைப்படுத்தப்பட்ட கல்லூரிகளில் 85.57 சதவிகிதம் பேர் தேர்ச்சி 
பெற்றுள்ளனர்.


50 சதவிகிதத்திற்கும் கீழ் 

482 பொறியியல் கல்லூரிகளில் 422 கல்லூரி மாணவர்கள் 50 சதவிகிதத்திற்கும் கீழே தேர்ச்சி பெற்றுள்ளன. 177 கல்லூரி மாணவர்களில் 50 முதல் 25 சதவீதத்திற்கும் இடைப்பட்ட தேர்ச்சியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


சரிவைச் சந்திக்கும் பொறியியல் துறை?

சமீப காலமாகவே தமிழகத்தில் பொறியியல் துறையின் மீது மோகம் குறைந்து கலைத் துறையின் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே உள்கட்டமைப்பு வசதிகள் அற்ற பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாத சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை விதித்து அண்ணா பல்கலைக் கழகம் அதிரடியாக அறிவித்தது. மேற்கண்ட இந்த முடிவுகளானது தமிழகத்தில் பொறியியல் கல்வியைச் சீரமைக்க வேண்டியதன் கட்டாய அவசியத்தையே விளக்குகிறது.

குழந்தையை எளிய முறையில் தூங்க வைப்பது எப்படி?


தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம். குழந்தைகளை தூங்க வைப்பது பெரும் கஷ்டம் என இப்போதைய பெற்றோர் சொல்கின்றனர்.


தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம். குழந்தையின் தூக்க நேரத்தை முதலில் கவனியுங்கள். அந்த தூக்க நேரத்தில் அதிகமாக குழந்தைக்கு விளையாட்டு காட்ட கூடாது. குழந்தையை தூங்க வைக்கும் முயற்சியில் தான் இருக்க வேண்டும்.


தூங்கும் நேரத்தில் குழந்தைக்கு விளையாட்டு காட்டினால் குழந்தைகள் தூங்காமல் சுறுசுறுப்பாகி விடுகின்றனர். பின்னர் தூக்கம் கலைந்துவிடும். தூங்கும் நேரத்திலும் அதற்கும் முன்னும் குழந்தையிடம் விளையாட கூடாது.
சிறு குழந்தைகள் நன்கு பால் குடித்தால் தூக்கம் வந்துவிடும். சில குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்கிவிடும். பால் குடித்து கொண்டே தூங்கிவிடும் குழந்தையை லேசாக கால் கட்டைவிரலை ஆட்டிவிட்டாலோ சுண்டிவிட்டாலோ குழந்தை மீண்டும் பால் குடிக்கும்.

பால், குழந்தைக்கு போதுமானதா எனத் தாய் கண்டறிந்த பின் குழந்தையை தூங்க விடலாம். சரியாக பால் குடிக்காத குழந்தைகள் பின் சீக்கிரமே பசிக்காக அழத் தொடங்கிவிடும்.

* இரவில் வயிறு நிறைய பால் கொடுப்பது நல்லது. இதனால் குழந்தைகள் நன்கு தூங்கும்.

* தாய்ப்பால் கொடுப்பவர்கள், புட்டிப்பால் தருபவர்கள் லைட்டை அணைத்து விட்டு இருளில் பால் கொடுக்கலாம். அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள லைட்களைப் பொருத்திய ரூமில் பால் தரலாம்.

* வெளிச்சம் அதிகமாக உள்ள இடத்தில் குழந்தையை தூங்க வைக்க கூடாது.

* குழந்தைகளின் தூங்கும் இடத்தை அடிக்கடி மாற்றகூடாது. ஒரே இடத்தில் தூங்க வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

* லேசாக குழந்தையை ஆட்டி தாலாட்டு பாடலாம்.

* சத்தம் போட்டு கொஞ்சினால், குழந்தையின் தூக்கம் களையும்.

* மெதுவாக குழந்தையை வருடிவிட்டாலும் குழந்தை தூங்கும்.

* குழந்தையை தூங்க வைக்க முதுகில் லேசாக தட்டி கொடுக்கலாம்.

* ஈரத்துணி, ஈர நாப்கினை மாற்றி உலர்ந்த துணி, நாப்கின்னை அணிந்து தூங்க வைத்தால் குழந்தை உடனே தூங்கும். 

சட்டக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை 2019, விழுப்புரத்தில் விண்ணப்பம் விநியோகம்


விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் நேற்று துவங்கியது.அதன்படி, எல்.எல்.பி., 5 ஆண்டு சட்ட படிப்புக்கு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 60 சதவீதமும், மற்ற பிரிவினர் 70 சதவீதமும் மதிப்பெண் பெற்று இருத்தல் வேண்டும்.


விண்ணப்பம் பெற இந்தியன் வங்கி கிளைகளில், கட்டணமாக 1000 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் 500 ரூபாய் செலுத்த வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 31ம் தேதிக்குள், சேர்மன், லா அட்மிஷன் 2019-20, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் லா யுனிவசர்சிட்டி, பூம்பொழில், நெ.5, டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சென்னை-600 028 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விழுப்புரத்தில் திரு.வி.க., வீதியில் தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வரும் அரசு சட்டக் கல்லுாரியில், மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் நேற்று துவங்கியது. கல்லுாரியின் முதல்வர் முருகேசன், விண்ணப்ப விநியோகத்தை துவக்கி வைத்தார்.

மனைவிக்கு 'டார்ச்சர்' கணவனுக்கு நடந்தத பாருங்க...


திருக்கோவிலுார், கீழையூர், தாசர்புரத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 30; இவரது மனைவி தமிழ்மணி, 24; கடந்த 2011ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. மூன்று பிள்ளைகள் உள்ளனர்.


சக்கரவர்த்திக்கு பூமாரியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனை கண்டித்த தமிழ்மணியை, சக்கரவர்த்தி அவரது தாய் கலா, அருள்ஜோதி ஆகியோர் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் சக்கரவர்த்தி உட்பட மூவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தேர்தல் முடிவு வரும் முன்பே எம்பியானார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்




தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் முன்பே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்பியாகிவிட்டார்.



குச்சனூர் ஆலயத்திற்கு பேருதவி புரிந்தவர்கள் என்று கல்வெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெயரை பொறித்துள்ளனர். ஆனால், அடுத்த வரியில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ளனர்.



தேர்தல் முடிவே வரவில்லை. அதற்குள் இவ்வளவு அவசரமா? என சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.