வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-11-10
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 18, 2019

[வேலைவாய்ப்பு] தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் உதவியாளர் வேலை! Children Protection Assistant Job Dharmapuri District

தருமபுரி குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் (Child Protection Unit) இருந்து வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


தருமபுரியில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில், உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நவம்பர் 12 ஆம் தேதி புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது தற்காலிக பணியாகும். 1 வருடம் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது. இருப்பினும் அடுத்தடுத்து வரக்கூடிய வேலைவாய்ப்புகளில் இந்த பணி அனுபவம், விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடும். 

எனவே, தற்காலிக பணி என்று பாராமல், அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு 1 காலியிடம் உள்ளது. மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், DCA எனப்படும் கம்ப்யூட்டர் பயன்பாட்டு கல்வியில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் இயக்குவதில் விண்ணப்பதாரர்கள் 1 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. அதிகபட்சமாக விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது. 

 
மேற்கண்ட பணியில் சேருவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப்படிவம் தயாரித்து, அதனை பூர்த்தி செய்து, நவம்பர் 27 ஆம் தேதிக்குள் சம்ர்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அஞ்சல் வழியாக மட்டுமே அனுப்ப வேண்டும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தருமபுரி.


இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:
Dharmapuri Child Welfare Recruitment 2019


Friday, November 15, 2019

[வேலைவாய்ப்பு] கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு TNPSC தேர்வுகள் அறிவிப்பு! - Veterinary Assistant surgeon Requirement 2019

TNPSC Recruitment 2019: TN Veterinary Assistant Surgeon: கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவ பணிக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள உதவி அறுவை சிகிச்சை மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நவம்பர் 13 ஆம் தேதி புதிய தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
அதன்படி, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் உதவி அறுவை சிகிச்சை டாக்டர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு நவம்பர் 18 ஆம் தேதி முதல் டிசம்பர் 12 ஆம் தேதி வரையில் நடைபெறும். உதவி அறுவை சிகிச்சை மருத்துவ பணிக்கான எழுத்துத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
TN Veterinary Assistant Surgeon பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, தேர்வு பாடத்திட்டம், விண்ணப்பக்கட்டணம் உள்ளிட்ட முழு விபரங்கள் விரைவில் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்படும். டி.என்.பி.எஸ்.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnpsc.gov.in அல்லது tnpsc.exams.net, tnpsc.exams.in ஆகும்.  
தற்சமயம் டி.என்.பி.எஸ்.சி.,யின் துணுக்கு செய்தி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையளத்தை பார்வையிட்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
இதற்கு முன்பு கடந்த 2013 ஆம் ஆண்டு இதே போல், கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணிக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடத்தப்பட்டது. அதே கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு பாடத்திட்டம் தான் இப்போதும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட டி.என்.பி.எஸ்.சி அறிவிக்கையை பார்க்க இங்கு க்ளிக் செய்யவும். 
http://www.tnpsc.gov.in/notifications/5_2013_not_eng_vas_2013.pdf

Thursday, November 14, 2019

இராமாபுரத்தில் குழந்தைத் திருமண தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் | Awareness Rally for Stoping Child Marrige in Ramapuram

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இராமாபுரம் கிராமத்தில் நவம்பர்-14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு திறமை போட்டிகள் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடையே நடைபெற்றது.




மேலும், ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் (Rural Star Trust) மூலமாக பள்ளி மாணவர்கள் குழந்தைத் திருமணத் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மேற்கொண்டனர். விழாவின் சிறப்பு விருந்தினரான யோராடோரா அறக்கட்டளையின் நிறுவனர்  திருமதி.ஷீஜா அவர்கள் ஊர்வலத்தினை கொடியசைத்து துவக்கினார். 


இந்த பிரச்சாரத்தில் குழந்தைத் திருமண தடுப்பு, குழந்தை பாதுகாப்பு, பெண் குழந்தை பாதுகாப்பு, குழந்தை வன்கொடுமை எதிர்ப்பு, குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சம்மந்தப்பட்ட பதாகைகளை கையில் பிடித்து கோஷமிட்டபடி பள்ளி மாணவர்கள் ஊர்வலம் மேற்கொண்டனர். 

மேலும் இராமாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பேச்சுப்போட்டி மற்றும் இதர போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.  விழாவின் சிறப்பு விருந்தினரான திருமதி.ஷீஜா அவர்கள் விழாவினை சிறப்பித்தார்.


இந்த விழாவில் Rural Star Trust நிறுவனத்தன் இயக்குநர் திரு.அ.டோமினிக் அவர்கள் வரவேற்புரையுடன் வேலாமூர்  ஊராட்சி செயலர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான திரு.இர.துரைவேலு அவர்களின் முன்னிலையில் ஊர்வலம் மற்றும் விழாக்கூட்டம் நடைபெற்றது.
 

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் திரு.அருள், ரைஸ்மில் உரிமையாளர் திரு.K.ஐயப்பன், LIC முகவர் திரு.சுகுமார், Run World Media செய்தியளார்.திரு.பழனிவேல் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
 

மேலும், பள்ளி மாணவர்கள், சக ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளியின் ஆசிரியை திருமதி.ஷீரிஜிதா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.