வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: March 2020
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, March 31, 2020

தர்பூசணி விவசாயிகளுக்கு பக்கபலமாக அறிவிக்கை விடுத்த செங்கல்பட்டு ஆட்சியர் | Watermelon Farmers News | Chengalpattu Collector | Vil Ambu | வில் அம்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுகுன்றம் வட்டங்களில் உள்ள கிராமங்களில் தர்பூசணி பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணத்தால் 144 ஊரடங்கு தடை உத்தரவு அமலுக்கு வந்தது.



இதனால் சென்னை கோயம்பேடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு தங்களது தர்பூசணி பழங்களை அனுப்ப முடியாததால் தர்பூசணி விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகி உள்ளனர்.


இதனால் விவசாயிகள் தர்பூசணியை அறுவடை செய்யாமலேயே தங்களது நிலங்களிலேயே காய்ந்துவிடும் நிலைக்கு விட்டுவருகின்றனர். இந்த பழங்களை வாங்க யாரும் வராத காரணத்தினால் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.


இந்நிலையில் வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் மேற்கண்ட தாலுக்காவில்ஆய்வு செய்து 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் தர்பூசணி பயிரிடப்பட்டுள்ளதாகவும், இந்த பழங்களை அறுவடை செய்து சந்தைபடுத்த இயலாமல் போகும் சூழல் வந்தால் விவசாயிகள் பேரிழப்பை சந்திப்பார்கள் எனவும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, தர்பூசணி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குதால் தொடர்பாக முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளதாக செங்கை மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தெரிவித்தார்.


இந்த சூழலில் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா தெரிவிக்கையில், மதுராந்தகம் மற்றும் செய்யூர் வட்டங்களில் தர்பூசணி பயிர் செய்து அறுவடை செய்ய இயலாமல் உள்ள விவசாயிகள் தங்களது பழங்களை ஏற்றுமதி செய்ய வண்டி தயார் செய்து அந்தந்த ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோட்டக்கலை உதவி இயக்குனரிடம் அனுமதி கடிதம் பெற்றுக் கொள்ளலாம் என கூறினார்.

Monday, March 30, 2020

திருவேற்காடு ஶ்ரீலஶ்ரீ ஐயப்ப சுவாமிகள் முக்தி அடைந்தார் | Thiruverkadu Srilasri Ayyappa Swamigal Rest in Peace | Vil Ambu | வில் அம்பு

திருவேற்காடு கருமாரிபட்டர், அன்னதான சிவம், ஆன்மீக அருள் ஞானவள்ளல், கும்பாபிஷேக சக்கரவர்த்தி ஶ்ரீலஶ்ரீ ஐயப்ப சுவாமிகள் அவர்கள் இன்று முக்தி அடைந்தார்.  திருவேற்காட்டில் அவருடைய கோவில் அருகே இன்று மாலை சாமதி அமைக்கப்பட்டு அவரது முக்திக்கான ஏற்பாடுகள் நடந்து முடிந்தது.




இவர் அச்சிறுபாக்கத்தை அடுத்த வெங்கடேசபுரத்தைச் சார்ந்தவர் ஆவார். இவருக்கு வயது தற்போது 108 ஆகும். பல்வேறு பக்தர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் இவரது முக்தியை பேரிழப்பாக கருதுகின்றனர்.  தமிழக அமைச்சர் மாஃபோய் பாண்டியராஜன் இந்த இறுதி நிகழ்வில் கலந்துகொண்டார்.




 

தற்போதைய சூழலில் பெரும்பாலோனோர் இந்த முக்தி நிகழ்வில் கலந்துகொள்ள இயலாமல் பெரும் வேதனைக்குள்ளானர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீலஶ்ரீ ஐயப்ப சுவாமிகள் ஏராளமான கும்பாபிஷேங்களை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.







கடைகளை சீல் வைக்கத் தொடங்கினார் மதுராந்தகம் கோட்டாட்சியர் | RDO Sealed shops in Madurantakam Circle

கொரனா  வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவகங்களிலும் அதிக நபர்கள் கூட்டம் சேர கூடாது என்றும் மேலும் உணவுகளில் உணவுகளை  பார்சல் செய்து விநியோகம் செய்ய வேண்டும் என்றும்,  அரசாங்கம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. 




விதிமுறைகளை மீறியும்,  நோய்த்தொற்றின் ஸ்திரத்தன்மையை உணராமலும்  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம்,  படளாம் (கூட்ரோடு ) கிராமத்தில்  உள்ள "ஹோட்டல் மகேந்திரா சைவம் மற்றும் அசைவம்" என்ற  உணவக  நிறுவனர் அரசின்  விதிமுறைகளை  மீறியும்,   கூட்டமாகவும்,  நள்ளிரவு 12.00மணிக்குமேல்  உணவகத்தை நடத்தி வந்தார்.




விவரத்தினை அறிந்து மேற்படி  ஓட்டலினை    மதுராந்தகம்  வருவாய்  கோட்டாட்சியர் அவர்கள்  முன்னிலையில்  நேற்று  (29.03.2020) நள்ளிரவு சுமார் 12.00 மணி அளவில்  சீல் வைக்கப்பட்டது.


இந்த நிகழ்வின்போது மதுராந்தகம்  தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வையாவூர் வருவாய் ஆய்வாளர்,  படாளம் காவல் ஆய்வாளர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்தியாவைக் கடுமையாக பாதித்த நோய்களின் வரலாறு | Dangerous diseases in Indian history

கொரோனா வைரஸ் மீதான அச்சத்தால் இந்தியாவே முடங்கிப் போயுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. 


தொலைக்காட்சி, செய்தித்தாள் என்று எங்கு பார்த்தாலும் கரோனா வைரஸ் பற்றிய செய்திகளாகவே உள்ளன. இதேபோல் இந்தியாவை இதற்கு முன் முடக்கிப் போட்ட நோய்களைப் பற்றி அறிந்து கொள்வோம்:
 
காலரா (1899-1923)
19-ம் நூற்றாண்டின் இறுதி முதல் 20-ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை இந்தியா முதல் மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்ரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யா வரை வரை மிகப்பெரிய அளவில் காலரா பரவியது.
ஆறாவது காலரா என்று அழைக்கப்பட்ட இந்த நோயின் தாக்குதலில் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள்.லியனார்ட் ரோஜர்ஸ் என்ற வரலாற்று அறிஞரின் ஆய்வுப்படி, இந்த காலரா நோய் ஹரித்துவாரில் நடந்த கும்பமேளாவின்போது தொடங்கி, பின்னர் பஞ்சாப் வழியாக பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது.

வசதிகள் அதிகம் இல்லாத இந்த காலகட்டத்தில் காலரா நோயைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய விஷயமாக இருந்தது. இதன் காரணமாக ஒரு ஊரில் காலரா நோய் பரவினால், மக்கள் அந்த ஊரைவிட்டே செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் இந்தியாவை ஆட்டிப்படைத்த இந்த காலராவால் சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா மாகாணங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டன.

ஆங்கிலேய அரசின் கணக்குப்படி 1904-ம் ஆண்டில் 1,89,955 நபர்களும், 1905-ம் ஆண்டு முதல் 1908-ம் ஆண்டுவரை 5,26,000 நபர்களும் பலியானார்கள். இந்த காலராவை கட்டுப்படுத்த அரசு கடுமையாக போராடவேண்டி இருந்தது.
ஸ்பானிஷ் ஃப்ளூ (Spanish flu) – 1918
H1N1 வைரஸால் உலகமெங்கிலும் மிக வேகமாக பரவிய ஸ்பானிஷ் ப்ளூ எனும் கொள்ளை நோயை இந்தியர்களால் மறக்க முடியாது. உலகம் முழுவதும் சுமார் 500 மில்லியன் மக்களை பாதித்த இந்த ப்ளூ ஜுரத்தால் சுமார் 50 மில்லியன் பேர் பலியானார்கள்.
இந்த நோயால் இந்தியாவிலும் லட்சக்கணக்கான மக்கள் பலியானார்கள். இந்த கொள்ளை நோய் மகாத்மா காந்தியையும் விட்டுவைக்கவில்லை.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பிறகு குஜராத்தில் சபர்மதி ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த மகாத்மா காந்தியை, அவரது 48-வது வயதில் ப்ளூ ஜுரம் தொற்றிக் கொண்டது.
இந்தக் காலகட்டத்தில் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தார் காந்தியடிகள். பல நாட்களுக்கு நீர் ஆகாரத்தை மட்டும் உண்டு அவர் இந்த நோயில் இருந்து மீண்டார்.

அவருடன் சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்த பலருக்கும் இந்நோய் தொற்றியுள்ளது. ஆனால் மிகச்சிறந்த மருத்துவம் மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளால் அவர்கள் மீண்டனர்.
ஆனால் சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்தவர்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு பெருவாரியான இந்தியர்களுக்கு கிடைக்கவில்லை. லட்சக்கணக்கான இந்தியர்கள் இந்த நோயின் தாக்குதலால் பலியானார்கள்.
முதலாம் உலகப் போரைவிட மிக அதிக அளவில் இந்நோய்க்கு இந்தியர்கள் பலியானார்கள். கங்கை நதியில் இந்த காலகட்டத்தில் பிணங்கள் மிதந்தகாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


கிட்டத்தட்ட இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 6 சதவீதத்தை இந்த ஸ்பானிஷ் ப்ளூ காவு வாங்கியது.
வரலாற்று அறிஞரான ஜே.எஸ்.டர்னர் இதைப்பற்றி குறிப்பிடும்போது, “இரவு நேரத்தில் நகருக்கு வந்து அனைத்துச் செல்வங்களையும் கொள்ளையடித்து செல்லும் திருடனைப்போல், இந்த இந்நோய் மக்களை கொள்ளையடித்துச் சென்றது” என்கிறார்.
இந்த நோயுடன் சேர்த்து நாட்டில் பஞ்சமும் வர, இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஏஷியன் ப்ளூ (Asian flu) – 1957
ஆசிய நாடுகளில் தொடங்கி, பின்னர் உலகம் முழுவதும் பரவிய இந்த வைரஸ் ஜுரத்தால் உலகம் முழுக்க சுவார் 20 லட்சம் பேர் பலியானார்கள். H2N2 என்ற வைரஸால் உருவான இந்த நோயும் இந்தியாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்நோய்க்கு பலியானார்கள். 2 தவணைகளாக உலகைத் தாக்கிய இந்நோய், முதல் தவணையில் குழந்தைகளையும் இரண்டாவது தவணையில் முதியவர்களையும் அதிகம் பாதித்தது.

அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இம்முறை இந்நோயைக் கட்டுப்படுத்த விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 
ஹாங்காங் ப்ளூ (Hong Kong flu) -1968
கரோனா வைரஸைப் போலவே இந்த வைரஸும் சீனாவில் இருந்துதான் உலகில் பரவத் தொடங்கியது. H3N2 என்ற இந்த வைரஸ் ஹாங்காங்கில் உற்பத்தியாகி உலகம் முழுவதும் பரவியது.
இந்தியாவில் இந்த வைரஸால் நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள். உலகம் முழுக்க இந்த வைரஸால் சுமார் 10 லட்சம் பேர் பலியானார்கள்.

அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் | 29.03.2020 | Corona Precaution steps in Acharapakkam Town Panchayat | Vil Ambu | வில் அம்பு


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் நேற்று (29.03.2020)  சுற்றுவட்டார பகுதியில் 15 வார்டுகளிலும்  மனநலம் பாதிக்கபட்டவர்கள், வீடற்ற ஏழைகள்  கண்டறியப்பட்டு பேரூராட்சியின் செயல்அலுவலர் முனுசாமி  ஹேண்டு இன் ஹேண்டு மேற்பார்வையாளர் நவரத்தினம், மற்றும் பரப்புரையாளர் வர்ஜனா  ஆகியோருடன இணைந்து உணவு வழங்கினர்.
அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் பேரூராட்சியின் செயல்அலுவலர் முனுசாமி  அவர்களின் தலைமையில் கொரானா வைரஸ் நோய் தடுப்பு ஆலோசனை கூட்டம் அச்சிறுபாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று (29.03.2020) நடைபெற்றது.  
இந்த கூட்டத்தில் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் கன்னியப்பன். தன்னார்வலர்கள் கண்ணன், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
 
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் கொரானா வைரஸ் நோய் தடுப்பிற்காக ஊரடங்கு உத்தரவினை ஒழுங்குபடுத்த பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் பணி இடத்தில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

Sunday, March 29, 2020

கருங்குழி பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பணிகள் | Karunguzhi Town Panchayat Sanitory work for Corona Precaution | 29.03.2020

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் கடந்த 10 நாட்களாகவே தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கருங்குழி பேரூராட்சி வார்டு 1,4, 5, 6, 7, 8 ஆகிய பகுதிகளில் இன்று (29.03.2020 | ஞாயிற்றுக்கிழமை) தூய்மைபணி செய்து பிளிசீங் கலந்த சுண்ணம்பு தெளிக்கப்பட்டது. நேற்று (28.03.2020) சனிக்கிழமையன்று வார்டு 2, 3 ஆகிய பகுதிகளில் தூய்மைபணி செய்து பிளிசீங் கலந்த சுண்ணம்பு தெளிக்கப்பட்டது.
கருங்குழி பேரூராட்சி மக்களுக்கு அவசிய தேவைகளான  குடிநீர்பொது சுகாதாரம்  மற்றும் நோய் பரவல் தடுப்பு பணிகளை இந்த 144 ஊரடங்கு காலத்தில் 55 பேரூராட்சி ஊழியர்கள்  செயல்அலுவலர் கேசவன் கண்காணிப்பில் தன்நலம் பாராமல் பணியாற்றி வருகிறார்கள்.
 
தினம் வீடுகள் தோறும் கழிவுகள் சேகரிப்பு பணியும், நோய் பரவுல் தடுக்க தினம் கிரிமி நாசனி  தெளித்தல், ஆரம்ப சுகாதார நிலையம், ஏடிஎம் மையங்கள். வழிபாட்டு தலங்கள், பேரூந்து நிறுத்தகங்கள், பொது மக்கள் நடமாடகூடிய கடை பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளித்தல் போன்ற பணிகளில் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.
மேலும், இந்த பேரூராட்சியின் 15வார்டு பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்களிலும சுழற்சிமுறையில் கை தெளிப்பான் பவர் ஜெட் தெளிப்பான் மூலம் கிரிமி நாசனி தெளிக்கப்ட்டு வருகிறது.

மக்களுக்கு ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் அரசு அறிவிப்புகளை விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது
 
குடிநீர் விநியோகம் தடையின்றி குளோரினேஷன் செய்து வழங்கியும் குழாய் பழுதுகளை உடனுக்குடன் சீர் செய்தும் தடையில்லாமல் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
 
வெளியூர்களிலிருந்து வரும் பணியாளர்களுக்கு வண்டி வசதி செய்யப்பட்டு அந்த ஊழியர்களுக்கு மதிய உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.  


பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள், கிருமி நாசனிசோப்பு வழங்கியும் நோய் பரவுதலில் இருந்து தற்காத்து கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
 
சில இடங்களில் பொது மக்கள் சிலர் தடை உத்தரவு மீறுபவர்களை போலீஸ் உதவியுடன் எச்சிரிக்கை விடுத்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது. கருங்குழி பேரூராட்சி  பொதுமக்கள் புகார் குறைகள் தெரிவிக்க கைப்பேசி எண் 7824058572  அறிவிக்கப்ட்டடுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Saturday, March 28, 2020

All Banks Balance Enquiry List | அனைத்து வங்கிகளில் பேலன்ஸ் விவரம்

கீழே உள்ள Balance Enquiry படத்தை கிளிக் செய்க.....



Friday, March 27, 2020

மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு வாகனம் மூலமாக கிருமிநாசினி தெளிப்பு | Madurantakam Taluk office corona precautions

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனம் மூலமாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக கிருமிநாசினியை தெளித்தனர்.