வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 1000 குடும்பங்களுக்கு 6 லட்ச ரூபாய் மதிப்பில் திருக்கழுக்குன்றம் அருகே அ.தி.மு.க வழங்கிய கொரோணா நிவாரணம் | ADMK Giving Corona Relief at Periyakattupakkam Thirukazhukundram | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, May 17, 2020

1000 குடும்பங்களுக்கு 6 லட்ச ரூபாய் மதிப்பில் திருக்கழுக்குன்றம் அருகே அ.தி.மு.க வழங்கிய கொரோணா நிவாரணம் | ADMK Giving Corona Relief at Periyakattupakkam Thirukazhukundram | Vil Ambu News


கொரோணா நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வேலையின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
அது போல் காஞ்சி மத்திய மாவட்டம்  (செங்கல்பட்டு மாவட்டம்), திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகாட்டுப் பாக்கம், அமிஞ்சிகரை, வீராபுரம், ரெட்டிபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1000 குடும்பங்களுக்கு  ஒன்றிய அதிமுக அவைத் தலைவரும், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான  ரகுராமன் ரெட்டியார் ஏற்பாட்டில் காஞ்சி மத்திய மாவட்ட  செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் என கொரோனா நிவாரண பொருட்களை நேற்று வழங்கினார். 
மேலும், ஏழை எளியோருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்டவர்கள் தமிழக அரசுக்கும், காஞ்சி மத்திய மாவட்ட செயலாளருக்கும், ஒன்றிய அவைத் தலைவருக்கும் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். 
இதில் மத்திய  மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், மத்திய மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்வந்த்ராவ், மஞ்சுளா ரவிக்குமார், மத்திய மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர். பிரவீன் குமார், திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் விஜயரங்கன்,  நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், சந்திரபாபு, வள்ளிபுரம் ரவிக்குமார், ஹரிதாஸ், துரை, செந்தில்குமார், மணிகன்டன், அர்ஜுணன் உள்பட பலர் உடனிருந்தனர்

No comments:

Post a Comment