வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கருங்குழியில் 3 லட்சம் மதிப்பிலானா நிவாரணப் பொருட்களை வழங்கிய தொண்டு நிறுவனம் | Corona Relief given at Karunguzhi Town Panchayat Office | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, May 17, 2020

கருங்குழியில் 3 லட்சம் மதிப்பிலானா நிவாரணப் பொருட்களை வழங்கிய தொண்டு நிறுவனம் | Corona Relief given at Karunguzhi Town Panchayat Office | Vil Ambu News


கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்துப் பகுதிகளிலும் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பாக கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சி அலுவலகத்தில் சென்னை சேவாலயா தொண்டு நிறுவனம் மற்றும் எப்.சி.ஏ நிறுவனம் இணைந்து 3 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவிப் பொருட்களை 350 நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு நேற்று வழங்கினர்.
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 10 கிலோ அரிசி, அனைத்து விதமாக பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், குளியல் மற்றும் துணி துவைக்கும் சோப்பு, பேஸ்ட், சர்க்கரை, உப்பு உள்ளிட்ட 15 நாட்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளுடன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 10 முகக்கவசம் மற்றும் கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை குறிப்புகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுப் பிரச்சுரம் போன்றவற்றை சேவாலயா தொண்டு நிறுவனத்தின் தலைவர் முரளிதரன் மற்றும் எப்.சி.ஏ. நிறுவனத்தின் மேஜர்.ஆசிஷ் சர்மா ஆகியோர் இணைந்து வழங்கினர்.
மேலும், சமூக இடைவெளியுடன் மக்கள் நிவாரணப் பொருட்களை பெற்றுச் செல்வதற்காக வட்டம் வரைதல், பொதுமக்களின் கைகளில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற சுகாதார முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் நிகழ்ச்சிக்கான அனைத்து முன்ஏற்பாடுகளையும் பேரூராட்சி செயல் அலுவலர் ம.கேசவன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment