வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2020-01-19
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, January 24, 2020

உத்திரமேரூர் மருத்துவமனையில் நர்ஸ்களுக்கு உடைமாற்ற அறை வேண்டும் | Nurses Want Dress Change News in Uthiramerur Hospital


காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் உடை மாற்ற தனி அறை இல்லாமல் பெரும் சிரமத்துக்குள்ளாவதாக செவிலியர்கள் வேதனைபடுகின்றனர்.



உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள அரசு மருத்துவமனை, 50க்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன் இயங்கி வருகிறது. இங்கு, எட்டு செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தினமும், 500 முதல் 700 நோயாளிகள் வந்து செல்கின்றனர்

இந்த மருத்துவமனையில்  உள் நோயாளிகள், புற நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு என  தனித்தனி கழிப்பறை வசதி உள்ளது. ஆனால், செவிலியர் மற்றும் ஊழியர்களுக்கு என  தனி கழிப்பறை வசதி இல்லை. மேலும், செவிலியர்கள் உடை மாற்றும் அறையும் இல்லை.
இதனால், பிரசவ வார்டில் செவிலியர்கள் உடைமாற்றி வருவதாகவும், அப்போது, அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள தாய்மார்களையும், பிறந்த குழந்தையையும் பார்க்க  ஆண்கள் யாராவது உள்ளே வந்துவிடுவார்களோ என்ற அச்சத்துடனே அவர்கள் உடையை மாற்றுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.  

எனவே, செவிலியர்கள் உடை மாற்றவும், ஊழியர்களுக்கும் என  தனி கழிப்பறையும் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

மேல்மருவத்தூர் அருகே விபத்து - பெரும்பாக்கத்தை சார்ந்த இளைஞர் பலி | Melmaruvathur Two Wheeler Accident

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தவறி விழுந்ததால் விபத்து ஏற்பட்டது.



மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது  மகன் மூர்த்தி (வயது 24).இவர் தனது நண்பர் சாந்தகுமார் (வயது 20) என்பவருடன், நேற்று முன்தினம் மாலை, மதுராந்தகத்தில் இருந்து பெரும்பாக்கத்திற்கு, இருசக்கர வாகனத்தில் சென்றார்.
 

மேல்மருவத்துார் அருகே, நிலை தடுமாறிய இவரது இருசக்கர வாகனம் விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் இருவரில் மூர்த்தி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மேல்மருவத்துார் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

Thursday, January 23, 2020

சோத்துப்பாக்கத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி | Road Safety Rally conducted at Sothupakkam


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சோத்துப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும்  மாணவ, மாணவியர்களுக்கு சாலை  பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தீயணைப்பு மீட்புப்பணிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது

அரிமா சங்கம் (LION’s CLUB), மேல்மருவத்தூர் காவல் நிலையம், அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து சோத்துப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து  தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோத்துப்பாக்கம் மேம்பாலம் வரை  பேரணியாக சென்று சாலை பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் பற்றிய விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். 
 
மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு, இயற்கை இடற்பாடுகளில் செய்ய வேண்டிய துரித நடவடிக்கைகள் என பல்வேறு முக்கிய விழிப்புணர்வுகள் பற்றி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மற்றும் காவல்துறை மூலமாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மேல்மருத்தூர் காவல் ஆய்வாளர் சரவணன் (பொறுப்பு), துணை ஆய்வாளர், தீயணைப்பு நிலைய அதிகாரிகள், மேல்மருவத்தூர் அரிமா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் என அனைவரும் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 


Wednesday, January 22, 2020

ப்ப்பா.. 85 ரவுடிகள் சுற்றி வளைப்பு: விரட்டி பிடிக்கும் காஞ்சிபுரம் போலீஸ் | Great jobs of Kancheepuram Police

கோவில் ஊரான காஞ்சிபுரத்துக்கு, ரவுடிகளின் கூடாரம் என்ற பெயர் வராமல் தடுக்க, எஸ்.பி., சாமுண்டீஸ்வரி மற்றும் போலீசார், ஒரே மாதத்தில், 85 ரவுடிகளை பிடித்து, சிறையில் அடைத்துஉள்ளனர். கோவில் நகரமான காஞ்சிபுரம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஸ்ரீதர் என்ற சாராய வியாபாரியின் பிடியில் இருந்தது. 
கட்டப்பஞ்சாயத்துகொலை, ஆட்கடத்தல், ரியல் எஸ்டேட் என, அனைத்து வகையான குற்றங்களில் ஈடுபட்ட ஸ்ரீதர், போலீசாருக்கு பயந்து, கம்போடியா நாட்டில் பதுங்கினார். ஆனாலும், அங்கிருந்தபடியே, தன் கூட்டாளிகள் மூலம், காஞ்சிபுரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்தார்..பி.எஸ்., அதிகாரிகளான ஸ்ரீநாத், சந்தோஷ்ஹதிமானி போன்ற அதிகாரிகள், 2015 முதல், 2019 வரை, காஞ்சிபுரத்தில் பணியாற்றியதன் விளைவு, ஸ்ரீதரின் கூட்டாளிகளை முற்றிலும் அடக்கினர்.
 
ஸ்ரீதர் கைது செய்வது உறுதியான நிலையில், 2016ல், கம்போடியாவில் தற்கொலை செய்தார்.ஸ்ரீதர் மறைவுக்கு பின், அவருடன் தொடர்பில்லாத தியாகு என்ற ரவுடி, ஸ்ரீதரின் பாணியை பின்பற்ற துவங்கினார்.இந்நிலையில், ஸ்ரீதர் இடத்தை பிடிப்பதில், அவரது கூட்டாளிகள் தினேஷ் மற்றும் தணிகா இடையே, கடும் போட்டி ஏற்பட்டது. அதன் காரணமாக, பல கொலைகள் நடந்தன.இதனால், தினேஷ் மற்றும் தியாகு போன்ற முக்கிய ரவுடிகளை, போலீசார், சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இரண்டு ரவுடிகளை, ஒரே சிறையில் அடைக்க கூடாது என்பதற்காக, தினேஷை வேலுாரிலும், தியாகுவை பாளையங்கோட்டையிலும் அடைத்து உள்ளனர்.தலைமறைவு'குண்டர்' சட்டத்தில் கைது செய்யப்பட்டாலும், மேல் முறையீடு செய்து எளிதாக வெளியே வருகின்றனர். இது, போலீசாருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.அமைதி இழந்த காஞ்சிபுரத்தை, பழைய நிலைக்கு கொண்டு வர, ஒரு மாதத்திற்கு முன் பொறுப்பேற்ற காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., சாமுண்டீஸ்வரி, சிறப்பு தனிப்படைகளை அமைத்தார்.தணிகா, தினேஷ், தியாகு என, அனைத்து ரவுடிகளின் கூட்டாளிகளை கைது செய்ய, தனிப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
இதன் காரணமாக, ஒரு மாதமாகவே, ரவுடிகளின் கூட்டாளிகளை தனிப்படை போலீசார், விரட்டி விரட்டி பிடித்து வருகின்றனர்.ரவுடிகளின் கூட்டாளிகள் யாராக இருந்தாலும், அவர்களை நள்ளிரவு, அதிகாலையில் பொறி வைத்து போலீசார் பிடித்து வருகின்றனர்.தலைமறைவாகவே உள்ள தணிகாவை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.எஸ்.பி., சாமுண்டீஸ்வரி, ரவுடிகளை பிடிப்பதில் உறுதியாக இருப்பதாக போலீஸ் மத்தியில் கூறப்படுகிறது. இதுவரை காஞ்சிபுரத்தில் மட்டும், ஒரு மாதத்தில், 85 ரவுடி கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
தப்பியோடிய தணிகா, நேபாள நாட்டில் பதுங்கியிருப்பதாகவும், அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இருப்பதாகவும் கூறப்படுகிறது.போலீசார் விரட்டி விரட்டி பிடிப்பதை அறிந்த ரவுடிகள் பலரும், காஞ்சிபுரத்தில் இருந்து வெளியேறி, தலைமறைவாக உள்ளனர்.