Run World Media: விஜயகாந்த்துக்கு என்னதான் ஆச்சு.. ஏன் ஓட்டு போட கூட வரல...? | Vijayakanth not come for vote | Vil Ambu News

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்


எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 7, 2021

விஜயகாந்த்துக்கு என்னதான் ஆச்சு.. ஏன் ஓட்டு போட கூட வரல...? | Vijayakanth not come for vote | Vil Ambu News

விஜயகாந்த்துக்கு என்னதான் ஆச்சு.. நேற்றைய தினம் அவர் ஓட்டுப்போடக்கூட வராததால் தேமுதிக தொண்டர்கள் பெரும் கவலையும், விரக்தியும் அடைந்துள்ளனர்..!இந்த முறை தேர்தல் மட்டுமல்ல, கடந்த சில வருடங்களாகவே நடந்து வரும் தேர்தலில் விஜயகாந்த்தின் பங்கு நூற்றில் 5 சதவீதம்கூட கிடையாது.. ஆனால், அவரது தாக்கமும், அவர் குறித்த பேச்சும் இல்லாத தேர்தல் எதுவுமே இல்லை.. அவருக்கு உடம்பு சரியில்லை என்றாலும் சரி, விஜயகாந்த்தின் பெயர் உச்சரிக்கப்பட்டே ஒவ்வொரு தேர்தலும் கடந்து செல்கிறது.

கூட்டணி 

அந்த வகையில் இந்த முறை தேர்தலையும் சொல்லலாம்.. பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதுதான் விஜயகாந்த்தின் ஆசையாக இருந்திருக்கிறது.. இதைதான் 6 மாசத்துக்கு முன்புகூட வீட்டில் தன் விருப்பத்தை சொல்லி உள்ளார்.. அதற்காகவே கடைசி வரை போராடவும் செய்தார் பிரேமலதா. ஆனாலும், அதிமுக கூட்டணியில் இடம்பெற முடியாமல் போய், வேறு கட்சியில் இணையும் சூழல் ஏற்பட்டுவிட்டது.

அழுத பிரேமலதா 

 எனினும், விருதாச்சலம் தொகுதி தன் கைக்கு கிடைத்ததில் இரட்டிப்பு சந்தோஷம் அடைந்தார் பிரேமலதா.. இந்த தொகுதியை வெற்றி பெற்று காட்ட வேண்டும் என்பதற்காக, வேறு யாருக்காகவும் பிரச்சாரம் செய்ய முடியாது என்று முன்பாகவே ஓபனாகவும் சொல்லிவிட்டார்.. தொகுதிக்குள்ளேயே சுழன்று சுழன்று வந்தார்.. அங்கே பல பெண்கள் விஜயகாந்த்தின் அருமை பெருமைகளை பற்றி சொல்லவும் கதறி கதறி அழுதுவிட்டார் பிரேமலதா. இன்னமும் விஜயகாந்துக்கு மவுசு இருக்கிறது என்பதால், அவரை பல இடங்களுக்கு பிரச்சாரத்திற்கு அழைத்து சென்றார்.

மவுன பிரச்சாரம்  

முதன்முறையாக "மவுன பிரச்சாரம்" செய்தார் விஜயகாந்த்.. பொதுமக்கள் இதை பார்த்து கலங்கிதான் போனார்களே தவிர, ஆதரவு ஓட்டுக்கள் எழுந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.. உடம்பு சரியில்லாதவரை இப்படி பிரச்சாரத்துக்கு அழைத்து வந்து கஷ்டப்படுத்த வேண்டுமா என்ற மனிதாபிமான கேள்விகளும் வந்தபடியே இருந்தன...ஆனால் நேற்றைய தினம் விஜயகாந்த் ஓட்டுப்போட வரவே இல்லை.

வாக்குச்சாவடி 

எப்பவுமே ஒவ்வொரு தேர்தலின்போதும், விஜயகாந்த், பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் என குடும்பத்துடன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவிரி உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்தான் ஓட்டுப்போட வருவார். அப்படி விஜயகாந்த் வரும்போதே கெத்தாக இருக்கும்.. அவரை பார்க்க தொண்டர்களும், பொதுமக்களும் கூடிநின்று காத்திருப்பார்கள்..

பிரேமலதா 

ஆனால் நேற்று பிரேமலதா மட்டும் முதலில் வந்தார்.. காலையிலேயே தனது ஓட்டை போட்டுவிட்டு அவசர, அவசரமாக விருத்தாசலம் புறப்பட்டு சென்றுவிட்டார்.. பிறகு, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியனும் 2 பேரும் ஒன்றாக வந்து ஓட்டுப்போட்டனர்..

வந்துடுவார் 

"அப்பா எங்கே? ஓட்டுப்போட விஜயகாந்த் வருவாரா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தலைவர் சாயங்காலம் வந்து ஓட்டுபோடுவார்" என்று சொல்லிவிட்டு போனார்.. அதனால் சாயங்காலம் எப்படியாவது விஜயகாந்த் வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. எனினும், கடைசிவரை அவர் ஓட்டுப்போட வரவேயில்லை.. இதனால், தேமுதிக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் விரக்தி அடைந்துள்ளனர்..!

கொரோனா தொற்று 

விஜயகாந்த் எதற்காக ஓட்டுப்போட வரவில்லை என்று விசாரித்தபோது, கொரோனா பரவல் மறுபடியும் அதிகமாகி உள்ளதால்தான், அவர் வரவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.. ஏற்கனவே தொற்று காரணமாக விஜயகாந்த் பாதிக்கப்பட்டு, சமீபத்தில்தான் குணமாகி உள்ளார்.. மீண்டும் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாதே என்பதால் வாக்களிக்கவில்லை என்கிறார்கள்.. அதேசமயம், "7உடல்நிலை சரியில்லாதவர் என தெரிந்தும் அவரை ஓட்டுக்காக அழைத்து வர வேண்டுமா? முதலில் அவர் உடம்பை நன்றாக பார்த்து கொள்ளட்டும், சீக்கிரம் குணமடையட்டும்" என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. அதான் சரி..!


No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்