வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பரனூர், ஆத்தூர் டோல் பிளாசாக்களுக்கு கடும் எச்சரிக்கை | சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானதா? மெட்ராஸ் ஐகோர்ட் கேள்வி | Toll Plaza Cost Issue | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, April 09, 2021

பரனூர், ஆத்தூர் டோல் பிளாசாக்களுக்கு கடும் எச்சரிக்கை | சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானதா? மெட்ராஸ் ஐகோர்ட் கேள்வி | Toll Plaza Cost Issue | Vil Ambu News

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானதாக இல்லை என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தாம்பரம் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சில சுங்கச்சாவடிகளின் ஒப்பந்தக் காலம் 2019-ல் முடிவடைந்துவிட்ட நிலையிலும், அந்த பாதையில் செல்லும் வாகனங்களுக்கு தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது


வழக்கை விசாரித்த மெட்ராஸ் உயர் நீதிமன்ற (Madras High Court) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் ராமமூர்த்தி அடங்கிய சட்ட அமர்வு சுங்கக் கட்டணம் தொடர்பாக அதிருப்தியை தெரிவித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானதாக இல்லை என்று தெரிவித்தனர்.

அதோடு, தமிழக சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று நெடுஞ்சாலைத்துறைக்கு (National Highways Authority of India) உத்தரவிட்டனர். சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் ஃபாஸ்டேக் (FASTag) முறை இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அறிவுறுத்தினர். 

சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலில் தேசிய அளவிலான கொள்கையை பின்பற்ற வேண்டும். சுங்கச்சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது


No comments:

Post a Comment