வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1000 ரூபாய் தீபாவளி போனஸ்! முதலமைச்சர் அதிரடி உத்தரவு!!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 31, 2018

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1000 ரூபாய் தீபாவளி போனஸ்! முதலமைச்சர் அதிரடி உத்தரவு!!புதுச்சேரியில் உள்ள அணைத்து குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் 1000 ரூபாய் தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.

வரும் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி அரசு சார்பாக புதுச்சேரி மக்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டியை முன்னிட்டு, இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், இந்த வருடம் இலவச வேட்டி, சேலை வழங்குவது பற்றி எந்த அறிவிப்பும் இதுவரை புதுச்சேரி அரசு வெளியிடவில்லை. அதே சமயத்தில் பல்வேறு தரப்பினர் இலவச வேட்டி, சேலைக்கு பதிலாக பணம் வழங்கக்கோரி வலியுறுத்தி வந்தனர்.


இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 1000 ருபாய் தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்துக்கு பின் முதல்வர் நாராயணசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment