வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அங்கன்வாடியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: உடனே விண்ணப்பிக்கவும் ( கடைசி தேதி: 16.10.2018)
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 13, 2018

அங்கன்வாடியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: உடனே விண்ணப்பிக்கவும் ( கடைசி தேதி: 16.10.2018)சேலம் அங்கன்வாடியில் நிரப்பப்பட உள்ள 1101 அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 மொத்த காலியிடங்கள்: 1101

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

 பணி: அமைப்பாளர் - 316

சம்பளம்: மாதம் ரூ.7700 - 24200
(தொடர்ச்சிகீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!

வயதுவரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் 8-ஆம் வகுப்பு தேர்தச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணி: சமையல் உதவியாளர் - 785

 சம்பளம்: மாதம் ரூ.3000 - 9000

வயதுவரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.


தகுதி: 5-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். பழங்குடியினர் எழுத்த, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

மேலும் விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் மேற்படி கல்வித் தகுதியிருப்பின் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.


மூன்றாம் பாலினத்தை சேர்ந்த பெண்தன்மைக்கு உரிய சான்றிதழ்கள் பெற்றவர்கள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட இரண்டு பணிகளுக்கும் விண்ணப்பிப்போர் நியமன பணியிடத்திற்கும் விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும
 

விண்ணப்பிக்கும் முறை: சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் 15,10.2018 வரைஅலுவலக வேலை நேரங்களில் வழங்கப்படும். அலுவலகத்தால் வரையறுக்கப்பட்ட படிவம் அடங்கிய விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ள தக்கதாகும்.


தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.10.2018.

மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2018/10/2018100178.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment