வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் வேலை - கடைசி தேதி: 24.10.2018
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 13, 2018

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் வேலை - கடைசி தேதி: 24.10.2018தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்பந்தகால அடிப்படையிலான பணியிடங்களான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (டெக்னிக்கல்), மாவட்ட திட்ட உதவியாளர், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து அக்டோபர் 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
(தொடர்ச்சிகீழே...)

இதையும் படிக்கலாமே !!!

மொத்த காலியிடங்கள்: 178

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: பதவி: District Coordinator - 06


 சம்பளம்: மாதம் ரூ. 30,000

தகுதி: கணினி அறிவியல் துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

. பதவி: District Project Assistants - 06

சம்பளம்: மாதம் ரூ.18,000


தகுதி: மேலாண்மை, சமூக அறிவியல், ஊட்டச்சத்துயியல் துறையில் பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபம் பெற்றிருக்க வேண்டும்.

 பதவி: Block Project Assistants - 83 சம்பளம்: மாதம் ரூ.15,000

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: அனைத்து பணியிடங்களுக்கும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், கணினியை கையாளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.மாவட்ட அளவிலான பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களும், வட்டார அளவிலான பணியிடங்களுக்கு அந்தந்த வட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யசெய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: www.icds.tn.nic.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்திசெய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை பதிவிறக்கம் http://icds.tn.nic.in/Application_form_NNM.pdf என்ற லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள், எண்: 6, பம்மல் நல்லதம்பி தெரு,எம்.ஜி.ஆர். சாலை, தரமணி, சென்னை - 600 113.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://icds.tn.nic.in/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment