வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: குரூப்-2 தேர்வு: நவ. 4-இல் இலவச மாதிரித் தேர்வு !
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 26, 2018

குரூப்-2 தேர்வு: நவ. 4-இல் இலவச மாதிரித் தேர்வு !



சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் சார்பில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் வரும் நவம்பர் 4ம் தேதியன்று குரூப்-2 மாதிரித் தேர்வு நடைபெறவுள்ளது. இது முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் தேர்வாகும்.

குரூப்-2 தேர்வு: நவ. 4-இல் இலவச மாதிரித் தேர்வு !
 இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-  (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
 தமிழ்நாடு மாநிலப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2018 நவம்பர் 11ம் தேதியன்று குரூப்-2 தேர்வு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, வேலூர், சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, பழனி, கடலூர் என மொத்தம் 14 மாவட்டங்களில் குரூப்-2 இலவச  மாதிரித் தேர்வு நவம்பர் 4ம் தேதியன்று நடைபெற உள்ளது. 

இத்தேர்வில் பங்கேற்க விருப்பமுடைய மாணவர்கள் www.shankariasacademy.com அல்லது 044 43533445, 044 45543082 ஆகிய தொலைப்பேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts




No comments:

Post a Comment