வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு தனி டிவி சேனல்… அசத்தும் அமைச்சர் செங்கோட்டையன் !!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 30, 2018

தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு தனி டிவி சேனல்… அசத்தும் அமைச்சர் செங்கோட்டையன் !!அடுக்கடுக்கான  மாற்றங்கள்  செய்யப்பட்டு  வருகின்றன. அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்ஸ், ஆங்கில வழிக்கல்வி, எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் என அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டு ஜொலித்து வருகிறது.


அதன்  தொடர்ச்சியாக, பள்ளி  கல்வித்துறைக்கு  என, பிரத்யேகமாக, 'டிவி' சேனல்  துவங்கப்பட  உள்ளது.  இதற்கான  பணிகளை  மேற்கொள்ள, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி,  ஒருங்கிணைந்த கல்விதிட்ட இயக்குனர் சுடலைகண்ணன் மற்றும் இணை  இயக்குனர்கள் அடங்கியகுழு அமைக்கப்பட்டு உள்ளது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

தொழில்நுட்ப   பணி மற்றும் தொலைக்காட்சிக்கான முன்தயாரிப்பு காட்சிகளை  பதிவு செய்யவும், தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. கேமரா, தொழில்நுட்ப கருவிகள் வாங்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.படப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப தளங்களை, சென்னை, அண்ணா நுாலகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், காட்சிபதிவுக்காக, 'ட்ரோன்' என்ற, ஆளில்லா விமானம் வாங்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில், பொங்கல் திருநாளில், சேனல் ஒளிபரப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்..


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment