வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருமணமாகாத விரக்தியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 26, 2018

திருமணமாகாத விரக்தியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலைதிருமணமாகாத விரக்தியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

 
ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய தம்பி வடிவேலு (வயது 40). இவர் வேலூரில் தங்கி இருந்து பேக்கரிகளுக்கு சரக்கு வினியோகிக்கும் வேலை செய்து வந்தார். வடிவேலுக்கு திருமணமாகவில்லை என்பதால் அவர் மிகுந்த விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வடிவேலு, தனது அண்ணன் சங்கரை பார்க்க ஆவடி வந்தார். அப்போது அவர் தனக்கு 40 வயதாகியும் திருமணம் ஆகாததை சங்கரிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற வடிவேலு பின்னர் வீடு திரும்பவில்லை. இது பற்றி அறிந்து சங்கர் தனது தம்பி, வடிவேலுவை தேடி வந்தார்.


இதற்கிடையே சேக்காடு பிரதான சாலையில் வடிவேலு மயங்கிய நிலையில் கிடப்பதாக சங்கருக்கு தகவல் கிடைத்தது. சங்கர் உடனே அங்கு சென்று பார்த்த போது, வடிவேலு மதுபோதையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, சங்கர், வடிவேலுவை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் மதுவில் விஷம் கலந்து குடித்தது தெரியவந்தது.


இதையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நள்ளிரவு 12.30 மணியளவில் வடிவேலு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment