வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருச்சியில் ஏர் இந்தியா விமானம் டவர் மீது உரசியது - அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

திருச்சியில் ஏர் இந்தியா விமானம் டவர் மீது உரசியது - அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்புதிருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பகோளாறு காரணமாக விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
திருச்சியில் இருந்து மும்பை வழியாக துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. 130 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பகோளாறு காரணமாக குறைந்த உயரத்தில் பறந்ததால் விமானத்தின் சக்கரங்கள் 5 அடி உயர சுற்றுச்சுவரில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது.(தொடர்ச்சி கீழே...)


இதையும் படிக்கலாமே !!!

மேலும், சுவருடன் சேர்ந்து அருகே இருந்த வான் கட்டுப்பாட்டு கோபுரத்திலும் உரசி சென்று விமானம் விபத்தை ஏற்படுத்தியது. இந்த எதிர்பாரா விபத்து காரணமாக விமானம் மும்பையில் தரையிறக்கப்படவில்லை. நேராக துபாய் சென்றடைந்த விமானம் அங்கு பத்திரமாக தரையிரங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏர் இந்தியா விமானியின் சாமர்த்தியத்தால் விமானத்தில் பயணித்த 130 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment