வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உடல் எடையை குறைக்க அனுஷ்கா கடைசி முயற்சி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

உடல் எடையை குறைக்க அனுஷ்கா கடைசி முயற்சிநடிகை அனுஷ்கா உடல் எடையை குறைக்கும் தீவிர முயற்சியில் இருக்கிறார். 
 


அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக உடல் எடையை கூட்டினார். அதன்பிறகு அதை குறைக்கவே முடியவில்லை. கடும் உடற்பயிற்சிகள், யோகா, உணவு கட்டுப்பாடு என்று பல முயற்சிகளில் ஈடுபட்டும் எடை குறையவில்லை. பாகுபலி இரண்டாம் பாகம் படத்தில் அவரது குண்டு உடம்பை கம்ப்யூட்டர் மூலம் ஒல்லியாக்கி காட்டினார்கள்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

எடை அதிகமானதால் பட வாய்ப்புகள் குறைந்தன. நயன்தாராவைப்போல் இளம் கதாநாயகர்களுடன் அவரால் நடிக்க முடியவில்லை. பெரிய கதாநாயகர்களும் தங்கள் படங்களில் வாய்ப்பு அளிக்காமல் அனுஷ்காவை புறக்கணித்தனர். இதனால் பல மாதங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் சும்மா இருக்கிறார். உடற்பயிற்சிகள் பலன் அளிக்கவில்லை. அவரது எடையை கேலி செய்து மீம்ஸ்களும் பரவுகின்றன.


சமீபத்தில் ஐதராபாத், மும்பையில் உள்ள பிரபல டாக்டர்களை அணுகி எடையை குறைக்க ஆலோசனைகள் கேட்டு வந்தார். இந்த நிலையில் இந்தி நடிகைகள் ஆஸ்திரியா சென்று இயற்கை முறையில் எடையை குறைத்துவிட்டு வருவதாகவும், அங்கு சென்றால் ஒல்லியாகி திரும்பலாம் என்றும் அவருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அனுஷ்காவும் ஆஸ்திரியாவுக்கு பயணம் ஆகி உள்ளார்.


அங்கு ஒரு மாதம்வரை தங்கி இருந்து சிகிச்சை பெற்று உடம்பை ஒல்லியாக்கி விட்டு இந்தியா திரும்பும் முடிவில் இருக்கிறார். அதன்பிறகு அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும் என்று தெரிகிறது. பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment