வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தாத்தாவின் அஸ்தியை வைத்து பிஸ்கெட் செய்த பெண்.. நண்பர்களுக்கு சாப்பிட கொடுத்து அடாவடி!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 19, 2018

தாத்தாவின் அஸ்தியை வைத்து பிஸ்கெட் செய்த பெண்.. நண்பர்களுக்கு சாப்பிட கொடுத்து அடாவடி!தாத்தாவின் அஸ்தியை வைத்து பிஸ்கெட் செய்த பெண்

அமெரிக்காவில் பள்ளி மாணவி ஒருவர் தனது தாத்தாவின் அஸ்தியை வைத்து பிஸ்கெட் செய்து அதை தன் பள்ளி நண்பர்களுக்கு சாப்பிட கொடுத்துள்ளார். அமெரிக்காவில் தற்போது பள்ளி கல்லூரி சார்ந்து குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் பள்ளி படிக்கும் போதே துப்பாக்கி எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள். இதனால் துப்பாக்கி சூடு சம்பவமும் அதிகம் நடக்கிறது. ஆனால் இதெல்லாம் ஒருபுறம் இருக்க அமெரிக்காவை சேர்ந்த மாணவி ஒருவர், வித்தியாசமான குற்றம் செய்துள்ளார்.
                                            

என்ன செய்தார் 
அந்த மாணவியின் பெயர் வெளியிடப்படவில்லை. ஸ்க்ரமென்டோ பகுதியை சேர்ந்த பள்ளி ஒன்றில் படித்து வரும் அந்த மாணவியின், தாத்தா இறந்து 6 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் அவரின் அஸ்தியை வைத்து இந்த மாணவி பிஸ்கெட் தயாரித்து இருக்கிறார். பிஸ்கெட் மூலப்பொருளுடன், சமாதியையும் கலந்துள்ளார். (தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

நண்பர்களுக்கு அளித்தார் 
அதோடு அதை தனது நண்பர்களுக்கும் அளித்துள்ளார். பள்ளியில் இருந்த 9 பேர் அந்த பிஸ்கெட்டுகளை சாப்பிட்டு இருக்கிறார்கள். இவர் இப்படி அஸ்தியை வைத்து பிஸ்கெட் தயாரித்தது அந்த மாணவியின் நெருங்கிய தோழி ஒருவருக்கும் தெரிந்துள்ளது.


கிண்டல் செய்தார் 
இந்த நிலையில் எல்லோரும் சாப்பிட்ட பின், அவர்களிடம் இதில் தனது தாத்தாவின் அஸ்தி இருக்கிறது என்றுள்ளார். இது எல்லோருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் 4 பேருக்கு உடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

போலீஸ் குழப்பம் 
ஆனால் போலீஸ் இவர் மீது என்ன வழக்கு போடுவது என்று தெரியாமல் உள்ளது. எந்த பிரிவின் கீழ் கைது செய்வது என்று புரியாமல் குழம்பி வருகிறார்கள். ஆனால் கண்டிப்பாக அவரை கைது செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment