வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: TNPSC நேர்முகத் தேர்வு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 19, 2018

TNPSC நேர்முகத் தேர்வுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நான்கு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் நேர்முகத் தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது.

நான்கு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நேர்முகத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு  (தொடர்ச்சி கீழே...)  


இதையும் படிக்கலாமே !!!
இதுகுறித்து புதன்கிழமையன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :- சுற்றுலாப் பயணி அலுவலர் பணியில் காலியாக உள்ள 5 இடங்களுக்கு நடந்த தேர்வில் தற்காலிகமாக 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான நேர்முகத் தேர்வு நவம்பர் 2-ஆம் தேதியன்று நடைபெறும்.


இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பணியில் 3 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தற்காலிகமாக 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நவம்பர் 11-ஆம் தேதியன்று நேர்முகத் தேர்வு நடைபெறும். ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் உள்ள 330 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் 665 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டனர்.

 அவர்களுக்கு நேர்முகத் தேர்வு வரும் அக்டோபர் 25ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை நடைபெறும். வேளாண்மை விரிவாக்கப் பணிகள் தொகுதியில் அடங்கிய வேளாண்மை அலுவலர் பணியில் 323 இடங்கள் காலியாக இருந்தன. அவற்றுக்கு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்று 613 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 9ம் தேதி வரை வடக்கும்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment