வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உங்கள் ராசிப்படி உங்கள் காதல் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகள் வரும்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 19, 2018

உங்கள் ராசிப்படி உங்கள் காதல் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகள் வரும்உங்கள் ராசிப்படி உங்கள் காதல் வாழ்கையில் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகள் வரும் ராசிபலன்கள்,ஜோதிடம்,ஒரு ஆரோக்கியமான உறவு என்பது இருவரின் வில் இருவரின் பங்கும் முக்கியமானது.உங்கள் ராசிக்கு என என்ன உறவு பிரச்சனைகள் வரக்கூடும் என்பது தை இங்கு பார்க்கலாம் உங்கள் ராசி என்பது உங்கள் வாழ்க்கையை தீர்மானிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஏனெனில் ஒருவரின் ராசியை பொறுத்துதான் அவருடைய குணநலன்கள் அமையும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மனித வாழ்க்கையில் உறவுகள் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் நம் வாழ்க்கையை அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவது இந்த உறவுகள்தான். இந்த உறவுகளை அரவணைப்பதும், பேணிக்காப்பதும் நம் கைகளில்தான் உள்ளது. அதேசமயம் அந்த உறவுகளை சிதைப்பதும் நம் செயல்களில்தான் உள்ளது. பொதுவாக ஒருவரின் ராசிப்படி அவர்களுக்கு உறவுகளில் எந்தவிதமான பிரச்சனைகள் வரக்கூடும் என்று கணிக்க இயலும். அதன்படி உங்கள் ராசிப்படி உங்கள் காதல் வாழ்வில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை இங்கு பார்க்கலாம்.


மேஷம்
1. நீங்கள் அனைத்தும் உங்கள் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று நினைப்பீர்கள், ஆனால் சிலசமயம் உங்கள் துணை உங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு நடக்க சிரமப்படுவார்கள். 
2. ஒரு தவறான உறவில் இருந்து நீங்கள் வெளியேற அதிக சிரமப்படுவீர்கள், ஏனெனில் நீங்கள் அவர்களுக்கு கொடுத்த அனைத்தும் சரிதான் என நிரூபிக்க முயல்வீர்கள். 
3. சிலசமயம் உங்கள் துணை 'முடியாது' என்று கூறுவதை உங்களால் பொறுத்துக்கொள்ள இயலாது

ரிஷபம்
1. நீங்கள் உங்கள் துணையை புரிந்துகொள்ள நிறைய முறை முயற்சிப்பீர்கள் ஆனால் அதனை வெளிப்படுத்துவதில் தோற்றுவிடுவீர்கள்.
2. நீங்கள் ஒரு விஷயத்தை உங்கள் ஸ்டைலில் விரும்புவீர்கள் ஆனால் உங்கள் துணை அவர்களுக்கு பிடித்த முறையில் நடக்கும்போது நீங்கள் அதனை பின்பற்ற சிரமப்படுவீர்கள்.
3. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சமரசம் செய்துகொள்வது என்பது உங்களால் முடியாத ஒன்று.


மிதுனம் 
1. நீங்கள் சிலசமயம் உங்கள் தேவைகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள், அதனால் உங்கள் துணையின் தேவைகளையும், இருப்பையும் மறந்துவிடுவீர்கள்.
2. நீங்கள் நினைவுகளில் அதிக கவனம் செலுத்துபவர்கள் எனவே சிலசமயம் உங்கள் துணையின் நடத்தையில் ஏற்படும் சிறிய மாற்றமும் அவர்கள் முன்னர்போல இல்லையோ என்ற எண்ணம் தோன்றலாம். 
3. நீங்கள் வழக்கமான வாழ்க்கையை வாழ விரும்பாதவர்கள், அதேநேரம் மிகவும் வசதியாக இருப்பதையும் விரும்பமாட்டார்கள்.

கடகம் 
1. நீங்கள் எப்பொழுதும் உங்கள் துணை உங்களை விரும்ப வேண்டும் என்று நினைப்பீர்கள், அதுநடக்காத போது அது உங்களை கஷ்டப்படுத்தலாம்.
2. உங்களால் அதிக கவனத்தை கையாள முடியாது, அதுபோன்ற சமயங்களில் நீங்கள் சிரமப்படுவீர்கள்.
3. நீங்கள் திருமணம் மற்றும் குழந்தைகள் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள், ஆனால் சிலசமயம் அது நடக்காது.(தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

சிம்மம் 
1. மற்றவர்கள் உங்கள் உறவை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது பற்றி நீங்கள் அதிக கவலைப்படுவீர்கள்.
2. நீங்கள் உங்கள் துணைக்கு தரும் முக்கியத்துவத்தை விட அவர்கள் உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க வேண்டுமென்று நினைப்பீர்கள்.
3. உங்கள் துணையால் ஏற்படும் சிறிய காயத்தை கூட தாங்கிக்கொள்ள மாட்டிர்கள், அதற்கு பழிவாங்க நினைப்பீர்கள்.


கன்னி 
1. உங்களின் தேர்வுகள் எப்பொழுதும் சிறப்பானதாக இருக்கும், ஆனால் உங்கள் துணையின் தேர்வுகள் அப்படி இல்லாதபோது நிச்சயம் அது பிரச்சினைகளை உருவாக்கும்.
2. கோபத்தில் உங்கள் துணையிடம் மோசமாக பேசிவிடுவீர்கள், ஆனால் அதனை உங்கள் மனதில் இருந்து கூறமாட்டிர்கள்.
3. உங்கள் மனதில் தாங்க முடியாத அளவிற்கு கவலைகளை சுமப்பீர்கள்.

துலாம்
1. உங்கள் துணை உங்களை புறக்கணித்தாலும் அவர்கள் மீதான அன்பில் எந்த மாற்றமும் இருக்காது. 
2. நீங்கள் மற்றவர்களை பாதுகாக்கவே பூமியில் பிறந்துளீர்கள் என்ற எண்ணம் இருக்கும்.
3. அனைவரையும் நீங்கள் நல்லவராகவே பார்ப்பீர்கள் அது உங்களுக்கு எவ்வளவு தீங்கானது என்பது சிலசமயம் உங்களுக்கு புரியாது.

விருச்சிகம் 
1. ஒருமுறை உங்கள் துணையை ஏமாற்றிவிட்டால் அதற்கு பின் உங்களுக்கு இரண்டாம் வாய்ப்பு கிடைக்காது.
2. உங்கள் துணையின் உணர்வுகளை பற்றி நீங்கள் பேச விரும்பமாட்டிர்கள்.
3. உங்கள் துணையின் மீது நீண்ட காலம் காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

தனுசு 
1. நீங்கள் எப்பொழுதும் சமரசம் இல்லாமல் நீதியை நிலைநாட்ட முயல்வீர்கள், மற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பீர்கள்.
2. சிலசமயம் உங்கள் உறவில் இருபுறமும் தவறுகள் இருக்கலாம் ஆனால் நீங்கள் ஒருபோதும் இறங்கி செல்ல மாட்டிர்கள். 
3. நீங்கள் சுதந்திரமான, நேர்மையான உறவை விரும்புவீர்கள் உங்கள் துணையுடன் இருப்பதை விட தனியாக இருப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.


மகரம் 
1. நீங்கள் சிலசமயம் உங்கள் சுயமரியாதையை விட்டு கொடுக்கும் அளவிற்கு உறவில் இறங்கி செல்வீர்கள் அது மிகவும் தவறான ஒன்று.
2. உங்களால் ஒத்துக்கொள்ள இயலாது முடிவுகளையும் சிலசமயம் ஒப்புக்கொள்வீர்கள்.
3. ஒரு ஆரோக்கியமற்ற உறவில் நீடித்திருக்க நீங்கள் பல சமரசங்களை செய்வீர்கள்.

கும்பம் 
1. நீங்கள் உங்கள் துணையிடம் இருந்து எப்பொழுதும் ஒரு இடைவெளியை விரும்புவீர்கள் இது உங்கள் இருவருக்குமே சிக்கல்தான்.
2. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நீங்கள் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுவீர்கள்.
3. உங்கள் துணையுடன் சண்டை போட்டு சண்டை போட்டு நீங்கள் சலித்து விடுவீர்கள்.

மீனம்
1. நீங்கள் பெரும்பாலும் தனிமையை விரும்புவீர்கள் அதுவே உங்கள் துணை உங்களை நெருங்குவதை சிரமமாக்கிவிடும்.
2. உங்கள் துணை உங்களிடம் வெளிப்படையாக இல்லை என்றால் கோபப்படுவீர்கள். 
3. சிலசமயம் உங்கள் துணை உங்கள் மேல் காட்டும் அக்கறையை விட நீங்கள் அவர்கள் மேல் அதிக அக்கறை செலுத்துவதாக எண்ணுவீர்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment