வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இதற்கெல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாமா கலையரசன்.. என்டெர்டெய்ன்மென்டே எண்டிங் ஆன சோகம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 19, 2018

இதற்கெல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாமா கலையரசன்.. என்டெர்டெய்ன்மென்டே எண்டிங் ஆன சோகம்



மியூஸிக்கலி வீடியோவை கிண்டல் செய்ததால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை 
மியூஸிக்கலி ஆப் மூலம் பெண் போல் பாடி நடித்ததை நெட்டிசன்கள் கிண்டல் செய்ததால் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மியூஸிக்கலி என்ற செயலியில் இன்றைய இளைஞர்கள் மூழ்கியுள்ளனர். அதில் தங்கள் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்ட இந்த ஆப்-ல் வித்தியாசமாக வேடம் அணிந்து சினிமா வசனங்களுக்கு நடித்துக் காட்டி அதை சமூகவலைதளங்களில் பதிவேற்றுவது தற்போது இளைஞர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. (தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

வாக்குமூலம் 
அதுபோல் பாட்டு பாடுவதும் நடனம் ஆடுவதும் இதில் செய்கின்றனர். அபிராமியும் சுந்தரமும் கூட இந்த மியூஸிக்கலி ஆப் மூலம் பழக்கமானார்கள் என்று அபிராமியே தன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

குரல்களை பாடி 
 பொழுதுபோக்கு அம்சம் என்றால் அதில் சில மணித்துளிகளை செலவிடாமல் எந்நேரமும் இதில் மூழ்கியிருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. இந்நிலையில் வியாசர்பாடி கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த கலையரசன் (24) பெண் குரலில் பாடல்களை பாடி சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.


ரயில் முன் பாய்ந்து தற்கொலை 
அவரின் இந்தப் பதிவை பலரும் விமர்சித்துள்ளனர். தொடர்ந்து கலையரசனின் பாடல் மற்றும் நடிப்பை பெண்களோடு ஒப்பிட்டு விமர்சனம் எழுந்ததால் அவர் மன உளைச்சலில் இருந்ததால் கடந்த 12-ஆம் தேதி வியாசர்பாடி ரயில் நிலையத்தின் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

கிண்டல் 
இதுகுறித்து அவரது நண்பர்கள் கூறுகையில் தனது வீடியோவை பலரும் கிண்டல் செய்துள்ளதாக கலையரசன் எங்களிடம் வருந்தினார். எனினும் தன்னை பெண்ணாக நினைத்து கிண்டல், கேலி செய்தாலும், நான் தொடர்ந்து பெண் குரலில் பாடுவேன் என்று அவர் கூறியதாக தெரிவிக்கின்றனர். கலையரசனின் செல்போன் மட்டும் கிடைக்கவில்லை. மியூசிக்கலி ஆப் மூலம் பெண் குரலில் பாடல் பாடிய ஒருவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்த சம்பவம் ஓர் உயிரை பறித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment