வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Suicide News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Suicide News. Show all posts
Showing posts with label Suicide News. Show all posts

Saturday, January 15, 2022

ஆன்லைன் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை..!

மத்திய பிரதேசத்தில் செல்போன் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டதை பெற்றோர் கண்டித்ததால் 11 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த அம்மாநில அரசு சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.


கோபாலை சேர்ந்த சூரியன்ஷ் என்ற சிறுவன் செல்போனில் ஃபயர் ஃபால் என்ற ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியதுடன் அந்த விளையாட்டு தொடர்பாக 6 ஆயிரம் ரூபாய் செலவளித்துள்ளான். இதுபற்றி தெரியவந்ததை அடுத்து சிறுவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த விளையாட்டை செல்போனில் இருந்து நீக்கியுள்ளனர். 

இதனையடுத்து வீட்டில் ஆட்கள் இல்லாத சமயம் பார்த்து அந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய செய்திகள் 


முந்தைய தேசிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Monday, January 03, 2022

கடைசியாக பார்த்து சென்ற காதலி..! உருக்கமாக கடிதம் எழுதிவைத்து உயிரைவிட்ட இளைஞர்..!

இராமாபுரத்தில் தன் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டாம் என இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை அருகே இராமாபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் நாகராஜன் இவரது மகன் அர்ஜூன் (வயது 23). பெற்றோர்கள் கேரளாவில் வசித்து வந்த நிலையில் அர்ஜூன் தனியாக வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் தனது வீட்டில் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அர்ஜூனை பார்க்க வந்த அவரது நண்பர் நீண்ட நேரம் கதவு தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளார். அப்போது அர்ஜூன் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து இராயலா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கில் சடலமாக தொங்கிய அர்ஜூனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தங்கியிருந்த வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது.

கடிதத்தில், "எனக்கு வாழ பிடிக்கல எல்லோரும் இருந்து நான் தனியா தான் ஃபீல் பண்றேன்.என்னால வாழ முடியல. என் வாழ்க்கை இப்படியே இருக்கு. அதனால தான் நான் சாக போறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இப்படிக்கு நான்" எனவும் மேலும் என்னுடைய கடைசி ஆசை என் உடலை போஸ்ட்மார்டம் செய்ய வேண்டாம் உடலை பெற்றோரிடம் ஒப்படையுங்கள் என எழுதி வைத்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது .

தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், " அர்ஜூனுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர வேலை இல்லாதது தெரியவந்துள்ளது. இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அர்ஜூனின் காதலி நேற்று மாலை 5 மணியளவில் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அதன்பின்னரே இவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அர்ஜூனின் செல்போனை கைப்பற்றிய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு:
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

இராமநாதபுரம் மாவட்ட செய்திகள் 


முந்தைய இராமநாதபுரம் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, December 29, 2021

பச்சையப்பாஸ் பசங்க போட்ட உயிர் பிச்சையில் வாழ மாட்டேன்..! ஆடியோ வெளியிட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி மாணவர்..!!

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், குருவராஜப்பேட்டை சேர்ந்தவர் குமார். இவர் மாநிலக் கல்லூரியில் முதுகலை வரலாறு துறையில் முதலாமாண்டு படித்து வருகின்றார்.


குமார் வழக்கம்போல் நேற்று காலை கல்லூரிக்கு சென்று விட்டு பிற்பகல் புறநகர் ரயிலில் மூலம் வீட்டுக்கு திரும்பியுள்ளார். திருநின்றவூர் அருகே வரும்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சில குமார் மற்றும் நவின் ஆகிய இருவரை பிடித்து சென்று கேலி செய்து அடித்து அவமானம் செய்ததாக கூறப்படுகிறது.
 

இதில் நவின் ரயில் வரவே அவர்களிடமிருந்து தப்பி சென்றுள்ளான். இதனால் குமார் சக மாணவர்களுக்கு ஆடியோ ஒன்றை பதிவு, அதில் பச்சைப்பாஸ் பசங்க கொடுத்த உயிர் பிச்சை உயிரால என்னால வாழ முடியாது மச்சான், நான் செத்துடறேன். என்னை தப்பா நினைக்காத. யாரும் என்னை தப்பா நெனைக்காதீங்க. எங்க ஃபேமிலி, எங்க அம்மா, அப்பா யாரும் என்னை தப்பா நெனைக்காதீங்க என்று சொல்லிவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளார். வேறு ஒரு ஆடியோவில், ஒரு மாணவர் உங்க பிஜி படிக்கிற மாணவர் மாட்டிக் கொண்டிருக்கிறார், யாராவது வந்து கூப்பிட்டு போங்கன்னு பேசியுள்ளது தெரிய வந்துள்ளது.


தகவலறிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார் பிரேதத்தை மீட்டு திருவள்ளூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஒன்றுகூடி குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க போவதில்லை என சக கல்லூரி மாணவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவம் கல்லூரி மருத்துவமனையில் முற்றுகையிட்டனர்.

மருத்துவமனையில் மாணவர்கள் அதிகளவு கூடியதால் பாதுகாப்பு பணியில் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் திருவள்ளூர் நகர காவல்துறையினர் 20க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருவள்ளூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பாக காணப்படுகிறது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

இராணிப்பேட்டை மாவட்ட செய்திகள் 


முந்தைய இராணிப்பேட்டை மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Monday, December 27, 2021

🔴மதுராந்தகத்தில் பெண் கவுன்சிலர் தற்கொலையால் பரபரப்பு..!

மதுராந்தகம் ஒன்றிய பெண் கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஒழுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா (35). இவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றிவந்தார். இவரின் கணவர் செந்தில். இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அலுவலராக பணியாற்றுகிறார். தம்பதிக்கு 3 வயதில் மகன் உள்ளான். 

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 15வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட ரேணுகா பெற்றிப்பெற்றார். இதன்பிறகு அவர், திமுகவில் இணைந்து பணியாற்றிவந்தார்.

இந்த நிலையில், இன்று காலை ரேணுகா தனது வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்ததும் அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் போலீசார் சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, குடும்ப பிரச்சனை காரணமாக ரேணுகா தற்கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். பெண் கவுன்சிலர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுராந்தகம் வட்டார செய்திகள் 


முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்