வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: "உன் இடுப்போ உடுக்கை மார்போ படுக்கை" ஆடியோவில் சிக்கினார் ஆபாச கவிஞர் வைரமுத்து.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 16, 2018

"உன் இடுப்போ உடுக்கை மார்போ படுக்கை" ஆடியோவில் சிக்கினார் ஆபாச கவிஞர் வைரமுத்து.!தற்போது மீடு ஹேஷ்டேக்கில் கவிஞர் வைரமுத்து முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். பல பெண்களும் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், சின்மயி கூறியிருந்த உண்மை போல் இருப்பதாக அனைவரும் அவருக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தந்தை போல் பழகிய இளம் பெண்ணிடம் கவிஞர் வைரமுத்து காமம் வெறியோடு ஒரு கவிபாடியுள்ளார் தற்போது இதுவும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வைரமுத்து மீது மேலும் ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளது. தற்போது மீண்டும் முழங்கும் தீயில் பெட்ரோல் ஊற்றி குண்டம் வளர்ப்பது போல் உள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் ஆடியோ பதிவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!


பாடகி சின்மயி குற்றச்சாட்டு : 
 #metoo என்ற ஹேஷ்டேக்கில் வைரமுத்து மீது பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களையும் அடுக்கி வைத்து வருகின்றனர். முதன் முதலில் பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டுகளை அவர் மீது அடுக்கி வைத்தார். மேலும் ஒரு சில பெண்களும் பாலியல் தொந்தரவு செய்த டுவிட்டரில் பதிவிட்டு பூகம்பத்தை உண்டாக்கினர்.


வைரமுத்துக்கு ஆதரவு:
 பாடகி சின்மயி கூறுவது பொய் என்றும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர் சுரேஷ் என்பரும், வைரமுத்துவும் கருத்து தெரிவித்து இருந்தனர். மேலும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் உள்ளிட்டோரும் வைமுத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தனர். மேலும், தகுந்த காட்சிகளோடு நீதிமன்றத்தில் நிரூவிப்பேன் என்றும் கூறியிருந்தார்.சின்மயிக்கு ஆதரவு:
 சின்மயிக்கு ஆதரவாக நடிகைகள் ஸ்ரீரெட்டி, சமந்தா, நடிகர்கள் சரத்குமார், சித்தார்த், விஷால் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். பெண் அரசியல் வாதிகளில் தமிழக பாஜ தலைவர் தமிழிசையும், திமுக எம்பி கனிமொழியும் தவறு செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு இருந்தனர்.


ஐஸ்வர்யா என்ற பெண் குற்றச்சாட்டு : 
 இதுகுறித்துபாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா என்பவரது டுவீட்டை ரீடுவிட் செய்துள்ளார். அதில் பேசிய பெண், தன்னுடைய தோழிக்கும் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றம்சாட்டியுள்ளார்.ஹலோ வைரமுத்து அவர்களே:
 ‘ஹலோ வைரமுத்து அவர்களே.. நீங்கள் எனது குரலைக் கேட்டதும் உங்களுக்கு என் ஞாபகம் வந்திருக்கும். நான் நீங்கள் நல்லவரா கெட்டவரா என்ற விஷயத்திற்கு வரவில்லை. ஆனால், எனக்கு நல்லா தெரியும் நீங்க தப்பு பண்ணியிருக்கீங்க. நான் என்னுடைய தோழிக்காக இப்ப பேசுறேன். அவளுக்கு வயது 24. நீங்கள் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்தபோது, எல்லோரும் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். அப்போது எனது தோழியும் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்கினாள். அந்த நேரத்தில் நீங்கள் அவளுடைய போன் நம்பரை கேட்டீங்க. அவளும் அப்பா ஸ்தானத்தில் உங்களை வைத்து போன் நம்பரை கொடுத்தாள். 


காம கவிதை வடித்த வைரமுத்து ஆடியோ: 
ஆனால், அன்றிரவு நீங்கள் எனது தோழிக்கு போன் செய்து எவ்வளவு அநாகரீகமாக கவிதை சொன்னீர்கள் என்று தெரியுமா. உங்களுக்கு தெரியும். அந்தக் கவிதை சொன்னால் உங்களுக்கு தெரியும். அதை சொல்லுகிறேன் கேளுங்க.. ‘உன் இடுப்போ ஒரு உடுக்கை, உன் மார்போ ஒரு படுக்கை'' இந்தக் கவிதை உங்களுடையதுதான். அதை என்னால் நிரூபிக்க முடியும். நீங்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. நீங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.சின்மயிக்கு நன்றி: 
சின்மயி.. உங்களால் தான் எனக்கும் இப்ப இந்த பிரச்சயை பேச முடியுது. இவ்வளவு நாளா எனக்கு அசிங்கமா அவமானமா இருந்தது. நீங்க ஓபனா பேசுனதுக்கு அப்புறம் தான் எங்களுக்கும் தைரியம் வந்துச்சு. அதுக்காக உங்களுக்கு நன்றி சொல்லிகிறேன்'.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment