வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இந்த இடங்கள்ல காதல் புரபோஸ் பண்ணா கண்டிப்பா சக்ஸஸ்தான்! தெரியுமா?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 16, 2018

இந்த இடங்கள்ல காதல் புரபோஸ் பண்ணா கண்டிப்பா சக்ஸஸ்தான்! தெரியுமா?



நானும் என்னென்னவோ செஞ்சி பாத்துட்டேன். ஆனாலும் புரிஞ்சமாதிரி தெரியல. ஒரு பொண்ணு எப்படி வாய்விட்டு சொல்லுவானு நினைக்குற பொண்ணுங்களுக்கும் சரி... ரெம்ப நாளா காதலிக்குற பசங்களுக்கும் சரி.. சும்மா புரபோஸ் பண்ணா எப்படி பாஸ் ஓகே ஆகும். அது அதுக்குனு சில இடங்கள் இருக்கு. இங்கெல்லாம் உங்க காதல புரபோஸ் பண்ணி பாருங்க.. கண்டிப்பா சக்ஸஸ்தான். அப்றம் என்ன ஒரு ரொமான்டிக் சுற்றுலா போய்ட்டு வந்துடவேண்டியதுதான!

ஊட்டி
 இயற்கையின் மேல் அதிகப் பற்றும், தீராக்காதலும் கொண்டவரா உங்கள் மனதை கொள்ளைக் கொண்ட அந்த அழகு மங்கை. அப்படியென்றால் அவரை ஊட்டிக்கு அழைத்துச் செல்லுங்கள். உங்கள் கல்லூரி நண்பர்களுடனோ அல்லது சக பணியாளர்களுடனோ ஊட்டி செல்ல வாய்ப்பு கிடைத்தால் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள். அது நிச்சயம் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் காதலில் மனமுருகி வாழ்வை அனுபவிக்கும் அனுபவசாலிகள். கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் எளிதாக 3 மணி நேரத்தில் ஊட்டி சென்றடையலாம். காதலர்கள் மட்டுமின்றி தம்பதிகள், பெரியவர் சிறியவர் என அனைவருக்கும் ஏற்ற இடம் இதுவாகும். இது கோவையிலிருந்து 93 கிமீ தொலைவில் உள்ளது. (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
கொடைக்கானல்
 உங்கள் காதலி, உங்களுடன் படிக்கும் வகுப்பு தோழியா? அப்போ கல்லூரி இன்பசுற்றுலாதான் சரியானத் தேர்வு. பெரும்பாலும் காதலிப்பவர்கள் தங்கள் கல்லூரி பிக்னிக் அப்பதான் புரபோஸ் பண்ணி, அதுல வெற்றியும் பெறுகிறார்களாம். போகும்போது டப்பாங்குத்து பாட்டு கேட்டுட்டே போயி, திரும்பும்போது வளையோசை கலகலகலனு பாட்டு பாடிட்டே வந்தவங்க நிறைய பேருங்களாம் தெரியுமா? மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல! அல்ல !அல்ல!



கொடைக்கானல் எப்படி செல்லலாம்?
 மதுரை சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்கள் 3 மணி நேரத்துக்குள் அடையுமாறு அமைந்துள்ளது கொடைக்கானல். இது காதலர்களின் சொர்க்கபூமியாக கருதப்படுகிறது. மேலும் அமைதியை நாடி வருபவர்கள், தேனிலவு தம்பதிகள் அனைவருக்கும் நல்ல அனுபவம் காத்திருக்கிறது.


மெரினா கடற்கரை
 உங்க கேர்ள் பிரண்ட் ஐடியில் பணிபுரிகிறாரா? அதுவும் சென்னையில்.. அப்படின்னா கண்டிப்பா மெரினா கடற்கரைதான் பெஸ்ட். உங்க பிரண்ட்ஸ் மூலமா எதாவது ஏற்பாடு செஞ்சி, அவங்கள மெரினாவுக்கு கூட்டியாந்து லவ்வ புரபோஸ் பண்ணிடுங்க. சென்னையில் லவ் பண்ற பாதி பேர் வேறு இடம் தெரியாமல் இங்குதான் தங்கள் காதலை வெளிப்படுத்துகிறார்களாமே தெரியுமா? மெரினா கடற்கரை அதிக பரப்பளவில் பரந்திருந்தாலும், சேப்பாக்கம், முண்டகக்கண்ணியம்மன் ரயில் நிலையத்தில் இறங்கி செல்வதுதான் பலரது விருப்பம். அங்கு சேப்பாக்கம் ஸ்டேடியமும் உள்ளது.


பாண்டிச்சேரி
 பாண்டிச்சேரி என்றாலே உங்களுக்கு எது மனதில் வந்து நிக்கும் என்பது வெளிச்சம். ஆனால் இது வாழ்க்கை பாஸ்.. இப்ப போயி சரக்கடிச்சி சாவகாசமா பேசிக்கலாம்னு கோட்டை விட்டுறாதீங்க... நீங்க காதலிக்கும் பெண்ணோடு பாண்டிச்சேரி போக வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் தவறவிடமாட்டீர்கள்தானே.. பாண்டிச்சேரியில் காண்பதற்கு எக்கச்சக்க இடம் இருக்கிறது. அதிலும் ரொமேன்டிக் மூடை உருவாக்கும் கடற்கரைகள், உங்களை அப்படியே பாரிஸுக்கு கூட்டிச்செல்லும். உங்கள் காதலியுடன் ஒரு டூயட் பாடிட்டே வந்துடலாம். அதுவும் லோ பட்ஜெட் ல...
சென்னையிலிருந்து பாண்டிச்சேரி 3 மணி 20 நிமிடத் தொலைவில் அமைந்துள்ளது. 


மாமல்லபுரம்
 மகாபலிபுரம் காதலர்களின் சொர்க்க பூமி என்று சென்னையில் பலருக்கு தெரியும். அப்படின்னா காதலிப்பவர்கள் மட்டும்தான் போகனுமானு கேட்காதீங்க.. உங்க தோழியுடனும் போகலாம். உங்க மனசுல இருக்குற ஆசைய அவங்கிட்ட வெளிப்படுத்த இந்த இடம் சூப்பருங்க..
சென்னைக்கு மிக அருகில் வெறும் 1.30 மணி நேரத்தில் கிழக்கு கடற்கரை சாலை பயணம் செல்ல யார்தான் வேண்டாம் என்பார்கள். அதுவும் உங்கள் மனம்விரும்பும் நபருடன்...!


மைசூர்
 பெங்களூருவில் பணிபுரியும் உங்கள் மனம் விரும்பிய அந்த நபருக்கு உங்கள் காதலை தெரியப்படுத்தவேண்டுமா. உடனே மைசூர் போங்க.. ஆமாங்க.. பெங்களூரவிட மைசூர்தான் அமைதியாகவும், அழகாகவும் கலை நயத்துடனும் இருக்கும்னு நாங்க சொல்லலைங்க... அனுபவசாலிங்க சொல்றாங்க.. இல்லையா பின்ன அவங்க காதல் கலைநயத்தோட வளர்ந்து வரும் காதலாச்சே.. பெங்களூருவைக் காட்டிலும் மைசூரு அதிக காதலர்களை கவர்கின்றது. 2.45 மணி நேரத் தொலைவில் இருப்பதாலும், கலை நயமிக்க பல இடங்கள் இங்குள்ளதாலும் அதிகம் பேர் விரும்பும் இடமாக உள்ளது இந்த மைசூரு.


கோவளம் பீச், திருவனந்தபுரம்
 கன்னியாகுமரிக்கு ஒரு டிரிப் போறீங்க அதுவும் உங்கள் மனம் விரும்பும் ஒருத்தரோடனா இந்த சான்ஸ் மட்டும் விட்டுறவே விட்டுறாதீங்க.. உங்க பிரண்ட்ஸ் எல்லார் மனசயும் மாத்தி, அதன் அருகிலேயே உள்ள கோவளம் பீச்சிக்கு கூட்டி போய்டுங்க.. கொண்டாட்டத்துக்கு கொண்டாட்டமும் ஆச்சி. உங்க லவ் புரபோஸ் பண்ண மாரியும் ஆச்சி.. தெரியுமா? இங்க புரபோஸ் பண்ணுனா உங்க லவ்வருக்கு உடனே ஓகே சொல்லணும்னு தோணுமாம்.. இந்த இடத்தோட அமைப்பு அப்படி..



கோவளம் எப்படி செல்லலாம் 
 கன்னியாகுமரிக்கு வந்துட்டு கோவளம் போகவில்லைனா கண்டிப்பா விசயம் தெரியும்போது நீங்க வருத்தப்படுவீங்க.. இந்த கட்டுரை காதலர்களுக்கும், காதல் சொல்லவிரும்புவர்களுக்கும் அல்ல.. ரொமேன்டிக்கான இடத்துக்கு போக விரும்பும் அனைவருக்குமே ஏற்றதுதான்.. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இவை அனைத்தும் உங்கள் பட்ஜெட் சுற்றுலா...


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment