வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இதான் Gap -ல கெடா வெட்றதா
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 15, 2018

இதான் Gap -ல கெடா வெட்றதாஒரு நடிகரும், நடிகையும் செய்த செயல் தான் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. பிரபல நடிகர் ஒருவர் மக்களுக்கு சேவை செய்ய துடிக்கிறார். அந்த துடிப்புக்காகவே அரசியலுக்கு வர திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் சமூகத்திற்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.
டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் தப்பே இல்லை.


ஹீரோயின் நிகழ்ச்சியின் முதல் எபிசோடுக்கு அவருடன் சேர்ந்து நடித்த நடிகை ஒருவர் வந்தார். அந்த நடிகை வந்ததிலும் தப்பே இல்லை. நடிகர் எத்தனையோ பேருடன் ஜோடி சேர்ந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸாக உள்ள படத்தின் ஹீரோயினை ஏன் அழைத்து வர வேண்டும். இப்படி கூடவா விளம்பரம் தேடுவார் அவர்? (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


பிரச்சனை பிரச்சனை நடிகர் முக்கிய பொறுப்பு வகிக்கும் இரண்டு இடங்களில் பிரச்சனை, பிரச்சனை, பிரச்சனையோ பிரச்சனையாக உள்ளது. அவருக்கு சோறு போடும் துறையை சேர்ந்தவர்களின் பிரச்சனையையே தீர்த்து வைக்க முடியாமல் திண்டாடுகிறார். இந்நிலையில் சமூக பிரச்சனையை தீர்க்க வந்துவிட்டாரா என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் மக்களின் பிரச்சனையை தீர்க்கும் நிகழ்ச்சி மூலம் சீப் விளம்பரம் தேடுகிறார் என்று நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.


விளம்பரம் ஹாலிவுட்டை அடுத்து பாலிவுட்டில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்துள்ளது. கோலிவுட்டில் தற்போது தான் மீ டூ இயக்கம் மெல்ல சூடுபிடிக்கிறது. இந்நிலையில் தான் நடத்தும் டிவி நிகழ்ச்சியை அந்த இயக்கத்துடன் ஒப்பிட்டுள்ளார் ஒரு அம்மணி. மீ டூ வை வைத்து அவரின் நிகழ்ச்சிக்கு விளம்பரம் தேடியுள்ளார் அவர். இப்படி வேண்டாமே படத்திற்கும், டிவி நிகழ்ச்சிக்கும் விளம்பரம் செய்வது முக்கியம் தான். ஆனால் அதற்காக இந்த அளவுக்கு இறங்கி வர வேண்டாமே. ஒரு விஷயம் நடக்கும்போது அதை ஆதரிக்காவிட்டாலும் அதன் மூலம் விளம்பரம் தேடாமல் இருப்பது நல்லது. தனது படம் ரிலீஸாகும் நேரத்தில் மீ டூ இயக்கத்தை கண்டுகொள்ளாவிட்டால் நெகட்டிவ் விளம்பரம் வந்துவிடுமே என்ற எண்ணத்தில் தான் அந்த நடிகர் ஆதரவு தெரிவித்ததாகவும் விமர்சிக்கப்படுகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment