வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வேட்டியால் விபத்துகுள்ளான அமைச்சர் -பீதியில் கர்நாடக மக்கள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 15, 2018

வேட்டியால் விபத்துகுள்ளான அமைச்சர் -பீதியில் கர்நாடக மக்கள்கர்நாடக மாநிலம், மைசூரு நகரில் நேற்று நடந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் தேவகவுடா வேட்டி இடறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
                                   


கர்நாடக மாநிலத்தில், 10 நாட்கள் கொண்டாடப்படும் தசரா பண்டிகை தொடங்கி நடந்து வருகிறது. மைசூரு நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளை கர்நாடக அரசு நாள்தோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று முதியோர்களுக்கான 21 கி.மீ. மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இந்த மாரத்தான் ஓட்டத்தை மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ஜி.டி. தேவுகவுடா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் ஓட்டத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்தது மட்டுமல்லாமல் தானும் இந்த ஓட்டத்தில் பங்கேற்றார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
ஆனால், ஓட்டப்போட்டிக்கான முறையான கால்சட்டை, பேன்ட் ஏதும் அணியாமல் பாரம்பரிய வேட்டி,சட்டை அணிந்து அமைச்சர் தேவகவுடா மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றார். அமைச்சர் தேவகவுடா ஓடத் தொடங்கியதும், அவருடன் அதிகாரிகள் சிலரும், ஊடகத்தினரும் ஓடத் தொடங்கினார்கள். 

ஓடும்போது அவ்வப்போது வேட்டி கீழே நழுவாமல் சரி செய்துகொண்டே தேவகவுடா ஓடி வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் வேட்டி தடுக்கி அமைச்சர் தேவகவுடா திடீரென கீழே விழுந்தார். இதைப் பார்த்ததும், உடன் ஓடி வந்தவர்கள் தேவகவுடாவைத் தூக்கி விட்டு ஆசுவாசப்படுத்தினார்கள். சாலையில் கீழே விழுந்ததால், அமைச்சருக்கு கை, காலில் லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. அதன்பின் அவர் ஓட்டத்தில் பங்கேற்காமல் பாதியிலேயே திரும்பினார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

 

No comments:

Post a Comment