வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 19 வயசு பையனுடன்.. 36 வயசான என் மனைவி.. தீக்குளிக்க போன ஐஸ் வியாபாரி!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 13, 2018

19 வயசு பையனுடன்.. 36 வயசான என் மனைவி.. தீக்குளிக்க போன ஐஸ் வியாபாரி!"36 வயசான என் பொண்டாட்டி, 19 வயசு பையனுடன் ஓடிப்போய்விட்டார், அவங்க 2 பேரையும் கண்டுபிடிச்சு தாங்க" என்று ஐஸ் வியாபாரி தனது மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. தருமபுரி மாவட்டம் எர்ரனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் இவர் ஒரு ஐஸ் வியாபாரி. இவரது மனைவி முருகம்மாள். இவர்களுக்கு தமிழ்செல்வி என்ற ஒரு மகள் உள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.


தீக்குளிக்க முயற்சி 
 மாரியப்பன் நேற்று திடீரென்று தமிழ்செல்வியுடன் தருமபுரி கலெக்டர் ஆபீசுக்குள் நுழைந்தார். அப்போது தன் உடலில் மண்எண்ணை ஊற்றி கொண்டார். பிறகு மகள் மீதும் மண்ணெண்ணையை ஊற்றினார். பிறகு மகளுடன் தீக்குளிக்க முயன்றார்.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

விசாரணை 
 இதை பார்த்து பதறி போன பாதுகாப்பு போலீசார், 2 பேரையும் காப்பாற்றினர். விரைந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து அவர்கள் மீது ஊற்றினர். பிறகு யார், என்ன என்று விசாரித்தனர்.


கள்ளக்காதல் 
அதற்கு மாரியப்பன், "நான் ஒரு ஐஸ் வியாபாரி. என் மனைவிக்கு 36 வயசாகிறது. மகன் முறையுள்ள 19 வயசு பையனுடன் ஓடிவிட்டார். ஓடிப்போகும்போது, வீட்டிலிருந்த 13 பவுன் நகைகளையும், இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தையும் எடுத்து சென்றுவிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு  
அவங்க 2 பேரையும் போலீசார் கண்டுபிடிச்சு தரணும். சுப்ரீம் கோர்ட்டு கள்ளத்தொடர்பு தப்பில்லை என்று தீர்ப்பு சொல்லிடுச்சு. இந்த தீர்ப்பால நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்" என்றார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment