வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ரோஹித், தவண் காட்டடிக்குப் பிறகு ‘கிங் கோலி’, தினேஷ் கார்த்திக் அபார பினிஷிங்: இந்தியா வெற்றி; ஆஸி.க்கு எதிரான டி20 தொடர் சமன்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 25, 2018

ரோஹித், தவண் காட்டடிக்குப் பிறகு ‘கிங் கோலி’, தினேஷ் கார்த்திக் அபார பினிஷிங்: இந்தியா வெற்றி; ஆஸி.க்கு எதிரான டி20 தொடர் சமன்



சிட்னியில் நடைபெற்ற 3வதும், கடைசியுமான டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 1-1 என்று சமன் செய்தது,  36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸி.யை மட்டுப்படுத்திய குருணால் பாண்டியா விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

கிங் கோலி மீண்டும் ஒரு முறை முக்கியமான கட்டத்திலிருந்து இலக்கை விரட்டி 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 41 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 22 நாட் அவுட் என்று திகழ்ந்தார், இருவரும் சேர்ந்து 6.3 ஒவர்களில் 60 ரன்களைச் சேர்த்து கிரேட் பினிஷிங் செய்தனர். ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய முடிவெடுத்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுக்க இந்திய அணி 19.4 ஓவர்களில் 168/4 என்று அபார வெற்றி பெற்றது.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

விராட் கொலி டி20 சர்வதேச போட்டிகளில் 14 முறை இலக்கைத் துரத்திய போது நாட் அவுட்டாகத் திகழ்ந்துள்ளார், ஒவ்வொரு முறையும் இந்தியா வென்றுள்ளது.
20வது ஓவரை ஆண்ட்ரூ டை வீச 3-வது பந்தை நேராக ஒரு அரக்க பவுண்டரி அடித்து ஸ்கோரைச் சமன் செய்து கொண்டாடினார், பிறகு மிட்விக்கெட்டில் பவுண்டரி அடித்து வின்னிங் ஷாட்டை அடித்தார். ஆஸ்திரேலியா ஒரு சிக்சரை கூட அடிக்க முடியாத நிலையில், ரோஹித் சர்மாவும் தவணும் தொடக்கத்தில் சிக்சர்களாக வெளுத்துக் கட்டினர்.


ரோஹித் சர்மா, தவண் அதிரடித் தொடக்கம்:
மிட்செல் ஸ்டார்க்கை மரியாதையுடன் ஆடி முதல் ஓவரில் 3 ரன்களையே எடுத்தனர். ஒரு பந்து யார்க்கராகி ரோஹித் சர்மாவின் மட்டை உள்விளிம்பில் அதிர்ஷ்டவசமாகப் பட்டது, இல்லையெனில் அவர் எல்.பி.ஆகியிருக்க அதிக வாய்ப்பிருந்தது. கூல்ட்டர் நைல், இவர்தான் ரோஹித் சர்மாவை பெரிய மைதானங்களில் காலி செய்வோம் என்றார், ஆனால் சாத்துமுறை நடந்தது. முதலில் லெக் திசையில் வீச ரோஹித் சர்மா அனாயசமாக லெக் பவுண்டரிக்கு அனுப்பினார். ஷிகர் தவண் அதே ஓவரில் ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து கொண்டு ஸ்கொயர் லெக்கில் தூக்கி விட்டு ஒரு பவுண்டரி அடித்தார், 2வது ஓவரில் 9 ரன்கள். அடுத்த மிட்செல் ஸ்டார்க் ஒவரில் தவண் கடைசி பந்தை மிகப்பிரமாதமாக லாங் ஆஃபில் பவுண்டரி விளாசினார். கூல்ட்டர் நைல் 4வது ஓவர் விளாசித் தள்ளப்பட்டது.


இடுப்புயர ஷார்ட் பிட்சை வீச ரோஹித் சர்மா பைன் லெக்கிற்கு தூக்கி சிக்சர் காட்டினார். இதே ஒவரில் ஷிகர் தவண் வேகம் குறைந்த பந்தை ஆன் திசையில் ஸ்லாக் ஸ்வீப் மாதிரி ஆடி சிக்சருக்குத் தூக்கினார். அடுத்து ஒரு கவர் பவுண்டரி. 20 ரன்கள் வந்தது. 5வது ஓவரை ஸ்டாய்னிஸ் மோசமாக வீசினார், அவர் வேகத்துக்கெல்லாம் இந்தப் பிட்சில் ஷார்ட் பிட்ச் பந்துகள் வீசியிருக்கக் கூடாது, இதனால் முதலில் முன் காலிலேயெ ஒரு ஆன் திசை சிக்சரை ரோஹித் விளாச, ஷிகர் தவண் ஒரு சிக்ஸ் 2 பவுண்டரிகளை விளாசினார். ஷார்ட் அண்ட் வைடு பந்துகள் பவுண்டரிக்குப் பறக்க இந்த ஓவரில் 22 ரன்கள் வர 5 ஓவர்கள் முடிவில் 62/0 என்று அதிரடி கண்டது இந்திய அணி. 6வது ஒவரில் ஷிகர் தவண் மிட்செல் ஸ்டார்க்கை ஒரு கிளாசிக் கவர் பவுண்டரி அடித்து அடுத்த வேக யார்க்கரில் எல்.பி.ஆனார். ரிவியூவில் ஆஸ்திரேலியா அவுட் வாங்கியது.  ஷிகர் தவண் 22 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 41 ரன்கள்.


இதற்கு அடுத்த ஓவரில் ஆடம் ஸாம்ப்பா ஒரு அபாரமான பந்தை வீச ரோஹித் சர்மா மட்டையில் பட்டு பவுல்டு ஆனார். 16 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் அவர் 23-ல் வெளியேறினார். 7 ஓவர்களி இந்தியா 67/2 என்று ஆனது.  மீண்டும் கூல்டர் நைலை வீச அழைக்க ராகுல் ஒரு சிக்ஸ் அடித்தார். 11 ரன்கள் வர 8 ஓவர்களில் 78/2 என்ற ரன் எண்ணிக்கையில் கூல்ட்டர் நைல் மட்டும் 3 ஒவர்களில் 40 ரன்கள் விளாசப்பட்டிருந்தார்.
ஆடம் ஸாம்பா விக்கெட் மெய்டனுடன் மிக டைட்டாக வீசினார், ராகுல் 14 ரன்களில் சொதப்பி மேக்ஸ்வெல் பந்தை நேராக லாங் ஆஃபிற்கு அடித்து வெளியேறினார். ரிஷப் பந்த், ஆண்ட்ரூ டை வீசிய வேகம் குறைந்த பவுன்சரை மிக மோசமாக ஆடி விக்கெட் கீப்பர் கேரியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்தியா 14 ஒவர்கள் முடிவில் 109/4, 6 ஓவர்களில் 56 தேவை என்ற நிலையில் விராட் கோலி 25 ரன்களுடனும் கார்த்தி 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஸாம்பாவின் 4வது ஒவரில் 4 ரன்களே வந்த நிலையில் கடைசி 5 ஒவர்களில் 52 ரன்கள் தேவைப்பட்டது. ஸாம்பா மிகப்பிரமாதமாக வீசி 4 ஒவர்கள் 1 மெய்டன் 22ரன்கள் 1 விக்கெட்.


கோலி, கார்த்திக் பினிஷிங்:
16வது ஒவரை ஆண்ட்ரூ டை வீச பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த விராட் கோலி பாயிண்டின் மேல் ஒரு பவுண்டரி அடித்தார், அடுத்த பந்து மேலேறி வந்து லாங் ஆஃபில் ஒரு மிகப்பிரமாதமான சிக்சரை விளாசினார். அந்த ஓவரில் 12 ரன்கள் வந்தன. 17 வது ஒவரில் மேக்ஸ்வெலை மீண்டும் இறங்கி வந்து டீப் மிட்விக்கெடில் கிங் கோலி இன்னொரு அபார சிக்சரை அடித்தார். அந்த ஓவரில் 13 ரன்கள் வர 138/4 என்று இந்தியாவுக்கு 3 ஓவர்களில் 27 என்று இலக்கானது. 18வது ஒவரை ஆண்ட்ரூ டை டைட்டாக வீசினார், ஆனால் ஒரு பந்தை ஷார்ட் பிட்ச் ஆக வீச தினேஷ் கார்த்திக் அடித்த ஆன் திசை சிக்ஸ் பார்வையாளர்கள் பகுதியில் 2வது அடுக்கில் போய் விழுந்தது, மிக முக்கியக் கட்டத்தில் மிக முக்கியமான கார்த்திக் சிக்ஸ் ஆகும் இது.
2 ஒவர்கள் 16 தேவை என்ற நிலையில் 19வது ஒவரை ஸ்டார்க் வீசினார்.


கோலி மிகப்பிரமாதமாக டீப் மிட்விக்கெட்டில் காலி இடத்தில் தட்டி விட்டு 2 ரன்களை ஓடினார், பிறகு கார்த்திக், ஸ்டார்க்கின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயான யார்க்கர் முயற்சியை மிக சாமர்த்தியமாக, புத்திகூர்மையுடன் நின்ற இடத்திலிருந்து மட்டையை லேசாக ஆஃப் திசையில் திருப்பி பந்தை தள்ளி விட்டார், பாயிண்டில் ஆள் இல்லை மிகப்பிரமாதமான பிளேஸ்மெண்ட், பவுண்டரி ஆனது. கோலி 34 பந்துகளில் ஏற்கெனவே அரைசதம் எடுத்திருந்தார். கடைசி ஓவரை வீச டை வந்தார், முதல் பந்தில் கோலி பீட்டன், 2வது பந்தில் நோ-ரன், கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டது, ஆனால் 3வது பந்தையும் 4வது பந்தையும் பவுண்டரிக்கு விரட்டிய விராட் கோலி வெற்றி நாயகன் ஆனார். தொடர் நாயகனாக ஷிகர் தவண் தேர்வு செய்யப்பட்டார். 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இந்தியாவினால் தொடரை வெல்ல முடியாமல் போனது. டெஸ்ட்டுக்கு முன்பாக இந்த வெற்றி நிச்சயம் இந்திய வீரர்களுக்கு ஒரு டானிக்காக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment