Run World Media: ஊருக்கு போன பொண்டாட்டியை காணோமே.. என்னாது நான் 5-வது புருஷனா.. ஒரு அதிர்ச்சி கதை

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 20, 2018

ஊருக்கு போன பொண்டாட்டியை காணோமே.. என்னாது நான் 5-வது புருஷனா.. ஒரு அதிர்ச்சி கதை5-வதாக வாக்கப்பட்டுட்டு ஏமாந்து நின்ற இளைஞரின் சம்பவம் இது!

ஆந்திர மாவட்டத்தில் கொம்மலுறு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ராமகிருஷ்ணாவிற்கும் கித்தலூரை சேர்ந்த ஆனந்த் ரெட்டி மகள் மோனிகாவுக்கும் 6 மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்தது.

கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே பெண்ணின் அப்பா, மாப்பிள்ளையிடம், "மகளை என் வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா" என்று கேட்டார். மகளை பிரிந்த பாசத்தில் அப்பா இப்படி கேட்கிறார் என நினைத்து மாப்பிள்ளையும் மோனிகாவை அவர் அப்பாவுடன் அனுப்பி வைத்தார்.


பொண்டாட்டியை காணோம் 
ஆனால் போன பொண்டாட்டியை ரொம்ப நாள் ஆகியும் காணோம். கூட்டிட்டு போன மாமனார் கிட்ட இருந்தும் எந்த தகவலும் வரவில்லை. 
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அதனால் நேரிலேயே போய் என்ன ஏதென்னு பாத்துட்டு வந்துடலாம்னு மாப்பிள்ளை கிளம்பி வந்தார்.

போலீசில் புகார் 
அங்கு வந்து பார்த்தால் வீட்டை மட்டும் இல்லை... ஊரையே காலி செய்துவிட்டு 2 பேரும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை காஜிப்பேட்டை ஸ்டேஷனில் ஒரு புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.


7 கல்யாணம்
அப்போதுதான் மோனிகாவின் வண்டவாளங்கள் ஒவ்வொன்றாக தெரியவந்தது. மோனிகா ஏற்கனவே திருணமானவர் என்பதும் இதுவரை 7 கல்யாணம் மோனிகா செய்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது. இதில் ராமகிருஷ்ணா 5-வதாக வாக்கப்பட்டவர். ராமகிருஷ்ணாவுக்கு அப்புறம் 2 பேர். அதாவது 6 மாசத்திலேயே மோனிகாவுக்கு 3 கல்யாணம் ஆயிருக்கு.

மோனிகா கைது
 6-வது புருஷன் விசாகப்பட்டினம், 7-வது புருஷன் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர்கள். இதனால் போலீசார் அடுத்தடுத்து விசாரணையில வேகவேகமாக இறங்கினார்கள். மோனிகாவின் செல்போனை வைத்து ஒருவழியாக ஹைதரபாத்தில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.


நகை, பணம்
அவரிடம் விசாரித்தபோது, "நல்லா வசதி படைத்த ஆண்கள் மேல் ஒரு கண்ணு எனக்கு எப்பவுமே இருக்கும். அவங்களை கரெக்டா குறி வெப்பேன். நெருங்கி போய் ஆசை ஆசையா பேசுவேன். அவங்களும் என்கிட்ட கல்யாணம் வரை வந்துடுவாங்க. கல்யாணம் ஆன உடனேயே நகை, பணம்னு கொஞ்சம் கொஞ்சமா கறக்க ஆரம்பிப்பேன். ஓரளவுக்கு தேறினதும் ஏதாவது சாக்கு சொல்லி வம்படியா ஒரு சண்டையை போட்டுட்டு அங்கிருந்து பிரிஞ்சு வந்துடுவேன்" என்றார்.

காதலன் உள்ளார்
இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார் மோனிகாவின் இன்னொரு செயலை கேட்டதும் ரொம்பவே ஆடிப்போய்விட்டனர். அதாவது மோனிகாவுக்கு ஒரு காதலன் இருக்கிறாராம். இவர் லிஸ்ட்டிலேயே இல்லாதவர். ஏனென்றால் இவரைதான் மோனிகா உண்மையாக அப்போதிலிருந்தே லவ் பண்ணி வருகிறாராம். யாரையெல்லாம் கல்யாணம் பண்ணி ஏமாத்தி, பணம், நகை பிடுங்கிட்டு மோனிகா எஸ்கேப் ஆகி வருகிறாரோ, அதையெல்லாம் கொண்டு வந்து கொடுப்பது இந்த லவ்வர்கிட்டதானாம்.


தொடர் விசாரணை 
இதற்கு பெத்த தகப்பனும் உடந்தை. மோனிகா போலீசில் சிக்கியதுமே காதலனும், தந்தையும் எஸ்கேப். ஆனால் போலீசார் விடவில்லையே... ஊரெல்லாம் தேடி அலச ஆரம்பித்தனர். கடைசியில் இப்படி ஒரு கேடு கெட்ட குடும்பத்தை கைது செய்து விட்டனர். இந்த தகவல்களை எல்லாம் ஆந்திராவின் காஜிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமுடு தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்