வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [வேலை வாய்ப்பு] இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் வேலை: விண்ணப்பித்துவிட்டீகளா..? கனரா வங்கி புரபேஷனரி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி - மிஸ்பண்ணிடாதீங்க!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 20, 2018

[வேலை வாய்ப்பு] இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் வேலை: விண்ணப்பித்துவிட்டீகளா..? கனரா வங்கி புரபேஷனரி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி - மிஸ்பண்ணிடாதீங்க!நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் 800 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

இதுவரை விண்ணப்பிக்காத தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன்பெறவும்.

(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

 

மொத்த காலியிடங்கள்: 800. இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 404 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 216 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு120 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 60 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.


தகுதி: 

ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. கணினியில் பணியாற்றும் திறனும் பெற்றிருப்பது  அவசியம் அல்லது பணியில் சேர்ந்த 6 மாதங்களுக்குள் கணினி குறித்து திறன் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வயதுவரம்பு:

1.10.2018 தேதியின்படி நிலவரப்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.


 சம்பளம்: 

 மாதம் ரூ. 23700 - 980/7 - 30560 - 1145/2 - 32850 - 1310/7 - 42020 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வங்கி-நிதிபணிகள் சார்ந்த ஓராண்டு டிப்ளமா பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் தகுதியானவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 

www.canarabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விரைந்து விண்ணப்பித்து பயன்பெறுங்கள். 

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ. 708 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.118 கட்டணமாக செலுத்த வேண்டும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

 

No comments:

Post a Comment