வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 50 வயசாச்சு.. காட்டுமணி செய்த வேலை இருக்கே.. கொடைக்கானல் அருகே ஒரு அக்கிரமம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 21, 2018

50 வயசாச்சு.. காட்டுமணி செய்த வேலை இருக்கே.. கொடைக்கானல் அருகே ஒரு அக்கிரமம்பெயர் காட்டு மணி... வயசு 50.. ஆனா பண்ணியிருக்கிற வேலையோ ரொம்ப ரொம்ப கேவலம்! கொடைக்கானல் அருகே உள்ள பகுதி செண்பகனூர். இங்கு வசித்து வருபவர்தான் காட்டுமணி. கல்யாணம் ஆகிவிட்டது. கட்டின மனைவியை படாத பாடு படுத்தி எடுத்துவிட்டார் காட்டு மணி. பல கொடுமைகளை வாழும் நாளெல்லாம் அந்த பெண்ணுக்கு தந்தார். இதனாலேயே மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்தும் விட்டார்.


பன்றிகள் வேட்டை 
காட்டு மணி வேலை என்ன தெரியுமா? பன்றிகளை வேட்டையாடுவதுதான். விவசாய நிலங்களில் பன்றிகள் நுழைந்து பயிர்களை நாசம் செய்துவிட்டால், காட்டுமணியை தான் கூப்பிடுவார்கள். இவர்கள் பன்றிகளை விரட்டுவதில் கில்லாடி!
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
கதவை சாத்தினார் 
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் காட்டுமணியின் வீட்டு முன்பு 14 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்தான். அவன் பெயர் நாகராஜ். விளையாடி கொண்டிருந்தவனை திடீரென தனது வீட்டுக்குள் கூப்பிட்டு கதவை சாத்தி கொண்டார் காட்டு மணி.

மகனை காணவில்லை  
பிறகு சிறுவனிடம் தகாத செயலில் ஈடுபட ஆரம்பித்தார். இதனால் பையனுக்கோ உடம்பெல்லாம் காயம் ஏற்பட்டுவிட்டது. காட்டு மணி வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்த மகனை காணவில்லை என்று அவரது தாயார் தேடி வந்துவிட்டார். காட்டு மணியின் வீட்டை தட்டினால் அவர் திறக்கவே இல்லை. இதனால் அக்கம்பக்கத்தில் போய் சொன்னதும், எல்லோரும் வந்தார்கள்.

கும்மியெடுத்தார்கள் 
கதவை உடைத்து கொண்டு உள்ளே போனார்கள். அங்கே காட்டுமணி சிறுவனிடம் ஓரினசேர்க்கையில் துன்புறுத்தப்பட்டதை ஆத்திரமடைந்தார்கள். அடுத்த செகண்டே காட்டு மணிக்கு தர்மஅடிதான். தெருவே சேர்ந்து காட்டு மணியை கும்கும்மென்று கும்மியெடுத்தார்கள். பிறகு போலீசில் புகார் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் காட்டு மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுவனுக்கு சிகிச்சை 
இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுவனை உடனடியாக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காட்டு மணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், போராட்டமே செய்வோம் என்று அந்த பகுதி மக்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment