வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: என்ன ஆச்சு மெரினா கடற்கரைக்கு.. நுரையை கக்கியது, நிறம் மாறியது.. பீச்சுக்கு வந்தவர்கள் பீதி!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 23, 2018

என்ன ஆச்சு மெரினா கடற்கரைக்கு.. நுரையை கக்கியது, நிறம் மாறியது.. பீச்சுக்கு வந்தவர்கள் பீதி!



மெரினா கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று, மக்களை பீதிக்குள்ளாக்கும் ஒரு சம்பவம் நடந்தேறியது. மாலை வேளையில் அந்த பக்கமாக வாக்கிங் சென்ற பலரும் குடும்பத்தோடு சென்றவர்களும் இதைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர் .

அலையோடு அலையாக, பொங்கிப், பொங்கி நுரை தள்ளிக் கொண்டு வந்தது. அதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சோப்பு நுரை போல பொங்கி காணப்பட்டது மட்டுமின்றி மெரினா கடலின் தண்ணீர்கூட அடர்ந்த பழுப்பு நிறமாக மாறியது.


கலர் மாறிய கடல் 
இந்த மாற்றங்கள் மக்களிடையே பெரும் பீதியை உண்டாக்கியது. குறிப்பாக கடலின் உள் பகுதியில் இவ்வாறு கடலின் வண்ணம் மாறியதை தெளிவாக பார்க்க முடிந்ததாக அதை நேரில் பார்த்த மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

கூவம் கழிவுகள் 
இதுபற்றி தேசிய கடலோர ஆய்வு மையத்தின் இயக்குனர் ரமண மூர்த்தி, கூறுகையில், இது போல கடலில் மாற்றம் மற்றும் நுரை ஏற்படுவது என்பது பருவமழை காலத்தின் ஆரம்பத்தில் இயல்பாக ஏற்படக்கூடியதுதான். கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் இருந்து வரக்கூடிய கழிவுகள் கடலில் சேர்கிறது. அப்போது கடலில் வீசும் கடுமையான காற்று காரணமாக இவ்வாறு நுரை கரை ஒதுங்குகிறது, என்று அவர் விளக்கம் அளித்தார்.


பெங்களூர் சம்பவம் 
பெங்களூரின் பெல்லந்தூர் ஏரியில் அவ்வப்போது இதுபோல நுரை பொங்கி கரை ஒதுங்கும். இதனால் சாலையில் வாகனங்கள் கூட போக முடியாது. இதற்கு காரணம் நகரில் உள்ள கழிவுகள், சாக்கடை கால்வாய் மூலமாக ஏரிகளை சென்றடைவதுதான்.


மெரினா சூழல் 
இந்த காரணத்தால் அங்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து, மாசுக்களை குறைக்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. இப்போது சென்னையிலும் இதுபோன்ற பிரச்சினை தலை தூக்கி உள்ளது. இது மெரினாவின் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று எச்சரிக்கிறார்கள் சூழலியலாளர்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment