வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நாப்கின் போடாதது யார்.. மாணவி டிரஸ்ஸை கழற்றி ஆசிரியர்கள் அநாகரீகம்.. பஞ்சாபில் ஷாக் சம்பவம்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 05, 2018

நாப்கின் போடாதது யார்.. மாணவி டிரஸ்ஸை கழற்றி ஆசிரியர்கள் அநாகரீகம்.. பஞ்சாபில் ஷாக் சம்பவம்!



ஆசிரியர்களின் வரைமுறை எது எதுவென தெரியாமல் போய்விட்டது. அதனால்தான் பஞ்சாபில் மாநிலத்தில் நடந்த இந்த விஷயம் விபரீதமாகவே ஆகிவிட்டது. ஃபாசில்கா மாவட்டத்தில் குந்தால் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 3 நாட்களுக்கு முன்பு, இந்த பள்ளியின் பாத்ரூமில் ஒரு சானிடரி நாப்கின் இருந்திருக்கிறது. இந்த நாப்கினை பார்த்த ஆசிரியர்கள் கடும் கோபம் அடைந்தனர். பாத்ரூமில் கொண்டுபோய் நாப்கினை போட்டது யார் என்று மாணவிகளிடம் கேட்டார்.

சோதனை செய்தனர் 
ஆனால் வெட்கப்பட்ட மாணவிகள் இது சம்பந்தமான பதில் ஏதும் சொல்லாமல் இருந்தனர். இதனால் இன்னும் ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள் மாணவிகளின் டிரஸ்ஸை முழுதும் கழட்ட சொன்னார்கள். யார் நாப்கின் அணிந்திருக்கிறார்கள் என்று கேட்டு அதற்கான சோதனையிலும் இறங்கிவிட்டார்கள். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
விஸ்வரூபம்
 இப்படி நடத்தப்பட்ட சோதனையால் மாணவிகள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள். சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவிகள் அழுது கொண்டே வீட்டுக்கு ஓடினார்கள். தங்கள் பெற்றோரிடம் கூறி கதறினார்கள். இதையடுத்து இந்த சம்பவம் விஸ்வரூபமெடுத்தது. விஷயம் விபரீதமாகி பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டது.



சிசிடிவி கேமரா
 இதை கேட்ட முதல்வரும் அதிர்ச்சியடைந்து, உடனடியாக இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி உடனடியாக பள்ளிக்குச் சென்று மாணவிகள், பெற்றோரிடம் விசாரணை நடத்தினார். மேலும் பள்ளியில் உள்ள சிசிடிவி காமராக்களின் காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. 


2 பேர் சஸ்பெண்ட் 
அப்போது இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட 2 ஆசிரியர்கள் உடனடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். டிரான்பர் செய்யப்பட்டாலும் இவர்கள் 2 பேர் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பள்ளி மாணவிகளின் ஆடைகளை களைந்து நடத்தப்பட்ட நாப்கின் சோதனை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment