வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மெரீனா பீச்சில் நிர்வாணமாக பிணமாக கிடந்தவர் மதுரை லட்சுமி.. கொல்லப்பட்டது ஏன்?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 05, 2018

மெரீனா பீச்சில் நிர்வாணமாக பிணமாக கிடந்தவர் மதுரை லட்சுமி.. கொல்லப்பட்டது ஏன்?


மெரினா பீச்சில் மீட்கப்பட்ட பெண் யார் என போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து விட்டார்கள். மேலும் அந்த பெண் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்ததும் தெரியவந்துள்ளது. பீச்சில் உள்ள நீச்சல் குளம் பின்பக்கம் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதாக வாக்கிங் போனவர்கள் கண்டார்கள். அந்த பெண்ணின் உடல்மீது அரைகுறையாக மண்ணை போடப்பட்டும், மூக்கிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டும், முகம், உடம்பு என எல்லா இடங்களிலும் பலமான காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.


விவரம் தெரியவில்லை
 மர்ம நபர் ஒருவர் உல்லாசமாக இருக்க அந்த பெண்ணை அழைத்து வந்து, ஒன்றாக தண்ணியும் அடித்துவிட்டு, பிறகு ஏற்பட்ட தகராறில் அந்த பெண்ணை அடித்தே கொன்றுள்ளதும் தெரியவந்தது. ஆனால் அந்த பெண் யார் என்ன விவரம் உடனடியாக போலீசாருக்கு தெரியவில்லை. எப்பவுமே கூட்டமாக இருக்கும் இந்த கொலை எப்படி நடந்திருக்கும் என போலீசார் உட்பட எல்லோருமே ஷாக் ஆனார்கள். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
செல்போன் ஆய்வு
 சடலத்தின் அருகே இருவரின் செருப்பு, மதுபாட்டில்கள், பெண்ணின் செல்போன் இருந்திருக்கிறது. இந்த செல்போன் ரொம்ப சாதாரண பழைய மாடல் செல்போனாம். அதிலுள்ள நம்பர்களை கொண்டும், யாராவது அந்த பகுதியில் தொலைந்து போய் இருக்கிறார்களா என்பதை கொண்டும் விசாரணையை ஆரம்பித்தனர்.


நாய்கள் சண்டை
 தற்போது இந்த விசாரணையில் ஒருசில விவரங்கள் வெளிவந்திருக்கிறது. நீச்சல் குளம் பின்னாடி மேடு போன்ற பகுதியில் நேத்து விடிகாலை இரண்டு நாய்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பள்ளம் நோண்ட ஆரம்பித்திருக்கின்றன. பள்ளம் நோண்டுவதில் அந்த நாய்கள் சண்டை போட்டு கொண்டே இருந்திருக்கின்றன.


பாதி புதைந்த சடலம்
 இப்படி சத்தமாக குரைத்து கொண்டும், ஒரே இடத்தில் பள்ளம் நோண்ட போட்டி போட்டு சண்டையிடவும்தான் வாக்கிங் போனவர்களுக்கு சந்தேகம் வந்து கிட்ட போய் பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் மண்ணில் பாதி புதைத்தும் புதைக்காமலும் அந்த பெண்ணின் சடலத்தை பார்த்தோம் என போலீசாரிடம் பொதுமக்கள் சொல்லி இருக்கிறார்கள்.


நிர்வாண நிலை
 இதனையடுத்து பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து பார்த்தால் அவர் நிர்வாண நிலையில் இருந்துள்ளார். அங்கு மணலில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடலை தோண்டி எடுத்தனர். கொல்லப்பட்ட பெண்ணுக்கு 35 வயது இருக்கும். உடல் அருகே புடவை மற்றும் தாலி கயிறு, செருப்பு ஆகியவை மணலில் புதைந்து கிடந்தது. அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மதுரை லட்சுமி கொலை 
செய்யப்பட்ட 30 வயதுடைய பெண் மதுரையை சேர்ந்த லட்சுமி என்பதும், கடந்த 2 மாதமாக சென்னையில் தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக, அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விவரத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள். பீச் மற்றும் நீச்சல் குளம் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் கொலையாளியை பிடித்து விடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment