வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கழிவறையில் இரகிசய கேமரா! மற்றுமொரு விடுதி உரிமையாளர் கைது
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 26, 2018

கழிவறையில் இரகிசய கேமரா! மற்றுமொரு விடுதி உரிமையாளர் கைது

மும்பை கிர்கான் பகுதியில் நடைபெற்ற இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தில், 47 வயதான மகளிர் விடுதி உரிமையாளர் ஒருவர் அவ்விடுதியில் தங்கியிருந்த அப்பாவி பெண்களை வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


அங்கிருந்து தப்பித்த பெண் ஒருவர் டிபி ரோடு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மும்பை  
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், மும்பையை சேர்ந்த அந்த குற்றஞ்சாட்டப்பட்ட நபர், பெண்களுக்கான உண்டு உறைவிட விடுதியை நடத்திக்கொண்டு அங்கேயே பெற்றொருடன் வசித்துவருகிறார். பாதிக்கப்பட்ட பெண்கள் ஓராண்டிற்கும் மேலாக அங்கு வசித்து வந்தாலும், கடந்த சில நாட்களாக அப்பெண்கள் தனியறையில் பேசிய உரையாடல்களை குற்றஞ்சாற்றப்பட்ட இந்த நபர் மிமிக்ரி செய்துள்ளார்.

சிறிய எலெக்ட்ரிக் அடாப்டரை கண்டறிந்தனர்.  
துவக்கத்தில், அவர் தங்களின் உரையாடலை கேட்டிருக்கலாம் என நினைத்த பெண்கள், ஒருநாள் தங்கள் அறையில் சிறிய எலெக்ட்ரிக் அடாப்டரை கண்டறிந்தனர். அதை பெண்கள் கைக்குட்டை கொண்டு மறைத்த நிலையில், பின்னர் அங்கு வந்த விடுதி உரிமையாளர் கைகுட்டையை கருவியில் இருந்து நீக்குமாறு கூறியுள்ளார்.

புகார்  
இதனால் சந்தேகமடைந்த அப்பெண்கள், அக்கருவி தொடர்பாக இணையத்தில் தேடி அது உண்மையில் ஒரு கேமரா என்பதை கண்டறிந்தனர். கோபமும், அதிர்ச்சியும் அடைந்த பெண்கள் ,உடனடியாக டிபி ரோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பான ஐபிசி பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, டிசம்பர் 19 அன்று விடுதி உரிமையாளரை கைது செய்தது காவல்துறை.

மின்விசிறி, ஜன்னல்கள் 
அதிர்ச்சிகரமாக, அந்த நபர் மின்விசிறி, ஜன்னல்கள், மின் சுவிட்ச்கள் மற்றும் கழிப்பறையிலும் கேமரா பொருத்தியதாக ஒப்புக்கொண்டார். அவருடைய லேப்டாப்பில் பழைய வீடியோக்களையும் கண்டறிந்துள்ளது போலீஸ் குழு. இந்த வீடியோக்கள் வேறு யாருடனாவது பகிரப்பட்டுள்ளதா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். எனினும் வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

வை-வை கேமரா: 
ஒரு சில கேமராக்களில் வை-வை தொழில் நுட்பத்துடன் கூடிய கேமராக்களை பொருத்தியுள்ளார். இதனால் பதிவாகும் காட்சிகள் இவரின் செல்போனில் இருந்தே பார்த்துக் கொள்ள முடியும். அதில், எல்இடி பல்ப் போன்றும் கேராக்கள் இருந்துள்ளன. இதை போலீஸ் வாக்குமூலத்தில் அவர் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment