வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: செஞ்சியில் கண்தானம் செய்த மூதாட்டி | Great died Old lady Donating eye in Ginjee
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 28, 2019

செஞ்சியில் கண்தானம் செய்த மூதாட்டி | Great died Old lady Donating eye in Ginjee

முதியோர் இல்லத்தில் இறந்த மூதாட்டியின் கண்கள் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.கடந்த ஓராண்டுக்கு முன்பு சாலையோரம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த தைலம்மாள், 68; என்ற மூதாட்டியை மீட்டு சமூக நலத்துறையினர் செஞ்சியில் உள்ள அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர்.வயது முதிர்வின் காரணமாக நேற்று முன்தினம் தைலம்மாள் இறந்தார். அவரது கண்களை தானமாக வழங்க விடுதி நிர்வாகி நளினி முடிவுசெய்தார்.இதுகுறித்து செஞ்சி அரிமா சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.


அவர்கள், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து செஞ்சி வந்த மருத்துவக் குழுவினர் மூதாட்டியின் கண்களை அகற்றி தானமாக பெற்றுச் சென்றனர்.ரோட்டரி சங்க தலைவர் இளங்கோவன், செயலர் சேகர், பொருளாளர் பன்னீர்செல்வம் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment