வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாமல்லபுரம் அருகே வேன் - பஸ் மோதல் - ஓட்டுனர் பலி | Mamallapuram Van Bus Accident News | Mahabalipuram Bus Van Accident News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 23, 2019

மாமல்லபுரம் அருகே வேன் - பஸ் மோதல் - ஓட்டுனர் பலி | Mamallapuram Van Bus Accident News | Mahabalipuram Bus Van Accident News

மாமல்லபுரம் அருகே, சரக்கு வேன், ஆம்னி பஸ், நேருக்கு நேர் மோதியதில், வேன் ஓட்டுனர் இறந்தார்.


மரக்காணம் பகுதியிலிருந்து, நேற்று முன்தினம் இரவு, இளநீர் ஏற்றிய, 'ஈஷர்' வேன், சென்னை சென்று கொண்டிருந்தது.மரக்காணம் தாலுகா, எம்.புதுப்பாக்கத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் அய்யனாரப்பன், 39; ஓட்டினார். மற்றொருவர், உடன் பயணம் செய்தார்.மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி பகுதியில், இரவு, 10:45 மணிக்கு கடந்த போது, சென்னையிலிருந்து, வேதாரண்யத்திற்கு, பயணியருடன் சென்ற தனியார் ஆம்னி பஸ்சும், வேனும், நேருக்கு நேர் மோதின.

இதில், வேன் ஓட்டுனர், வேனிலிருந்து துாக்கி எறியப்பட்டு, அங்கேயே இறந்தார். பின்னால் வந்த கார், பஸ்சின் மீது மோதியது. இதில், காரில் இருந்த நான்கு பேர், லேசான காயத்துடன் தப்பினர்; பஸ்சில் இருந்தோர் யாரும் காயமடையவில்லை.

பஸ் ஓட்டுனர் மகேந்திரன், மாமல்லபுரம் போலீசில், இது குறித்து புகார் அளித்தார்.விபத்தால், இத்தடத்தில், ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. போலீசார், விபத்து வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

No comments:

Post a Comment