வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-01-20
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, January 27, 2019

வேலைவாய்ப்பு - ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா? அரிய வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2019

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவக் குடியிருப்பில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு, 8, 10 மற்றும் பிளஸ் டூ மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

பணி: Safaiwala - 06 

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: 

எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி:

Mazdoor - 01 

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 

தகுதி:

Wireman, Fitter, Carpenter, Plumber, Electrician, Mason Course போன்ற பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி:

Male Nursing Assistant - 01 

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000 


தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:

Secondary Grade Teacher - 01

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

தகுதி: 

பிளஸ் டூ முடித்து ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் அல்லது பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 

08.02.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2019


வேலைவாய்ப்பு - ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலை வேண்டுமா?விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2019

ஆர்.பி.எஃப் என அழைக்கப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையில் காலியாக உள்ள 798 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 30க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

மொத்த காலியிடங்கள்: 798

பதவி: Constable (Water Carrier) - 452 பதவி: Constable (Safaiwala) - 199 பதவி: Constable (Washer man) - 49 பதவி: Constable (Barber) - 49 சம்பளம்: மாதம்
ரூ.21,700 வழங்கப்படும்.

பதவி: Constable (Mail) - 07 பதவி: Tailor Gr.III - 20 பதவி: Cobber Gr.III - 22 சம்பளம்: மாதம் ரூ.19,900 வழங்கப்படும்.

வயதுவரம்பு:

1.1.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ. 500 கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் ரூ. 400 கணினித் தேர்வின்போது திரும்ப அளிக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி, பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள், அனைத்துப் பிரிவு பெண்கள் ரூ. 250-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் கணினித் தேரதேர்வின்போது திரும்ப அளிக்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2019


மாமியாரைக் கொன்று கொள்ளை.. சென்னையில் குதிரை ரேஸ்.. பலே மருமகன்..

புதுச்சேரியில் மாமியாரை கொலை செய்து 12 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த பணத்தில் சென்னை சென்று குதிரை பந்தயத்தில் ஈடுபட்ட மருமகன் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரிடம் பிடிபட்டுள்ளார். 


புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த கலைவாணி என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு கொலை செய்யபட்டார். அப்போது அவரது வீட்டில் இருந்த 50 சவரன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டு தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஆனால் இந்த கொலை வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரெட்டியார்பாளையம் பகுதியில் தமிழ்செல்வி என்பவரிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முத்தியால்பேட்டையை பகுதியில் வசித்துவந்ந தனது மாமியார் கலைவாணியை கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்ததாக தெரிவித்தார். 

மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அடகு வைத்து பெற்ற பணத்தில் தனது நண்பர் சதிஷ் என்பவருடன் சேர்ந்து சென்னையில் நடைபெறும் குதிரை பந்தயங்களில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து போலீசார் ஆறுமுகத்திடமிருந்து கொள்ளையடிக்கபட்ட 12 லட்சம் மதிப்பிலான 47 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து அவரது நண்பர் சதிஷ் என்பவரையும் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். பணத்திற்காக மாமியரை மருமகனே கொன்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தில் அக்னியை 7 முறை வலம் வருவது ஏன் என்று தெரிந்து கொள்வோம்.

திருமணத்தின் போது புதுமண தம்பதியினர் அக்னியை 7 முறை சுற்றுவார்கள். மணமக்கள் அக்னியை 7 முறை வலம் வருவது ஏன் என்று தெரிந்து கொள்வோம்.

திருமணத்தின் போது புதுமண தம்பதியினர் அக்னியை 7 முறை சுற்றுவார்கள். இந்த சடங்கை நமது முன்னோர்கள் எதற்காக செய்தார்கள் என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

வாழையடி வாழையாக நாம் இந்த சடங்கை செய்து வருகிறோம். மணமக்கள் அக்னியை 7 முறை வலம் வருவது ஏன் என்று தெரிந்து கொள்வோம்.

முதல் அடி - பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாம் அடி - ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

மூன்றாம் அடி - நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

நான்காவது அடி - சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடி - லட்சுமி கடாட்சம் நிறைந்து பெற வேண்டும்.

ஆறாவது அடி - நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

ஏழாவது அடி - தர்மங்கள் நிலைக்க வேண்டும்.  

ரூ.1.50 லட்சத்தில் உடை, டிராவல் பை பிரியங்கா சோப்ராவின் செல்ல நாய்க்கு வசதிகள்

பிரியங்கா சோப்ரா அணியும் விலை உயர்ந்த உடைகள், செருப்புகள், கைப்பைகள் ரசிகர்களால் கவனிக்கப்படுகின்றன. இப்போது அவர் வளர்த்து வரும் செல்ல நாய் டயானாவும் பிரபலங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது.

பிரபல இந்தி நடிகை, பிரியங்கா சோப்ரா. ஒரு படத்தில் நடிக்க ரூ.9 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். குவாண்டிகா தொடர் மூலம் ஹாலிவுட்டிலும் பிரபலமாகி உள்ளார். இவருக்கும், அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் திருமணம் முடிந்துள்ளது. தற்போது ‘ஸ்கை இஸ் பிங்’ என்ற இந்தி படத்திலும் ‘இஸ் நாட் ரொமான்டிக்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

பிரியங்கா சோப்ரா அணியும் விலை உயர்ந்த உடைகள், செருப்புகள், கைப்பைகள் ரசிகர்களால் கவனிக்கப்படுகின்றன. இப்போது அவர் வளர்த்து வரும் செல்ல நாய் டயானாவும் பிரபலங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது. அதன் பெயரிலேயே டைரிஸ் ஆப் டயானா என்ற பக்கத்தை இன்ஸ்டாகிராமில் வைத்துள்ளார். அதை 93 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்.

செல்ல நாயுடன் அதிக நேரம் செலவிடுகிறார். ஷாப்பிங் செல்லும்போதும் கூடவே அழைத்து செல்கிறார். இப்போது அந்த நாய்க்கு விசேஷமாக வடிவமைத்த உடையை வாங்கி அணிவித்து இருக்கிறார். அது பயணிக்க ‘டிராவல் பை’ ஒன்றையும் வாங்கி இருக்கிறார். அதற்குள் புதிய உடையுடன் அந்த நாய் இருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.

டயானாவுக்காக டிராவல் வீட்டை ஆழகாக வடிவமைத்து கொடுத்த மிமிக்கு நன்றி என்று அதில் பதிவிட்டுள்ளார். இந்த உடை மற்றும் டிராவல் வீடு(பை) செலவு ரூ.1.50 லட்சம் என்று கூறப்படுகிறது.  

‘கள்ளக்காதலை கணவரிடம் தெரிவித்ததால் மகளை கொன்றேன்’ கைதான தாய்

சேலம் அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான அவரது தாய், கள்ளக்காதலை கணவரிடம் தெரிவித்ததால் மகளை கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். விவசாயி. இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்று வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரியங்கா காந்தி (வயது 24). இவர்களுடைய மகள் ஷிவானி (5). ஒரே மகள் என்பதால் பெற்றோர் பாசத்துடன் வளர்த்து வந்தனர்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


சங்கர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருவதால் பிரியங்கா காந்தி, தனது மகளுடன் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலுப்பநத்தம் கிராமத்தில் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பிரியங்கா காந்தி தனது மகளை 60 அடி ஆழ விவசாய கிணற்றில் வீசி கொலை செய்தார். பின்னர் அவரும் கிணற்றில் குதித்து தத்தளித்தார்.

இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து கிணற்றில் இருந்து பிரியங்கா காந்தியையும், ஷிவானியின் உடலையும் மீட்டனர். தொடர்ந்து போலீசார் பிரியங்கா காந்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொள்ளையர்கள் பணத்தை பறித்துக்கொண்டு, சிறுமியை கிணற்றில் வீசி கொன்று விட்டு சென்றதாக தெரிவித்தார்.

இதில் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், பிரியங்கா காந்தி உண்மையை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் வெங்கடேஷ் (25) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 24-ந்தேதி மகளுடன் வெங்கடேஷ் வீட்டுக்கு சென்றேன். அப்போது வெளிநாட்டில் இருந்து போன் செய்த எனது கணவர் சங்கரிடம், எனது மகள் ஷிவானி எனது கள்ளக்காதல் விவகாரத்தை கூறி விட்டாள். எனவே அவளை கிணற்றில் வீசி கொன்று விட்டு, நானும் கிணற்றில் குதித்து கொள்ளையர்கள் தள்ளி விட்டதாக நாடகமாடியதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.   

பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் ஜோடி கலப்பு திருமணம்: 2 குடும்பங்கள் கிராமத்தை விட்டு தள்ளிவைப்பு

மண்டியாவில் காதல் ஜோடி பெற்றோர்கள் சம்மதத்துடன் கலப்பு திருமணம் செய்ததால் 2 குடும்பங்கள் கிராமத்தை விட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மண்டியாவில் காதல் ஜோடி பெற்றோர்கள் சம்மதத்துடன் கலப்பு திருமணம் செய்ததால் 2 குடும்பங்கள் கிராமத்தை விட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


கலப்பு திருமணம்

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா கொல்லரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் பெங்களூருவில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த யசோதா என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் காதல் விவாகரம் இருவீட்டாருக்கும் தெரியவந்துள்ளது.
முதலில் இருவீட்டாரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்களின் காதலுக்கு இருவீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடி கலப்பு திருமணம் செய்துகொண்டனர்.

கிராமத்தை விட்டு தள்ளிவைப்பு

குமார்-யசோதா ஜோடி பெற்றோர்கள் சம்மதத்துடன் கலப்பு திருமணம் செய்தாலும், இந்த திருமணத்துக்கு அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள், இரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்த அபராதத்தை அவர்கள் கட்டியுள்ளனர். திருமணத்திற்கு பிறகு யசோதா, குமாருடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் யசோதா தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள், யசோதா கிராமத்துக்குள் வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் திரும்பி போக வேண்டும் என யசோதாவின் குடும்பத்தினருக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர். இந்த நிலையில் குமார்-யசோதா ஜோடி கலப்பு திருமணம் செய்ததால், 2 பேரின் குடும்பங்களையும் கிராமத்தைவிட்டு தள்ளிவைத்துள்ளனர்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கர்நாடக மாநில பெண்கள் நலத்துறை தலைவி நாகலட்சுமி பாய், இதுகுறித்து மண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக மண்டியா மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலராமேகவுடா, அந்த கிராமத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி னார். மேலும் வக்கீல் புட்டமாது என்பவரும் கிராமத்தின் பெரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதுகுறித்து யசோதாவின் பெற்றோர் கூறுகையில், கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள் தங்களை விலங்குகளை விட கேவலமாக நடத்துகிறார்கள். எங்கள் பக்கத்தில் வரவே அவர்கள் தயங்குகிறார்கள். இது எங்களுக்கு மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது என்றனர்.

கிரிமினல் வழக்கு

இதுகுறித்து ஹலகூர் போலீசார் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக மாநில பெண்கள் நலத்துறை தலைவி நாகலட்சுமி பாய் தெரிவித்துள் ளார்.

மரம் நடும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் ஃப்ரீ, ஃப்ரீ.. செங்கோட்டையன் ஸ்வீட் தகவல்

ஆசிரியர்களின் போராட்டம் தவறாக ஒரு சிலரால் தூண்டிவிடப்படுகிறது என்றும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரிய சங்கங்களுடம் பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 


சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள சாரண, சாரணியர் இயக்க தலைமையகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றிய பின் மாணவ,மாணவியரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


கூடுதல் மார்க்

பின்னர், மேடையில் பேசிய அவர் கூறியதாவது: எதிர்கால நீர்த் தேவையை கருத்தில் கொண்டு மாணவர்கள் மரங்களை நடவேண்டும். மரம் நடும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.


தவறான தகவல்  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் கூறியதாவது: அரசுப்பள்ளிகளை மூட இருப்பதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினரிடம் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். ஆசிரியர்களின் போராட்டம் ஒரு சிலரால் தவறாக தூண்டிவிடப்படுகிறது. 250 நடுநிலைப்பள்ளிகள் , உயர்நிலைப்பள்ளிகளாகவும், 200 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.


பணிக்கு வாங்க  

30 தொடக்கப்பள்ளிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளை மூட இருப்பதாக சிலர் தவறான தகவல்களை பரப்பி ஆசிரியர்களை சிலர் தூண்டி விடுகிறார்கள். தவறான தகவல்களை கூறி ஆசிரியர்களை தூண்டி விடுபவர்கள் இத்தகைய செயல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். பள்ளிகளை மூடும் எண்ணம் அரசிற்கு இல்லை. இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களுக்கு விளக்க அரசு தயாராக உள்ளது. ஏழை,எளிய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும், இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.


பேச்சுவார்த்தைக்கு ரெடி  

குடியரசு தினத்தன்றும், பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற நிருபர்களின் கேள்விக்கு, பொறுத்திருத்து பாருங்கள், என்று பதிலளித்தார் அமைச்சர் செங்கோட்டையன். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளதாகவும், பேச்சுவார்த்தைக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் முன்வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Saturday, January 26, 2019

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உட்பட 112 பேருக்கு பத்மஶ்ரீ, விபூஷண், பத்ம பூஷண் விருதுகள்


112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த முதுபெரும் பெண்மணி சின்னப்பிள்ளை, ஆன்மீகத் தலைவர் பங்காரு அடிகளார் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 112 பேரில் 4 பேருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்படுகிறது. 14 பேருக்கு பத்மபூஷண் விருதும்.. 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்படுகிறது.


விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டோரில் 21 பேர் பெண்கள் ஆவர். 11 பேர் வெளிநாட்டினர் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள். 3 பேருக்கு மறைவுக்குப் பின்னர் விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் 112 பேரில் ஒருவர் திருநங்கை சமூகத்தைச் சேர்ந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள் கிடைக்கவில்லை. 


பத்மஸ்ரீ விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் 
 1. பங்காரு அடிகளார் 
 2. டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்
 3. திருநங்கை நர்த்தகி நடராஜ் 
 4. மதுரை சின்னப்பிள்ளை 
 5. ஆர்.வி. ரமணி 
 6. இசையமைப்பாளர் ஆனந்தன் சிவமணி 
 7. ராமசாமி வெங்கடசாமி

4 பேருக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்துள்ளது.
 1. தீஜன் பய் 
 2. இஸ்மாயில் ஓமர் குல்லேலா
 3. அனில்குமார் மணிபாய் நாயக்
 4. பலவ்ந்த் மோரீஸ்வர் புரந்தரே 
14 பேருக்கு பத்ம பூஷண் விருது கிடைத்துள்ளது 
 1. அசோக் லட்சுமண் ராவ் குகடே
 2. கரிய முண்டா
 3. புத்ததிய முகர்ஜி 
 4. மோகன்லால் விஸ்வநாதன் நாயர் (மலையாள நடிகர்) 
 5. நம்பி நாராயணன் 
 6. குல்தீப் நய்யார் 
 7. பச்சேந்திரி பால் 
 8. வி.கே சுங்லு 
 9. ஹுக்கும்தேவ் நாராயண் யாதவ் 
 10. ஜான் சேம்பர்ஸ் 
 11. சுக்தேவ் சிங் தின்ட்சா 
 12. பிரவீண் கோர்தன் 
 13. மகசாய் தரம் பால் குலாத்தி 
 14. தர்ஷன் லால் ஜெயின் 


இவர்கள் தவிர 94 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் முக்கியமானவர்கள்
சுனில் சேட்ரி, நடிகர் பிரபுதேவா, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன்,

Friday, January 25, 2019

வந்தா 2 கிட்னியோட வா, கட்டிக்கலாம்.. கறார் காதலன்.. அதிர்ச்சி அடைந்த காதலி..

"2 கிட்னியோடு வந்தால்தான் கல்யாணம்" என்று கறாராக காதலன் சொல்லி விட்டதால் போலீசில் புகார் அளித்துள்ளார் இளம்பெண். 


சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் நித்யா. இவருக்கு வயது 32. நித்யாவுக்கு ஒரே ஒரு கிட்னிதான் உள்ளது. பிறவியிலேயே இந்த குறை இருந்தாலும் நித்யாவுக்கு 4 வருடத்திற்கு முன்புதான் வீட்டில் இந்த உண்மையை சொல்லி உள்ளார்கள். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இந்தநிலையில், இரண்டு வருடத்திற்கு முன்பு விக்னேஷ் என்ற 29 வயது நபர் நித்யாவுக்கு அறிமுகமாகி உள்ளார். நாளடைவில் நித்யாவை அவருக்கு பிடித்து போக கல்யாணம் செய்துகொள்வதாக வந்து சொல்லி இருக்கிறார்.


ஒரே ஒரு கிட்னி 

ஆனால் விக்னேஷ் வயதில் சிறியவர் என்பதால் இதற்கு நித்யா மறுத்துள்ளார். எனினும் வற்புறுத்தியதால் அவரது காதலை ஏற்றுள்ளார். அப்போது தனக்கு வலது பக்கத்தில் மட்டும் கிட்னி இருப்பதாகவும், இது தனக்கு பிறவி குறை என்றும் கூறினார்.


குடும்ப செலவு  

இதையடுத்து கடந்த வருடம் இரு வீட்டிலும் காதலை சொன்னதன் பேரில், பெற்றோர்களும் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடத்தினார்கள். ஆனால் நித்யாவின் தந்தை எதிர்பாராத விதமாக உயிரிழந்து விட்டதால் செலவு குடும்பத்தை நெருக்கி உள்ளது.


20 சவரன் நகை  

இந்தநிலையில் விக்னேஷ் வீட்டில் ஏற்கனவே போட்ட நகை இல்லாமல் மேலும் 20 சவரன் நகை அதிகமாக வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு பெண் வீட்டில் மறுப்பு சொன்னதாகவும் தெரிகிறது. பிரச்சனை இங்கிருந்துதான் வெடித்துள்ளது. இப்போது நிச்சயமான நிலையில், இரண்டு கிட்னியோடு வந்தால்தான் என்று விக்கேஷ் சொல்லுகிறாராம்.இரண்டு கிட்னி  

இதனால் விரக்தி அடைந்த நித்யா, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த விவரங்களை சொல்லி புகார் அளித்திருக்கிறார். நிச்சயமான நிலையில் விக்னேஷுடன் நெருங்கி பழகினேன் என்றும், இப்போது கிட்னியை காரணம் காட்டி வேண்டாம் என்பதால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.