வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருக்கழுக்குன்றத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்த தெரு கூத்து நிகழ்ச்சி | Corona Awareness program in Thirukazhukundram
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, April 28, 2020

திருக்கழுக்குன்றத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்த தெரு கூத்து நிகழ்ச்சி | Corona Awareness program in Thirukazhukundram

கொரோனா நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட எம்.ஜி ஆர் சிலையருகேயும் , மார்க்கெட் பகுதியிலும் 26.04.2020 அன்று காலை 10.00 மணியளவில் கொரோனா விழிப்புணர்வு தெரு கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது.காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் ஏற்பாட்டில் திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனிசேகர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


ஜம்பேரி கிராமம் ஓம் ஸ்ரீ மாதா கன்னீகா பரமேஸ்வரி கலை நிகழ்ச்சி நாடக சபா குழவினர் மூலம் நடைப்பெற்ற இந்த தெரு கூத்து நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்தும் தனித்திரு விலகியிரு வீட்டில் இரு என அறிவுறுத்தியும் கலை நிகழ்ச்சியினர் ஆடி பாடியும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர் போல் வேடமணிந்தும்.
நோய் தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும் முகக் கவசங்கள் அணிந்தும் நிகழ்ச்சியை  பார்வையிட்டனர். தெரு கூத்து களைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளாக அரிசி காய்கறி உள்ளிட்டவைகளை மாவட்ட செயலாளர் எஸ் ஆறுமுகம் வழங்கினார்.


இதில் முன்னால் பேரூராட்சி மன்ற உறுப்பினர் அருள்பிரகாஷ், ஒன்றிய விவசாய அணி செயலாளர் மாம்பாக்கம் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

No comments:

Post a Comment