வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கிய கொரோனா நிவாரண உதவிகள் | Pattipulam Congress Persons Giving Corona Relief
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, April 28, 2020

மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கிய கொரோனா நிவாரண உதவிகள் | Pattipulam Congress Persons Giving Corona Relief

144 தடை உத்தரவால் வீட்டுக்குள்ளேயே வருமானம் இன்றி முடங்கி கிடக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு தரப்பினர் நிவாரணப்பொருள் வழங்கி வருகின்றனர். 


இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் சுமார் 1500 குடும்பங்களுக்கு 3 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. 


இதில் கலந்து கொண்டு இருளர் இன மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி துவக்கி வைத்த காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் பெ.விஸ்வநாதன் தமிழக அரசால் வழங்கப்பட்ட 1000 ரூபாய் நிவாரண தொகை அவர்களுக்கு போதுமானதாக இல்லை. 

எனவே அதனை உயர்த்தி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5000 ரூபாய் வழங்கிடவேண்டும் எனவும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் போர்க்கால அடிப்படையில் கொரோனாவை ஒழிக்க மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

நிகழ்வில் சிவராமன் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிவராமன், திருப்போரூர் வட்டார மீனவரணி தலைவர் தனசேகர், திருப்போரூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர். பன்னீர்செல்வம் ஆகியோருடன் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment